நுட்பம் - கவிதை இணைய இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுட்பம் - கவிதை இணைய இதழ்
Nutpam
தோற்றுவித்தவர்இரா.சந்தோஷ் குமார்
வெளியீடுமார்ச் 21 -2022
உரலிhttps://nutpam.site/


நுட்பம் எனும் பெயரில் கவிதை இணைய இதழ் உலக கவிதை தினமான மார்ச் 21ம் தேதி, 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கவிதைகளுக்கும் கவிதைச் சார்ந்த பதிவுகளுக்குமான இணையதளமாக செயல்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் கவிதை எழுதுவோருக்கான ஒரு களமாகவும், கவிதையின் பல்வேறு பரிணாமங்களை முயற்சிக்கும் கவிஞர்களுக்கான களமாகவும் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இரா.சந்தோஷ் குமார் என்பவரால் தொடங்கப்பட்டது. தமிழ் கவிதைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும் கவிதைகளோடு, கவிதைச் சார்ந்த கட்டுரைகள், கவிதைத் தொகுப்பு குறித்தான விமர்சனங்கள், கவிஞர்கள் உடனான உரையாடல்கள் ஆகியவை வெளியாகின்றன. உரையாடல் பகுதியில் கவிஞர்கள் முதன் முதலாக வெளியிட்ட நூல், கவிஞர்களின் முதல் கவிதை பிரசுமான விபரம், உள்ளிட்ட கேள்விகளோடு ஒரு புதுமையான குறு நேர்காணலாக “முதன் முதலாக” எனும் தலைப்பின் கீழ் தொடர்ந்து வெளியாகிறது. நுட்பம் - பாட்கேஸ்ட் (Nutpam - Podcast) மூலமாக நுட்பம் இணையதளத்தில் வெளியாகும் கவிதைகள் ஒலி வடிவத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கவிதைகளை கேட்டுக்கொண்டே வாசிக்க இயலும். மார்ச் 21 - 2024 வரையிலும் முப்பது இதழ்கள் வெளியாகி உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுட்பம்_-_கவிதை_இணைய_இதழ்&oldid=3927220" இலிருந்து மீள்விக்கப்பட்டது