நீ எந்தன் வானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ எந்தன் வானம்
இயக்கம்ஆர். கே. சுரேஷ் 
தயாரிப்புசன்ரைஸ் என்டர்டெயினர்ஸ் 
இசைசங்கீதராஜன் 
நடிப்புவிக்னேஷ்
ரேஷ்மா
வடிவேலு
சரண்ராஜ்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ எந்தன் வானம் 2000 இல் ஆர். கே. சுரேஷ் இயக்கி வெளிவந்த்து. இதில் விக்னேஷ், ரேஷ்மா, சரண்ராஜ், வடிவேலு, ராக்கி டெலிபோன் சத்யநாராயணன், பாஸ்கர், குமரிமுத்து மற்றும் ஓமக்குச்சி நரசிம்மன் போன்றோர் நடித்துள்ளனர். என். பாபு மற்றும் வி. உதயகுமார் இருவரும் தயாரித்துள்ளனர். இசை எஸ். பி. வெங்கடேஷ்[1][2]

கதை[தொகு]

இந்த படம், மூன்று பயங்கரவாதிகள் அரசாங்க வாகனத்தில் வரும் பணத்தை திருடுவதில் ஆரம்பமாகின்றது. இந்த நடவடிக்கையில் அவர்கள் வாகனத்தில் வந்த காவல் அதிகாரிகளை கொலை செய்கின்றனர். மூன்று குற்றவாளிகளையும் பிடித்து தருபவருக்கு பண வெகுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவிக்கின்றனர். பயங்கரவாத குழுவின் தலைவரான பிரகாஷ் (ராக்கி), தனது கூட்டாளிகளான சிவா மற்றும் குணாவுடன் பசுமலை காட்டில் மறைந்துள்ளான் நம்பகமான ஆதாரத்துடன், சத்யா (விக்னேஷ்) மற்றும் அலெக்ஸ் பாண்டியன் (சரண்ராஜ்) ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் காட்டில் முகாமிட்டுள்ளனர். சத்யா ஒரு நேர்மையான மற்றும் அமைதியான காவல் ஆய்வாளர் ஆவார், அலெக்ஸ் பாண்டியன் ஒரு அதற்கு நேர்மாறானவர் . பசுமலை காட்டில், ஒரு சிறிய பழங்குடி குழு வசித்து வருகிறது அவர்கள் காவல் துறையினரை மரியாதையுடன் வரவேற்கின்றனர்.

பின்னர், சத்யா பழங்குடி பெண் மீனுவுடன் காதலில் விழுகிறார், இதற்கிடையில், பழங்குடி பெண்கள் இரவு நேரங்களில் அடிக்கடி கொலை செய்யப்படுகிறார்கள். இதை அலெக்ஸ் பாண்டியன் செய்திருப்பதாக சத்யா முதலில் சந்தேகிக்கிறான். பின்னன், சத்யா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய இருவரும் சேர்ந்து மூன்று பயங்கரவாதிகள் மற்றும் கொலையாளியை தீபனை எவ்வாறு கைது செய்கிறார்கள் என்பதுதான் மீதமுள்ள கதை.

நடிகர்கள்[தொகு]

சுந்தராக விக்னேஷ்
சத்யாவாக ரேஷ்மா
அலெக்ஸ் பாண்டியாக சரண்ராஜ்
ஓட்டை ஒடைசலாக வடிவேலு
பிரகாஷாக ராக்கி
தீபனாக பாஸ்கர்
குமரிமுத்து
ஓமக்குச்சி நரசிம்மன்
ஜோக்கர் துளசி
முத்துக்காளை
கிங்காங்
மனோஜ்
சகாதேவன்
மகாதேவன்
அருணாக ரஷித் உமர்
ஹரிபாபா
பாபுஜி
சாகர்
வெள்ளையம்மாவாக வர்ஷா
தீபிகா
லஷ்மி பிரியா
டி. ஆர். ஸ்ரீலேகா
பிந்து

ஒலித்தொகுப்பு[தொகு]

Nee Enthan Vaanam
soundtrack
வெளியீடு2000
ஒலிப்பதிவு2000
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்29:27
இசைத் தயாரிப்பாளர்Sangeetha Rajan

ஆறு பாடல்களைக் கொண்ட இப்படத்திற்கு எச். பி. வெங்கடேஷ் இசையமைத்துள்ளார் பாடல்கள் பிறைசூடன் (கவிஞர்) மற்றும் மயில் எழுதியுள்ளனர்[3]

எண் பாடல் பாடியோர் நேரம்
1 "நீ எந்தன் வானம்" ஸ்ரீநிவாஸ் (பாடகர்) 5:12
2 பட்டு பாப்பா" அனுராதா ஸ்ரீராம் 4:42
3 "புத்தம் புது" சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 4:12
4 "ஏ மச்சக்காளை" (duet) பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி 5:07
5 '"ஏ மச்சக்காளை" (male) பி. உன்னிகிருஷ்ணன் 5:07
6 "ஏ மச்சக்காளை" (female) ஹரிணி 5:07

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nee Enthan Vaanam (2000) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  2. "Nee Yenthan Vanam (2000)". gomolo.com. Archived from the original on 2018-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  3. "Nee Enthan Vaanam (2000)". mio.to. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nee%20endhan%20vaanam[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_எந்தன்_வானம்&oldid=3689318" இலிருந்து மீள்விக்கப்பட்டது