உள்ளடக்கத்துக்குச் செல்

நுகலா இராமச்சந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகலா இராமச்சந்திர ரெட்டி (Nukala Ramachandra Reddy) தெலுங்கானாவின் பிரபலமான அரசியல்வாதி ஆவார்.

நுகலா இராமச்சந்திர ரெட்டி

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நுகலா இராமச்சந்திரா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள மகபூபாபாத்திலிருந்து (முன்பு மனுகோட்டா என அழைக்கப்பட்டது) 4 கி.மீ. தொலைவில் உள்ள ஜமண்டலபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். நுகல ரங்கசாய் ரெட்டி மற்றும் ருக்மணி தேவியின் மகனாகப் பிறந்த இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள டோர்னகல் தொகுதியிலிருந்து 1957, 1962, 1967 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1972ல் போட்டியின்றி வெற்றி பெற்றார். இவர் நான்கு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2]. 1960-ல், தாமோதரம் சஞ்சீவய்யா அமைச்சரவையில் உணவு, வேளாண்மை, தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்த அமைச்சராகப் பதவியேற்றார். 1962-ல் அவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அமைச்சரவையில் வருவாய் மற்றும் நில சீர்திருத்த அமைச்சராக சேர்ந்தார். ஏப்ரல் 27, 1964-ல் நிர்வாக சீர்திருத்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1964 முதல் 1967 வரை, காசு பிரம்மானந்த ரெட்டி அமைச்சரவையில் வருவாய் நிலச் சீர்திருத்த அமைச்சராகப் பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டு ஜலகம் வெங்கலராவ் அமைச்சரவையில் நிதி மற்றும் வணிக வரி அமைச்சராக சேர்ந்தார்.[3].

இறப்பு

[தொகு]

நுகலா ராமச்சந்திர ரெட்டி சூலை 27, 1974 அன்று தனது 55வது வயதில் மாரடைப்பால் காலமானார்.[4] மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி அப்போதைய ஆந்திர மாநில அரசு இவருக்கு இறுதிச் சடங்கு நடத்தியது.

இணைப்புகள்

[தொகு]
  1. 1957 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் (66)
  2. 1962 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் (276)
  3. 1967 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் (259)
  4. 1972 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் (259)*

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ఆర్కైవ్ నకలు". Archived from the original on 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  2. https://epaper.ntnews.com/Home/ShareArticle?OrgId=475664ea&imageview=1
  3. https://epaper.ntnews.com/home/index?date=02/07/2020&eid=1&pid=173745
  4. https://epaper.ntnews.com/Home/ShareArticle?OrgId=475664ea&imageview=1