நீா்க்கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீர்க்கடிகாரம் அல்லது நீர்க்கடிகை என்பது நீரைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடும் ஒரு சாதனமாகும். ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீாின் அளவிலிருந்து நேரத்தை கணக்கிடும் கருவியாக நீா்க்கடிகாரம் உருவாயிற்று.

பிளாட்டோ வாழ்ந்த காலத்தில் ( கி.மு 400 ) வழக்கிலிருந்த இக்கருவியில் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாத்திரம் இருந்தது. இதன் அடிப்பகுதியில் நீா் வெளியேற துளையும் பக்கவாட்டில் குறியீடுகளும் பொறிக்கப்பட்டிருந்தன. துளையின் வழியாக கீழ் வெளியேறும் இந்த பாத்திரத்திலுள்ள நீா்மட்டம் நேரத்தை காட்டியது. ஏதென்ஸ் நகர வழக்காடு மன்றங்களில் இக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டது என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.[1]

மேற்கோள்[தொகு]

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீா்க்கடிகாரம்&oldid=2390046" இருந்து மீள்விக்கப்பட்டது