நீளச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இச்சக்கரங்கள் ஒளியின் வேகத்திற்கு 9/10 மடங்கு வேகத்தில் நகர்கின்றன. சக்கத்தின் மேற்பகுதியின் வேகம் 0.994c ஆனால் கீழ்பகுதியின் வேகம் எப்போதுமே சுழியம் தான். இதனால் சக்கரத்தின் கீழ்பகுதியை விட மேற்பகுதி சுருங்கி காணப்படுகிறது.

நீளச் சுருக்கம் (length contraction) என்பது நகரும் ஒரு பொருளின் நீளம் அதன் சரியான நீளத்தை விடக் குறைவாக இருக்கும் நிகழ்வு ஆகும். சரியான நீளம் ஒரு பொருளின் சொந்த ஓய்வு நிலையில் அளவிடப்படும் நீளம் ஆகும்.[1] இது என்ட்ரிக் லொரன்சு, சியார்ச் பிரான்சிசு பிட்ஸ்ஜெரால்டு ஆகியோர் பெயரில் லொரன்சு சுருக்கம் (Lorentz contraction) அல்லது லொரன்சு-பிட்ஸ்செரால்ட் சுருக்கம் (Lorentz–FitzGerald contraction) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சுருக்கம் பொதுவாக ஒளியின் வேகத்தின் கணிசமான பகுதியில் மட்டுமே கவனிக்கப்படுகிறது. நீளச் சுருக்கம் என்பது ஒரு பொருள் பயணிக்கும் திசையில் மட்டுமே நிகழ்கிறது. நிலையான பொருள்களுக்கும், அன்றாட வேகத்தில் செல்லும் பொருட்களுக்கும் இந்த விளைவு மிகக் குறைவு. ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது மட்டுமே இது குறிப்பிடத்தக்கதாகிறது.

நீளச் சுருக்கம் L பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

இங்கு

  • L என்பது L என்பது பொருளுடன் தொடர்புடைய இயக்கத்தில் ஒரு பார்வையாளரால் கவனிக்கப்படும் நீளம் ஆகும்.
  • L0 என்பது சரியான நீளம் (அதன் ஓய்வு சட்டத்தில் உள்ள பொருளின் நீளம்)
  • v என்பது பார்வையாளருக்கும் நகரும் பொருளுக்கும் இடையிலான ஒப்பீட்டு வேகம்
  • c என்பது ஒளியின் வேகம்

இந்த சமன்பாட்டில் L, L0 இரண்டும் பொருளின் இயக்கக் கோட்டிற்கு இணையாக அளவிடப்படுகின்றன. ஒப்பீட்டு இயக்கத்தில் பார்வையாளருக்கு, பொருளின் இரு முனைகளின் ஒரே நேரத்தில் அளவிடப்பட்ட தூரங்களைக் கழிப்பதன் மூலம் பொருளின் நீளம் அளவிடப்படுகிறது. ஒளியின் வேகத்திற்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு பொருளைக் கவனிக்கும் ஓய்வில் இருக்கும் ஒரு பார்வையாளர், அந்த பொருளின் நீளத்தை இயக்கத்தின் திசையில் சுழியத்திற்கு அருகில் இருப்பதைக் கவனிப்பார்.

13,400,000 மீ/செ (30 மில்லியன் மைல்/ம, 0.0447c) வேகத்தில் சுருக்கப்பட்ட நீளம் ஓய்வு நேரத்தில் நீளத்தின் 99.9% ஆகும்; 42,300,000 மீ/செ (95 மில்லியன் மை/ம, 0.141c) வேகத்தில், நீளம் 99% ஆகவே இருக்கும். வேகத்தின் அளவு ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, இவ்விளைவு முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீளச்_சுருக்கம்&oldid=3354654" இலிருந்து மீள்விக்கப்பட்டது