நுசுட்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுசுட்டைட்டு
Nsutite
Wad - Hollerter Zug, Siegerland.jpg
மண்கலந்த மாங்கனீசு மடிப்பு
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுMn4+1−xMn2+xO2-2x(OH)2x where x = 0.06-0.07
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணப் படிகத்திட்டம்
அறியப்படாத இடக்குழு
மேற்கோள்கள்[1][2][3]

நுசுடைட்டு (Nsutite ) என்பது (Mn4+1−xMn2+xO2-2x(OH)2x இங்கு x = 0.06-0.07) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் [3]. பெரும்பாலும் மாங்கனீசு படிவுகளில் நுசுடைட்டு காணப்படுகிறது. கானா நாட்டிலுள்ள ஒரு சிறிய நகரமான நுசுட்டாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காணப்படுவது அறியப்பட்டது. மந்தமான இக்கனிமம் 6.5-8.5 என்ற மோவின் அளவுகோல் கடினத்தன்மையும், 4.5 என்ற சராசரி ஒப்படர்த்தி மதிப்பும் பெற்றுள்ளது. துத்தநாக-கார்பன் மின்கலன்களில் எதிர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் செயற்கை மாங்கனீசு படிப்படியாக நுசுடைட்டு கனிமத்தை இடப்பெயர்ச்சி செய்து வருகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுசுட்டைட்டு&oldid=2810716" இருந்து மீள்விக்கப்பட்டது