நீல் ஹார்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராபர்ட் நீல் ஹார்வி (Robert Neil Harvey OAM MBE (பிறப்பு: அக்டோபர் 8, 1928) ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியை 1948 மற்றும் 1963 க்கு இடையில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இதுவரை 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அவர் 1957 முதல் ஓய்வு பெறும் வரை அணியின் துணைத் தலைவராக இருந்தார். அதிரடியாக விளையாடும் இடது கை மட்டையாளர், சிறப்பான களத்தடுப்பாளார் மற்றும் அவ்வப்போது எதிர்ச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார். ஹார்வி 1950 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் இருந்த மூத்த வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை சகாப்தத்தின் சிறந்த களத்தடுப்பாளர் எனப் பாராட்டியது.

இவரின் ஆறு சகோதரர்களும் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். அவர்களில் நான்கு பேர் விக்டோரியாத் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஹார்வி தனது மூத்த சகோதரர் மெர்விக்கு பின்பாக 1948 ஜனவரியில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் ஆகும்.தனது இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனையினைப் படைத்தார். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டான் பிராட்மேனின் 1948 இன்விசிபிள்ஸில் இளைய உறுப்பினராக ஹார்வி இருந்தார். துவக்கப் போட்டிகளில் ஓட்டங்கள் எடுப்பதற்கு சற்று சிரமப்பட்ட போதிலும் இவர் தனது ஆஷஸ் அறிமுகத்தில் நூறு ஓட்டங்கள் அடித்தார். ஹார்வி தனது முதல் பதின்மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆறு நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரின் சராசரி 100க்கும் அதிகமாக உள்ளது. இதில் 1949-50 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு நூறுகளை அடித்தார். இதில் ஒரு போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 151 ஓட்டங்களை எடுத்துள்ளார்.1953 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது 2,000 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்ததில் அவர் பெற்ற சாதனையை அங்கீகரிக்கும் விதமாக 1954 ஆம் ஆண்டில் இந்த ஆண்டின் விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். .

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

ஹொரேஸ் ஹார்விக்கு பிறந்த ஆறு ஆண் குழந்தைகளில் இவர் ஐந்தாவது குழந்தை ஆவார். ஹார்வி 4.5 கிலோகிராம்கள் (10 lb) எடையுடன் பிறந்தார் . [1] இந்த குடும்பம் ப்ரோக்கன் ஹில்லில் வசித்து வந்தது. அங்கு ஹொரேஸ் சுரங்கத் தொழிலாளியாக இருந்தார். சிட்னிக்குச் செல்வதற்கு முன்பு, இறுதியாக 1926 இல் மெல்போர்னுக்குச் சென்றார். அங்கு இவர்கள் வடக்கு தொழில்துறை புறநகர்ப் பகுதியான ஃபிட்ஸ்ராய் நகரில் குடியேறினர். அங்கு ஆறு சிறுவர்களுக்கும் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் துடுப்பாட்டம் கற்பிக்கப்பட்டது. இவர்கள் ஜார்ஜ் ஸ்ட்ரீட் ஸ்டேட் பள்ளி மற்றும் பால்கனர் ஸ்ட்ரீட் சென்ட்ரல் பள்ளியில் கல்வி கற்றனர். [2] [3] துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்டம் பற்றிய பேச்சுகள் அன்றாட குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது.ஹார்வியின் மூத்த சகோதரர் மெர்வ் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதே நேரத்தில் மிக் மற்றும் ரே இருவரும் விக்டோரியாவுக்காக விளையாடினர். . ஹரோல்ட்டைத் தவிர, ஐந்து பேரும் பேஸ்பால் விளையாட்டில் விக்டோரியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

சான்றுகள்[தொகு]

  1. Robinson, p. 258.
  2. "Wisden 1954 – Neil Harvey". Wisden. 1954. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007.
  3. Mallett, p. 170.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_ஹார்வி&oldid=2881399" இலிருந்து மீள்விக்கப்பட்டது