நுணுக்குக்காட்டி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நுணுக்குக்காட்டி இதழ் இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து 1995ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் புரட்டாசி 1995ல் வெளிவந்தது.

வெளியீடு[தொகு]

  • தமிழ்த்தாய் வெளியீடு

நோக்கம்[தொகு]

தமிழ் மக்களின் அரசியல், போராட்ட, வரலாற்று நிகழ்வுகள், அவை பற்றிய பல்வேறுபட்டவரின் கருத்துகள் என்பவற்றை இந்த மாத வெளியீடு பதிவுசெய்ய முனைந்தது. அரசியல் அறிவை வளர்க்க விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் ஆகியோருக்கு இலகு உசாத்துணையாக இதன் பதிவுகள் அமைய வழிசெய்வதே இவ்விதழின் வெளியீட்டின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் பல்வேறு அறிஞர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகைகள் ஆகியன தமிழீழப் போராட்டம் குறித்து முன்வைத்த கருத்துக்களை இவ்விதழ் முழுமையாக துணுக்குகளாக வெளியிட்டிருந்தது.