நுட்பம் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமையத்தின் சின்னம்

இலங்கையினை, குறிப்பாக இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய நுட்பம் - இலங்கைத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையம் 15-5-2011 இல் உருவாக்கப்பட்டது. இலாபநோக்கற்ற அமைப்பாக இயங்கி தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல், தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் மொழியின் ஊடாக தமிழ் மக்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வழிசமைத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் எனும் நோக்கில் இவ்வமையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர்களினால் உறுப்பினர் சபையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 9 போ் கொண்ட இயக்குனர்சபை அமையத்தினை வழிநடாத்தும்.

அமையத்தின் வண்ணங்களாக நீலம் சிவப்பு மஞ்சள் ஆகிய மூன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.


பணிகள்[தொகு]

  1. தமிழ் மின் உள்ளடக்கங்களினை, தமிழ் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை ஒருங்கிணைத்தல்
  1. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கு தர வரிசை வழங்குதல்
  1. தமிழ் தகவல் தொழில்நுட்ப செந்தரங்களில் சிபார்சுகளை வழங்குதல்
  1. நாடெங்கிலும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்குகள் பயிலரங்குகளை நடாத்துதல்
  1. மக்களுக்கும் மாணவருக்கும் தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல்
  1. அரச தனியார் நிறுவனங்களுக்கு ஆலோனைகள் வழங்கல்
  1. தமிழ் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வுகளை ஊக்குவித்தலும் வருடாந்த மாநாடு நடாத்துதலும்
  1. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தமிழ் மொழி ஒர் தடையில்லை என்பதை உறுதிப்படுத்தல்
  1. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வெளியீடுகளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல்
  1. தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் மொழியை வளர்த்தல்

இணைப்புகள்[தொகு]

[[பகுப்பு::தமிழ்க் கணிமை அமைப்புகள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுட்பம்_இலங்கை&oldid=3436198" இருந்து மீள்விக்கப்பட்டது