நீல-வளைய சாக்குக்கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல-வளைய சாக்குக்கணவாய்
Hapalochlaena lunulata2.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு: தலைக்காலி
வரிசை: சாக்குக்கணவாய்
குடும்பம்: Octopodidae
துணைக்குடும்பம்: Octopodinae
பேரினம்: Hapalochlaena
Robson, 1929
இனங்கள்

H. fasciata
H. lunulata
H. maculosa
H. nierstraszi (?)

நீல-வளைய சாக்குக்கணவாய் (blue-ringed octopus, பேரினம் Hapalochlaena) என்பவை ஒரு வகை சாக்குக்கணவாய் ஆகும். இவற்றில் மூன்று (அல்லது நான்கு) இனங்கள் இருக்கின்றன. இவற்றின் உடலில் உள்ள நீல நிற வளையங்களால் இவை இப்பெயர் பெற்றன. இவ்வகை உயிரினங்கள் பசிபிக் பெருங்கடல் , இந்தியப் பெருங்கடல் பகுதியில் சப்பானில் இருந்து ஆத்திரேலியா வரையிலான கடல் பகுதியின் அலை குளங்கள், பவளப் பாறைகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் முதன்மை வாழிடப்பரப்பு என்பது நியூ சவுத் வேல்ஸ்,தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி உள்ளது.[1][2] இவை உலகின் மிக ஆபத்தான கடல்விலங்காக குறிப்பிடப்படுகின்றன.[3] இவை சிறியதாக 12 to 20 cm (5 to 8 in) அளவிலானவையாக உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் மந்தமான இயல்புயவையாக உள்ளவை, இவற்றை தொடுவது மனிதர்களுக்கு ஆபத்தானது. இவற்றின் நஞ்சு, மனிதர்களைக் கொல்ல போதுமான சக்திவாய்ந்ததாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]