நீல. பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல. பாண்டியன்
பிறப்புநீ. பாண்டியன்
சூன் 25, 1952
மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நீல. பாண்டியன்
பணிஅரசுப்பணி நிறைவு
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்நீலமேகம் (தந்தை),
சாரதாம்பாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
கலாமணி
பிள்ளைகள்சேதுபதிராசா (மகன்),
அருண்குமார் (மகன்),
சத்யஜோதி (மகள்)
உறவினர்கள்சகோதரி - 5

நீல. பாண்டியன் (பிறப்பு: சூன் 25, 1952) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டம் மேல்மங்கலம் எனும் ஊரில் பிறந்த இவர், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில், பணி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகிறார்.

வெளியான நூல்கள்[தொகு]

  1. வாழ்க்கையின் சில பக்கங்கள் (கட்டுரைகள்) - 2000
  2. முதல் வணக்கம் (கவிதைகள்) - 2002
  3. பணயக் கைதிகள் (நாடகம்) - 2009
  4. நல்ல மனம் வாழ்க (நாடகம்) - 2010
  5. ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் - 2011
  6. மூதறிஞர் இராஜாஜி - 2011

விருது[தொகு]

  • தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டப் பொது நூலகம் மூலம் 2010 ஆம் ஆண்டுக்கான நாடகங்களுக்கான “கலை - இலக்கிய சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல._பாண்டியன்&oldid=1250281" இருந்து மீள்விக்கப்பட்டது