உள்ளடக்கத்துக்குச் செல்

நீல நீர் யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல நீர் யுத்தம் என்பது 1362 அல்லது 1363ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் சைனியுகா ஆற்றின் கரையில் நடைபெற்ற ஒரு யுத்தமாகும். இதில் லித்துவேனியாவின் பெரிய டுச்சி மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றின் ராணுவங்கள் சண்டையிட்டன. லித்துவேனியர்கள் இப்போரில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றனர். கீவ் சமஸ்தானத்தை வென்றனர்.

விளைவு

[தொகு]

இந்த வெற்றியின் மூலம் கீவ் மற்றும் தற்போதைய உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் அந்நேரத்தில் விரிவடைந்து கொண்டிருந்த லித்துவேனியாவின் பெரிய டுச்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மேலும் லித்துவேனியாவிற்கு கருங்கடலை உபயோகிக்கும் வழியும் கிடைத்தது. இப்போரில் பங்கேற்ற லித்துவேனியாவின் அலகிர்தஸ் தனது மகன் விலாடிமிரை கீவில் விட்டுச் சென்றார். கீவை வென்ற பிறகு லித்துவேனியா, மாஸ்கோவின் பெரிய டுச்சியின் நேரடியான அண்டை நாடாகவும் மற்றும் எதிரியாகவும் மாறியது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Kiaupa, Zigmantas; Kiaupienė, Jūratė; Kunevičius, Albinas (2000). The History of Lithuania Before 1795. Vilnius: Lithuanian Institute of History. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9986-810-13-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நீர்_யுத்தம்&oldid=3842769" இலிருந்து மீள்விக்கப்பட்டது