உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் பர்னார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் பர்னார்டு
2014-ல் நீல் பர்னார்டு
பிறப்பு10 சூலை 1953 (1953-07-10) (அகவை 72) [1]
ஃபார்கோ, வடக்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்கா[2]
கல்விஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி (எம்.டி.)
பணிமருத்துவர், அமைப்புத் தலைவர், நூலாசிரியர், மருத்துவ ஆராச்சியாளர்
அறியப்படுவதுநிறுவனத் தலைவர், பொறுப்புள்ள மருத்துவத்திற்கான மருத்துவர்கள் குழு
வலைத்தளம்
www.nealbarnard.org

நீல் டி. பர்னார்டு (Neal D. Barnard) (பிறப்பு: 10 ஜூலை 1953) ஒரு அமெரிக்க மருத்துவரும், நூலாசிரியரும், விலங்குரிமை ஆர்வலரும், பொறுப்புள்ள மருத்துவத்திற்கான மருத்துவர்கள் குழுவின் (PCRM) நிறுவனத் தலைவரும் ஆவார். பர்னார்டு தாவர அடிப்படையிலான முழுமையான உணவு முறையைக் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பர்னார்டு வடக்கு டகோட்டாவின் ஃபார்கோ நகரில் பிறந்து வளர்ந்தவர். அவர் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பட்டம் பெற்றார், அங்கு அவர் நனிசைவ உணவுமுறை குறித்து ஆராயத் தொடங்கினார். அவர் அமெரிக்க மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் வாரியத்தால் வாரியச் சான்றிதழ் பெற்றவரும், அமெரிக்க இருதயவியல் கல்லூரியின் உறுப்பினரும், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.

பர்னார்டு விலங்குரிமைகளுக்கும் குரல் கொடுப்பவர் ஆவார். அவர் பீட்டா அமைப்பின் அனிமல் டைம்ஸ் இதழுக்கு கட்டுரைகளைப் பங்களித்துள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • வாழ்வுமுறை மருத்துவ முன்னோடி விருது (Lifestyle Medicine Trailblazer Award), 2016[3] – அமெரிக்க வாழ்வுமுறை மருத்துவக் கல்லூரி (American College of Lifestyle Medicine [ACLM]) வழங்கியது
  • 6வது தாவர உணவுத் திட்ட வழிகாட்டி விருது (Plantrician Project Luminary Award), 2019[4] – பிளான்ட்ரிசியன் ப்ராஜெக்டு அமைப்பு வழங்கியது

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. "Find The Best Quotes From Neal Barnard at PortalQuote". portalquote.com. Archived from the original on 2019-08-21. Retrieved 2019-08-21.
  2. "Neal Barnard Advocates for Ethical Medicine, Research". Voice of America. November 2, 2009.
  3. "Distinguished Lifestyle Medicine Awards Recipients" American College of Lifestyle Medicine
  4. Dr. Neal Barnard to be Honored as 2019 Recipient of The Plantrician Project Luminary Award, Cision PRWeb, accessed July 19, 2019

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_பர்னார்டு&oldid=4411941" இலிருந்து மீள்விக்கப்பட்டது