நீல நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல நரி (The Blue Jackal) என்பது இந்திய துணைக் கண்டம் முழுவதும் அறியப்பட்ட கதை ஆகும்.

ஆரம்ப குறிப்பு[தொகு]

நீல நரி பற்றிய முந்தைய குறிப்பு பஞ்சதந்திரத்தில் காணப்படுகிறது. இது மனித சூழ்நிலைகளில் விலங்குகளைச் சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பாகும் (மானுடவியல், புனைகதையில் பேசும் விலங்குகளைப் பார்க்கவும்). ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு "ஆளுமை"யுடன் காணப்படும். ஒவ்வொரு கதையும் ஒரு நீதி நெறியினைப் போதிக்கின்றது. 

கதை[தொகு]

வாய்வழி செய்தி மூலம் அறியப்படும் நீல நரியின் கதை இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியில் அதிகம் வேறுபடுவதில்லை. இந்த கதையில் வரும் உயிரினம் சந்துரு, நீலகாந்த் அல்லது நீல கிதர் (அதாவது, நீல நிற குள்ளநரி ) என்று பலவிதமாக அறியப்படுகிறது.

மிகவும் பொதுவான கதை[1] கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

நீல நரியின் கதை: பஞ்சதந்திரத்தில் உள்ள ஒரு கதை
ஒரு நாள் மாலை இருட்டு வேளையில், பசியுடன் இருந்த குள்ளநரி ஒன்று காட்டில் உள்ள தனது இருப்பிடம் அருகிலுள்ள பெரிய கிராமத்தில் உணவைத் தேடிச் சென்றது. நரியைக் கண்ட அந்த ஊர் நாய்கள் நரியைக் கொன்று தங்கள் உரிமையாளர்களைப் பெருமைப்படுத்துவதற்காக நரியினை விரட்டின. குள்ளநரி தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடியது, எங்குச் செல்கிறது என்று பார்க்காமல் துணி சாயமிடுபவர் வீட்டிற்கு வெளியே ஒரு வைக்கப்பட்டிருந்து நீல நிற சாயத் தொட்டி ஒன்றில் விழுந்தது. இதனையறியாத நாய்கள் தொடர்ந்து ஓடின. பின்னர் குள்ளநரி பாதிப்பில்லாமல் வாளியிலிருந்து வெளியே வந்தது.

காட்டிற்குத் திரும்பிய குள்ளநரி, காட்டின் அரசனான சிங்கத்தைப் பார்த்தது. சிங்கம் நரியின் தோற்றத்தைப் பார்த்து நரியிடம் நீங்கள் யார் என்று கேட்டது. தான் நீல நிறமாக இருப்பதால், குள்ளநரி தன்னை சந்துரு என்று தெரிவித்தது. காட்டில் உள்ள அனைத்து விலங்குகளின் பாதுகாவலன் என்றும் தெரிவித்தது. சந்துரு சிங்கத்திடம், எல்லா விலங்குகளும் தனக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்தால் மட்டுமே காட்டைக் காப்பேன் என்றும் தெரிவித்தது.

இதன் பின்னர் சந்துரு மற்ற காடுகளிலிருந்து வந்த விலங்குகளிடம் ஆலோசனை கேட்டது மற்றும் விலங்குகள் சந்துருவின் காலடியில் அமர்ந்து சிறந்த உணவைக் கொண்டு வந்தன. இந்நிகழ்வு சிலகாலம் தொடர்ந்தது. ஆனால் பௌர்ணமி இரவில் சில குள்ளநரிகள் ஊளையிட்டன. சந்துரு அருகிலிருந்த விலங்குகள் பற்றிய யோசனை இல்லாமல் ஊளையிடத் தொடங்கியது. இதன் மூலம் சந்துரு ஒரு சாதாரண குள்ளநரி என்பதை உணர்ந்து கொண்ட மற்ற விலங்குகள் சந்துருவைத் காட்டுக்குள் வெகு தூரம் துரத்திச் சென்றன.[1][2][3][4]

நீதி[தொகு]

பல நா‌ள் ‌திருட‌ன் ஒருநா‌ள் அக‌ப்படுவா‌ன்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Panchatantra The Story of The Blue Jackal
  2. The Blue Jackal : A Panchtantra Story by Swapna Dutta
  3. A - Z Hinduism - Panchatantra Stories
  4. "The Blue Jackal". Tell-A-Tale. Tell-A-Tale. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நரி&oldid=3677770" இலிருந்து மீள்விக்கப்பட்டது