நுசா பெனிடா
| உள்ளூர் பெயர்: ᬦᬸᬲᬧᭂᬦᬶᬤ (nusa pĕnida) | |
|---|---|
உடைந்த கடற்கரை (மேலே) கெலிங்கிங் கடற்கரை (அடியில்) | |
| புவியியல் | |
| அமைவிடம் | தென்கிழக்காசியா |
| ஆள்கூறுகள் | 8°44′0″S 115°32′0″E / 8.73333°S 115.53333°E |
| தீவுக்கூட்டம் | சிறு சுண்டாத் தீவுகள் |
| பரப்பளவு | 202.84 km2 (78.32 sq mi) |
| உயர்ந்த ஏற்றம் | 524 m (1,719 ft) |
| நிர்வாகம் | |
இந்தோனேசியா | |
| மாகாணம் | பாலி |
| பிராந்தியம் | குலுங்குங் |
| நுசா பெனிடா | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 63,900 |
| அடர்த்தி | 315 /km2 (816 /sq mi) |

நுசா பெனிடா (பாலினிய மொழி: ᬦᬸᬲᬧᭂᬦᬶᬤ|nusa pĕnida) என்பது தென்கிழக்கு இந்தோனேசிய தீவான பாலிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது குலுங்குங் பிராந்தியத்தில் அதே பெயரிலான ஒரு மாவட்டமாக உள்ளது. படுங் நீரிணை இந்தத் தீவையும் பாலியையும் பிரிக்கிறது. நுசா பெனிடாவின் உட்புறம் மலைப்பாங்கானதாகும். அதிகபட்சமாக 524 மீட்டர் உயரம் கொண்டது. காலநிலையானது பாலியை விட வறண்டது. பாலியைப் போலவே, இதுவும் ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகும்.
நுசா பெனிடா நிருவாக மாவட்டமானது நுசா பெனிடாவுடன் அருகிலுள்ள நுசா லெம்பொங்கன், நுசா செனிங்கன் தீவுகளும், மேலும் பதினொரு சிறிய தீவுகளையும் உள்ளடங்கியுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 45,110 ஆக இருந்தது, இது 202.84 கிமீ 2 பரப்பளவைக் கொண்டது. [1] மேலும் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிகாரப்பூர்வ மக்கள் தொகை மதிப்பீடு 63,900 ஆகும்.
மொழி
[தொகு]நுசா பெனிடா மக்கள் நுசா பெனிடா பாலினிய மொழி ( பாசா நோசா ) என்று அழைக்கப்படும் பாலினிய மொழியின் தனித்துவமான பேச்சுவழக்கைக் கொண்டுள்ளனர். இது பாலி நிலப்பகுதியைச் சேர்ந்த மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது பாலியின் பழங்குடி மக்களான பாலி அகாவின் மொழிக்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. [2]
பாலி பறவைகள் சரணாலயம்
[தொகு]நுசா பெனிடா, அண்டையில் உள்ள லெம்பொங்கன், செனிங்கன் தீவுகளைக் கொண்ட பறவைகள் சரணாலயத்தைக் கொண்டுள்ளது. தீவு சமூகங்கள் சரணாலயத்தை உருவாக்க பாரம்பரிய பாலினிய கிராம விதிமுறைகளைப் பயன்படுத்தியுள்ளன. சரணாலயம் என்ற யோசனை தேசிய பூங்காக்களின் நண்பர்கள் அறக்கட்டளையிடமிருந்து (FNPF) வந்தது.
2006 ஆம் ஆண்டில், 35 கிராமங்களும் (இப்போது 41 கிராமங்கள்) பறவை பாதுகாப்பை தங்கள் பாரம்பரிய விதிமுறைகளின் ( Balinese: ᬳᬯᬶᬕ᭄ᬳᬯᬶᬕ᭄, romanized: awig-awig ) ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டன. அப்போதிருந்து, தேசிய பூங்காக்களின் நண்பர்கள் அறக்கட்டளை பல்வேறு இந்தோனேசிய பறவைகளுக்கு மறுவாழ்வு அளித்து விடுவித்துள்ளது. குறிப்பாக 2005 இல் காடுகளில் 10 க்கும் குறைவாகன எண்ணிக்கையாக குறைந்துவிட்ட, மிக அருகிய இனமான பாலிக்கு மட்டுமே சொந்தமான பாலி மைனா, இதில் அடங்கும். தேசிய பூங்காக்களின் நண்பர்கள் அறக்கட்டளையின் இரண்டு ஆண்டு திட்டத்திற்குப் பிறகு, 64 பாலி மைனா கூண்டுப் பறவைகள் மறுவாழ்வு அளிக்கபட்டு நுசா பெனிடாவில் விடப்பட்டன. 2009 இல் அவற்றின் எண்ணிக்கை 100 இக்கும் அதிகமாக அதிகரித்தன. நுசா பெனிடாவில் விடுவிக்கப்பட்ட பிற பறவைகளில் ஜாவா குருவி, மிட்செல்ஸ் லோரிகீட், மஞ்சள்கொண்டை கிளி ஆகியவை அடங்கும்.

காணத்தக்க இடங்கள்
[தொகு]நுசா பெனிடாவில் உள்ள சுவாரஸ்யமான இடங்கள் பின்வருமாறு:
- கெலிங்கிங் கடற்கரை
- உடைந்த கடற்கரை
- ஏஞ்சல் பில்லாபோங்
- கிரிஸ்டல் விரிகுடா
- அது கடற்கரை
- வைர கடற்கரை
- சுவேகான் கடற்கரை
- பெகுயங்கன் அருவி
- டெம்பலிங் காடு
- செகனிங் அருவி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nusa Penida (Eiseman, 1986)".
- ↑ .co/2020/05/17/basa-nosa-language-bali-dialek-nusa-penida-yang-similar-dialek-bali-aga/ ""Basa Nosa", the Balinese dialect of Nusa Penida which is similar to the Bali Aga dialect?" (in இந்தோனேஷியன்). I Ketut Serawan. 17 May 2020. Retrieved 4 July 2022.
{{cite web}}: Check|url=value (help)