நுண்கலைகள் கழகம், கொல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்கலைகள் கழகம்
Academy of Fine Arts
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
சூலை 2010 இல் நுண்கலைகள் கழகத்தில் நடைபெற்ற கண்காட்சி
சூலை 2010 இல் நுண்கலைகள் கழகத்தில் நடைபெற்ற கண்காட்சி
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைசெயல்படுகிறது
இடம்கதீட்ரல் சாலை, கொல்கத்தா
முகவரி2, கதீட்ரல் சாலை, கொல்கத்தா 700 071[1]
திறக்கப்பட்டது1933

நுண்கலைகள் கழகம், கொல்கத்தா (Academy of Fine Arts) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள மிகப்பழமையான நுண்கலைக் கழகங்களில் ஒன்றாகும்.[2]

கொல்கத்தா நுண்கலைகள் கழகத்தின் நுழைவு வாயில்

வரலாறு[தொகு]

இக்கழகம் 1933[2][3] ஆம் ஆண்டு திருமதி ராணுமுகர்சியால்[4] நிறுவப்பட்டது. முதலில் இந்திய அருங்காட்சியகம் வழங்கிய ஒரு அறையில் செயற்படத் தொடங்கிய இக்கழகம் தன்னுடைய ஆண்டுக் கண்காட்சிகளை அருகில் அமைந்திருந்த நீண்ட தாழ்வாரத்தில் நடத்தியது.

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றிய பிதான் சந்திர ராய், திருமதி ராணுமுகர்சியின் முயற்சிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். அப்போது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த சவகர்லால் நேரு அவர்களும் முகர்சியின் முயற்சிகளைப் பாராட்டினார். செயிண்ட் பால் மறைமாவட்டப் பேராலயம் அருகிலுள்ள கதீட்ரல் சாலையில் உள்ள சற்றுப்பெரிய, தற்போது இருக்கும் இடத்திற்கு நுண்கலைகள் கழகம் இடம் பெயர்ந்தது. ருச்சி மோடி மற்றும் கலைஞர் சுவப்னேசு சவுத்ரி போன்ற பிரமுகர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஓவியர் நாபாகிசோர் சந்தா நுண்கலை கழகத்தின் நிர்வாக உறுப்பினராக பதவிவகித்தார்.

ககனேந்திரநாத் தாகூரின் சாத்பாய் சம்பா, யாமினிராயின் சிவனுடன் கணேசன் போன்ற சில பிரபலமான ஓவியங்கள் இங்கு இருக்கின்றன.[3]

நாடக அரங்கம்[தொகு]

நுண்கலைகள் கழகத்தில் நடைபெற்ற ஓவியர் யாகர் தாசுகுப்தா வின் கண்காட்சி துவக்க விழாவில் ருச்சி மோடி

கொல்கத்தா நகரத்தின் நடனமாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடும் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக நுண்கலைகள் கழகம் அமைந்திருக்கும் நாடக அரங்கம் திகழ்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல், வருடாந்தர அரங்க விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dilip Kumar Roy (1 January 2006). Museology: Some Cute Points. Gyan Books. பக். 155–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-410-1. http://books.google.com/books?id=V5-uTRdgXNIC&pg=PA155. பார்த்த நாள்: 28 August 2012. 
  2. 2.0 2.1 "Academy of Fine Arts". kolkata.org.uk (website). பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  3. 3.0 3.1 3.2 Swati Mitra (2011). Kolkata: City Guide. Goodearth Publications. பக். 66–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80262-15-4. http://books.google.com/books?id=eUq9heKpjEIC&pg=PA66. பார்த்த நாள்: 28 August 2012. 
  4. "Academy of Fine Arts". Click India. Archived from the original on 16 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Academy of Fine Arts, Kolkata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.