உள்ளடக்கத்துக்குச் செல்

நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 08°44′53″S 115°10′03″E / 8.74806°S 115.16750°E / -8.74806; 115.16750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுகுரா ராய் வானூர்தி நிலையம்
I Gusti Ngurah Rai International Airport

Bandar Udara Internasional I Gusti Ngurah Rai
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது / இராணுவம்
இயக்குனர்அங்காசா புரா I
சேவை புரிவதுதென்பசார்
அமைவிடம்துபான், கூத்தா மாவட்டம், பாடுங் பிராந்தியம், பாலி, இந்தோனேசியா
திறக்கப்பட்டது1931; 94 ஆண்டுகளுக்கு முன்னர் (1931)
மையம்
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8 (08:00)
உயரம் AMSL4 m / 14 ft
ஆள்கூறுகள்08°44′53″S 115°10′03″E / 8.74806°S 115.16750°E / -8.74806; 115.16750
இணையத்தளம்www.bali-airport.com
நிலப்படங்கள்
Map
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 3,000 9,843 நிலக்கீல் பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2018)
பயணிகள் போக்குவரத்து23,779,178 (Increase 13.0%)
வானூர்தி போக்குவரத்து162,623 (Increase 11.1%)

நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது தென்பசார் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: DPSஐசிஏஓ: WADD); (ஆங்கிலம்: Ngurah Rai International Airport; Denpasar International Airport (DPS); இந்தோனேசியம்: (Bandar Udara Internasional I Gusti Ngurah Rai) என்பது இந்தோனேசியா, பாலி, கூத்தா மாவட்டம், பாடுங் பிராந்தியம் (Badung Regency), தென்பசார் மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

இந்த நிலையம் தென்பசார் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று பரவலாக அறியப்படுகிறது. தென்பசார் நகர மையத்திலிருந்து 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், தென்பசார் பெருநகரப் பகுதிக்கும் பாலி தீவு முழுவதற்கும் சேவை செய்கிறது. இந்தோனேசியாவில் சுகார்னோ–அத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குப் பிறகு இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக நுகுரா ராய் நிலையம் விளங்குகிறது.

ஆசியாவின் மிகவும் பிரபலமான தீவுச் சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் நுகுரா ராய் வானூர்தி நிலையம். 2018-ஆம் ஆண்டில், 23,779,178 பயணிகளுக்குச் சேவை செய்தது.[1]

பொது

[தொகு]

மிக அண்மைய காலத்தில் நுகுரா ராய் வானூர்தி நிலையத்தில் புதிய மேம்பாடுகள் காணப்பட்டு உள்ளன. அவை பாலியின் புகழைப் பன்னாட்டு அளவில் அதிகரிக்கச் செய்துள்ளன; அத்துடன் ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும், உலகளாவிய நிலையில் நன்கு அறியப்பட்ட நிலையமாகவும் அறியச் செய்யப்பட்டுள்ளன.

இந்த வானூர்தி நிலையம் IX வகையைச் சேர்ந்தது; மற்றும் போயிங் 747-8 மற்றும் ஏர்பஸ் ஏ380 உள்ளிட்ட அகலமான அமைப்பைக் கொண்ட வானூர்திகளுக்குச் சேவை செய்யும் திறன் கொண்டது.[2] 2016-ஆம் ஆண்டில், பன்னாட்டு வானூர்தி மன்றம் (Airport Council International), நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு, உலகின் மூன்றாவது சிறந்த வானூர்தி நிலையமாக விருது வழங்கியது. ஒவ்வோர் ஆண்டும் 15-25 மில்லியன் பயணிகளுக்குச் சேவை செய்த சிறப்புத் தனமைக்காக அந்த விருது வழங்கப்பட்டது.[3]

பெயர்

[தொகு]

இந்த வானூர்தி நிலையத்திற்கு ஐ குஸ்தி நுகுரா ரா (I Gusti Ngurah Rai) என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. ஐ குஸ்தி நுகுரா ரா 1946 நவம்பர் 20 அன்று தபானான் பிராந்தியத்தில் (Tabanan Regency) உள்ள மார்கா எனும் இடத்தில் இடச்சுக்காரர்களுக்கு எதிரான பூபுத்தான் (சாகும் வரை போராடுதல்) போரில் இறந்த பாலினிய வீரர் ஆவார்.

இடச்சுக்காரர்கள் ஐ குஸ்தி நுகுரா ரா; மற்றும் அவரின் போராட்ட வீரர்களை வானூர்தி ஆதரவுடன் தோற்கடித்தனர். பின்னர் 1946-இல் இந்தோனேசிய தேசியப் புரட்சியின் போது இடச்சுக்காரர்கள் ஐ குஸ்டி நுகுரா ராயையும்; மேலும் 95 பேரையும் கொன்றனர்[4]

வரலாறு

[தொகு]
1949-இல் கூத்தா வானூர்தி நிலையம்
1980-இல் நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இந்த வானூர்தி நிலையத்தின் முன்னாள் பெயர் பெலாபோகான் உடாரா துபான் (Pelabuhan Udara Tuban). இது 1931-ஆம் ஆண்டு பாலியின் தெற்கு கடற்கரையில், மிகக் குறுகிய இடத்தில் நிறுவப்பட்ட ஒரு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் முதலில் இடச்சு குடியேற்றவிய நிர்வாகத்தின் (Voor Verkeer en Waterstaats) பொதுப்பணி துறையால் 700 மீ நீளமுள்ள ஓர் எளிய வானூர்தி ஓடுபாதையாகக் கட்டப்பட்டது.[5] முதன்முதலில் நிறுவப்பட்டபோது, ​​அந்த இடத்தில் ஒரு சில குடிசைகளும் ஒரு குறுகிய ஓடுபாதையும் மட்டுமே இருந்தன. ஓடுபாதையில் புறகளும் செடி கொடிகளும் மட்டுமே இருந்தன.

1942-ஆம் ஆண்டில், போர் மற்றும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த வானூர்தி ஓடுபாதை பயன்பாட்டில் இருந்தது. மேலும் சப்பானியப் படைகளிடமிருந்து குண்டுவீச்சு தாக்குதலையும் எதிர்நோக்கியது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய ஆயுதப் படைகள் பாலியை ஆக்கிரமித்தன, பிப்ரவரி 19, 1942 அன்று வானூர்தி நிலையத்தைக் கைப்பற்றின.[6] சப்பானியர்கள் பாலி தீவை ஆக்கிரமித்தவுடன், இடச்சு தலைமையிலான 600 பாலினிய போராளிகளைக் கொண்ட ஒரு படை அந்த வானூர்தி நிலையத்தில் இருந்துஉடனடியாக வெளியேறியது.[7]

சப்பானியர்களின் ஆக்கிரமிப்புக் காலத்தில், வானூர்தி நிலைய ஓடுபாதையில் மேம்பாடுகள் செய்யப்பட்டன. 1942 முதல் 1947 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ஓடுபாதையின் நீளம் 700 மீட்டரிலிருந்து 1,200 மீட்டராக நீட்டிக்கப்பட்டது.[6] சப்பானியர்களை இடச்சு காலனித்துவ அதிகாரிகளிடமிருந்து விடுவிப்பவர்களாக பாலினியர்கள் பலர் அடையாளம் கண்டனர்.

போருக்குப் பின்

[தொகு]
நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கருட வாகனச் சிலை (2015)

1959-ஆம் ஆண்டில் அதிபர் சுகார்னோ வானூர்தி ஓடுபாதையை மேலும் மேம்படுத்தினார். புதிய வசதிகள் அமெரிக்க டாலர் $ 13 மில்லியன் (1959 இல் ரூப்பியா 35 பில்லியன்) புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன.[5] தற்போதைய ஓடுபாதையின் நீளம் 2700 மீட்டர் ஆகும். 1969-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போதைய நிலை

[தொகு]

2000-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையம் 43,797 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வானூர்திச் செயல்பாடுகளைப் பதிவு செய்தது; அவற்றில் 4,443,856 பயணிகள் பயணம் செய்துள்ளனர். [5] ஏப்ரல் 2011 இறுதிக்குள், வானூர்தி நிலையத்தின் முனையங்கள் ஆண்டுக்கு 11.1 மில்லியன் பயணிகளைக் கையாண்டன. அந்த வகையில் அதன் 8 மில்லியன் பயணிகள் இலக்கையும் தாண்டியது.[8]

ஆண்டுதோறும் சுமார் 12 முதல் 15 விழுக்காட்டுப் பயணிகள் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.[9] 2017-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 20 மில்லியன் பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.[10]

புள்ளி விவரங்கள்

[தொகு]
நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையப் பயணிகள் (மில்லியன்)
சான்று: நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலைய பயணிகள் 2019-2024[11]

பின்வரும் அட்டவணை மொத்த பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

ஆண்டு பயணிகள்
2008 8,470,566
2009 9,621,714
2010 11,120,171
2011 12,771,874
2012 14,188,694
2013 15,630,839
2014 17,271,415
2015 17,108,387
2016 19,986,415
2017 21,052,592
2018 23,779,178
2019 24,168,133
2020 6,236,713
2021 3,778,807
2022 12,523,546
2023 21,451,411

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mutia Ramadhani (January 5, 2018). "Penumpang Ngurah Rai Melonjak 13 Persen Sepanjang 2018".
  2. "Taksi Membawa Penumpang Terbakar di Tol Bali Mandara". September 25, 2015.
  3. Dewa Wiguna (February 26, 2017). "Ngurah Rai Goes Named Top Three Airports with Best Service".
  4. Pringle, p 161
  5. 5.0 5.1 Ngurah Rai airport to get multi-million-dollar face-lift, Wasti Atmodjo and Rita A.Widiadana, The Jakarta Post, Denpasar, 9 June 2010, accessed 11 October 2010
  6. 6.0 6.1 Airport history பரணிடப்பட்டது 27 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம், accessed 11 October 2010
  7. Fire in the Night:The loss of Bali and Timor, accessed 11 October 2010
  8. Airport history, 1930–2010 பரணிடப்பட்டது 27 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம், accessed 11 October 2010
  9. "Bali airport expansion to be completed by end of June". 19 April 2014.
  10. "Welcome to Bali". 18 September 2014.
  11. "Number of monthly international air passengers at Ngurah Rai Airport (DPS) in Bali, Indonesia from January 2019 to February 2024". Statista. Retrieved 1 March 2025.

நூல்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  • Picard, Kunang Helmi (1995) Artifacts and Early Foreign Influences. From Oey, Eric, ed. (1995). Bali. Singapore: Periplus Editions. pp. 130–133. ISBN 962-593-028-0.

வெளி இணைப்புகள்

[தொகு]