நீல வைர விவகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீல வைர விவகாரம் என்பது தீர்க்கப்படாத குற்றங்கள் மற்றும் தூண்டப்பட்ட இராஜதந்திர உறவுகள் ஆகியவற்றை கொண்டதாகும், இது 1989 ஆம் ஆண்டு தாய்லாந்து ஊழியர் ஒருவர் சவூதி அரண்மனைக்குச் சொந்தமான விலை உயர்ந்த சில கற்களை திருடியதிலிருந்து தொடங்கியது. இந்த விவகாரத்தினால் சவூதி அரேபியாவிற்கும் தாய்லாந்திற்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த உறவுகள் மேலும் மோசமடைந்தது [1]

திருட்டு[தொகு]

1989 ஆம் ஆண்டில், தாய்லாந்து அரண்மனையில் ஊழியராகப் பணி புரிந்துவந்த கிரியாங்க்ராய் டெச்சமோங் என்பவர் இளவரசர் பைசல் பின் பகத்தின் அரண்மனையிலிருந்து விலை உயர்ந்த சில நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க கற்களைத் திருடிவிடுகிறார்.[2] கிரியாங்க்ராய் இளவரசரின் படுக்கையறைக்கு நுழைந்து நகைகளை திருடி அரண்மனையில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்தார். அதில் ஒரு மதிப்புமிக்க நீல வைரம் மற்றும் பிற விலை உயர்ந்த கற்கள் இருந்தன, பின்னர் கிரியாங்க்ராய் தாய்லாந்தின் லம்பாங் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.[3]

மீட்பு[தொகு]

ராயல் தாய்லாந்து காவல் அதிகாரி சாலர் கெர்டெஸ் என்பவர் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் கிரியாங்க்ராய் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பெரும்பாலான நகைகளை மீட்டெடுக்கப்பட்டது. கிரியாங்காய்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவர் காவல்துறையினரிடம் ஒத்துழைத்து வாக்குமூலம் அளித்ததால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

திருடப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்ப சாலரின் குழு சவுதி அரேபியாவுக்கு சென்றது. இருப்பினும், சவூதி அரேபிய அதிகாரிகள் நீல வைரத்தைக் காணவில்லை என்றும், திரும்ப ஒப்படைக்கப்பட்ட விலை உயர்ந்த கற்களில் பாதி போலியானவை என்றும் கண்டுபிடித்தனர்.[4][5]

இது குறித்து பாங்காக்கில், உள்ளூர் பத்திரிகைகளில் வதந்திகள் பரவியது, அரண்மனையில் இருந்து திருடப்பட்டதைப் போன்ற வைர மாலை அணிந்த பல அரசாங்க அலுவலர்களின் மனைவிகளின் புகைப்படங்கள் வெளிவந்தன. தாய்லாந்து காவலர்களும், சில முக்கிய பிரமுகர்களும் தங்களுக்கென சில நகைகளை எடுத்துக் கொண்டிருக்கலாம் என சவூதி அரசு சந்தேகம் கொண்டது.[6]

விசாரணை[தொகு]

சவூதி அரச குடும்பத்துடன் நெருக்கமான சவுதி அரேபிய தொழிலதிபர் முகமது அல் ருவாய்லி, இதைப் பற்றி சொந்தமாக விசாரிக்க நேரில் பாங்காக் சென்றார். அவர் 1990 பிப்ரவரி 12 அன்று காணாமல் போனார், அவர் கொலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.[7] அவர் காணாமல் போவதற்கு முன்னர், 1989 சனவரி 4 அன்று, ஒரு சவூதி தூதர் பாங்காக்கின் பேங் இராக் மாவட்டத்தின் சி லோமில் கொலை செய்யப்பட்டார். 1990 பிப்ரவரி 1 அன்று, பாங்காக்கின் யான் நாவா மாவட்டத்தில் துங் மகாமேக்கில் மேலும் மூன்று சவுதி தூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[8][9] கொலைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.[10] சவூதி அரசாங்கத்தின் பார்வை தாய்லாந்தின் மீது இருந்தபோதிலும், நகை திருட்டுக்கு எந்த தொடர்பும் நிரூபிக்கப்படவில்லை "அல்-ருவாய்லியின் படுகொலை மற்றும் பிற மூன்று சவுதி தூதர்கள் ஆகியோரின் மர்மத்தை தீர்க்க தாய்லாந்து அரசு போதுமான விசாரணையும் செய்யவில்லை... "

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மாணிக்க வியாபாரியின் மனைவி மற்றும் மகனை 1995 இல் கொலை செய்ய உத்தரவிட்டதாக அதிகாரி சாலர் பின்னர் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார், மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[11] தாய் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதிசெய்து, 2009 அக்டோபர் 16 அன்று சாலருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும், சாலரின் தண்டனை மன்னரின் 84 வது பிறந்தநாளில் மன்னர் பூமிபோல் அதுல்யாதெசால் ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.[12] மேலும் 6 காவலர்களும் இந்த கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான காவல் அதிகாரி-கலோனல் பன்சக் மோங்கொல்சில்பிற்கு 2002 ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் இந்த தண்டனை 2005 இல் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவர் 2012 இல் விடுவிக்கப்பட்டார்.[13]

இராஜதந்திர மற்றும் பொருளாதார விளைவுகள்[தொகு]

கொலைகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது. சவூதி அரேபியா தாய்லாந்துக்கு பணி விசா வழங்குவதை நிறுத்தி, தனது சொந்த குடிமக்களை பாங்காக்கிற்கு செல்வதை தடுத்தது. இராஜதந்திர பணிகள் நாட்டின் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. சவுதி அரேபியாவில் பணிபுரியும் தாய்லாந்து மக்களின் எண்ணிக்கை 1989 ல் 150,000-200,000 ஆக இருந்தது, இது 2008 ல் வெறும் 10,000 ஆக குறைந்தது. குறைந்த தாய்லாந்து தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டதால், தாய்லாந்திற்கான வரவு சுமார் 200 பில்லியன் பாட்டாக குறைந்தது.[14]

பின்விளைவு[தொகு]

2016 மார்ச் 17 அன்று, அப்போது 65 வயதான கிரியாங்க்ராய் டெச்சமோங் தனது நேர்மையற்ற செயல்களுக்காக மனந்திரும்புவதற்காக தனது வாழ்நாள் முழுவதும் துறவியாக மாறுவதாக்வும் லம்பாங்கில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் தனது திருட்டுக்காக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தாய் சிறைகளில் கழித்திருந்தார். காணாமல் போன நீல வைரம் சபிக்கப்பட்டதாக தான் நம்புவதாகவும், அந்த திருட்டு தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ச்சியான பேரழிவுகளை ஏற்படுத்தியதாகவும் கிரியாங்க்ராய் கூறினார்.   [ மேற்கோள் தேவை ] சாலர் கெர்டெசுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 2015 இல் விடுதலை செய்யப்பட்டர். கிரியாங்கிராயின் ஒழுங்குமுறை விழாவில் அவர் கலந்து கொண்டார்.[15]

1990 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி, சவூதி தொழிலதிபர் முகமது அல்-ருவாய்லி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து காவல் அதிகாரிகளை தாய்லாந்தின் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாததை நீதிமன்றம் மேற்கோளிட்டுள்ளது. பல ஆண்டுகளாக, ஐந்து காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படாமல் இருந்தன. ஒரு குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை 2014 இல் தள்ளுபடி செய்தது, அடுத்த ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். [16][17]

குறிப்புகள்[தொகு]

 1. "Thailand's Blue Diamond Heist: Still a Sore Point". Time. 2010-03-07. http://content.time.com/time/world/article/0,8599,1969920,00.html. 
 2. Mccarthy, Terry (25 September 1994). "Saudi gems theft leaves deadly trail in Thailand". The Independent (London). https://www.independent.co.uk/news/world/saudi-gems-theft-leaves-deadly-trail-in-thailand-1450865.html. 
 3. Hughes, Roland (28 September 2019). "Blue Diamond Affair: The mystery of the stolen Saudi jewels". BBC News. https://www.bbc.com/news/world-asia-49824325. 
 4. "The Thai police: A law unto themselves". http://www.economist.com/node/11058580. பார்த்த நாள்: 14 Feb 2015. 
 5. "The Blue Diamond Affair".
 6. Ramsey, Adam (2015-10-02). "Assassinations, Curses, and Stolen Jewels: The 'Blue Diamond Affair' Is Still Darkening Saudi-Thai Relations". Vice News. https://news.vice.com/en_us/article/zm74k3/assassinations-curses-and-stolen-jewels-the-blue-diamond-affair-is-still-darkening-saudi-thai-relations. பார்த்த நாள்: 13 October 2018. 
 7. "Court stands by ex-policeman's acquittal". Bangkok Post. 2016-05-04. http://www.bangkokpost.com/news/general/958289/court-stands-by-ex-policemans-acquittal. பார்த்த நாள்: 4 May 2016. 
 8. "Former Bangkok cops cleared of murder of Saudi businessman". Bangkok Post. 2019-03-22. https://www.bangkokpost.com/news/crime/1649340/former-bangkok-cops-cleared-of-murder-of-saudi-businessman. பார்த்த நாள்: 2019-03-24. 
 9. "Thai Blue Diamond Affair: Kingdom demands justice". Arab News. 2014-07-04. http://www.arabnews.com/news/596436. பார்த்த நாள்: 14 February 2015. 
 10. A Blue Thai Affair: The Blue Diamond Affair's Illustration of the Royal Thai Police Force's Standards of Corruption. Apr 2012. http://elibrary.law.psu.edu/cgi/viewcontent.cgi?article=1009&context=jlia. பார்த்த நாள்: 14 Feb 2015. 
 11. "Thai cop convicted of Saudi gem theft". மூல முகவரியிலிருந்து May 19, 2011 அன்று பரணிடப்பட்டது.
 12. Laohong, King-oua (2013-10-26). "Saudi gem killer Chalor freed". Bangkok Post. http://www.bangkokpost.com/lite/topstories/376533/chalor-kerdthes-leaves-prison. 
 13. Ngamkham, Wassayos (12 October 2018). "Ex-cop linked to Saudi gems case held in slaying". Bangkok Post. https://www.bangkokpost.com/news/general/1557062/ex-cop-linked-to-saudi-gems-case-held-in-slaying. 
 14. "Thai Foreign Minister to reopen Saudi gems scandal case". Mathaba (2008-03-06). மூல முகவரியிலிருந்து 2015-02-14 அன்று பரணிடப்பட்டது.
 15. Charuvastra, Teeranai (2016-03-17). "Man Behind Saudi Diamond Heist Ordained ‘For Life’". Khaosod English. Archived from the original on 2016-04-07. https://web.archive.org/web/20160407190856/http://www.khaosodenglish.com/detail.php?newsid=1458202742&section=11. பார்த்த நாள்: 27 March 2016. 
 16. "Former Bangkok cops cleared of murder of Saudi businessman". Bangkok Post. 2019-03-22. https://www.bangkokpost.com/news/crime/1649340/former-bangkok-cops-cleared-of-murder-of-saudi-businessman. 
 17. Saksornchai, Jintamas (2019-03-22). "TOP COURT CLEARS COPS OF MURDER IN SAUDI ‘BLUE DIAMOND’ CASE". Khaosod English. http://www.khaosodenglish.com/news/crimecourtscalamity/2019/03/22/top-court-clears-cops-of-murder-in-saudi-blue-diamond-case/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_வைர_விவகாரம்&oldid=2868352" இருந்து மீள்விக்கப்பட்டது