உள்ளடக்கத்துக்குச் செல்

நுகர்வோர் குறைதீர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இது போன்ற நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்டோர் தமது மனுவினை பதிவுத் தபாலில் அனுப்பினால் கூடப்போதுமானது. நீதிமன்றத்திற்கு அவரோ அல்லது அவரது சார்பில் வேறு ஒருவரோ வந்தால் போதும். வழக்கறிஞர்கள் தேவை என்றால் வைத்துக்கொள்ளலாம். நீதிமன்றம் போன்று நீண்ட நடைமுறைகள் ஏதும் இல்லை. எதிர் தரப்பிற்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நீதிமன்ற கட்டணமாக ரூ.100/ ரூபயும், அதிக பட்சமாக ரூ.5000/-ரூபயும் செலுத்த வேண்டும். நுகர்வோர் தான் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அகில இந்திய அளவில் உள்ள தேசிய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் மேல்முறையீடுகள் செய்யலாம்.