உள்ளடக்கத்துக்குச் செல்

நீலிமா ஷேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலிமா ஷேக்
பிறப்பு18 நவம்பர் 1945
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விதில்லி பல்கலைக்கழகம்
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஓவியம்

நீலிமா ஷேக் (Nilima Sheikh) (பிறப்பு: நவம்பர் 18, 1945, புது தில்லி) [1] இந்தியாவின் வடோதராவைத் தளமாகக் கொண்ட ஒரு காட்சி கலைஞராவார். 80களின் நடுப்பகுதியிலிருந்து, இவர் இந்தியாவில் பாரம்பரிய கலை வடிவங்களைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருகிறார். பாரம்பரிய ஓவியர்களின் நடைமுறையின் நீடித்த தன்மைக்காக வாதிட்டார். மேலும் பலவிதமான காட்சி மற்றும் இலக்கிய ஆதாரங்களை தனது படைப்புகளில் பயன்படுத்தினார். [2] இவரது பணி இடப்பெயர்வு, ஏக்கம், வரலாற்று பரம்பரை, பாரம்பரியம், வகுப்புவாத வன்முறை மற்றும் பெண்மையுடன் தொடர்புடைய கருத்துக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. [3] [4] [5] இவர் காகிதம், ஓவியம், நிறுவல், பெரிய சுருள்கள், அரஙக வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்களுக்கான விளக்கப்படங்களைப் பயன்படுத்துகிறார். இவர் 1969ஆம் ஆண்டில் தனது படைப்புகளை காட்சிப்படுத்தத் தொடங்கினார். மேலும், ஏராளமான குழு கண்காட்சிகளிலும் பங்கேற்றார். மிக சமீபத்தில் 2017 இல் ஏதென்ஸ் நகரிலும், காசெல் நகரிலும் காட்சிபடுத்தப்பட்ட ஆவணப்படம் 14 ஆகும் . இவரது முதல் அருங்காட்சியக கண்காட்சியை தி ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோ 2014 இல் ஏற்பாடு செய்தது. [6]

கல்வி

[தொகு]

இவர், 1962க்கும் 1965க்கும் இடையில் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றைப் படித்தார். மேலும் 1971 ஆம் ஆண்டில் வடோதரா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்திலிருந்து நுண்கலையில் தனது முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். [7] கன்வால் கிருஷ்ணா, தேவயானி கிருஷ்ணா, கே. ஜி. சுப்ரமணியன் போன்ற கலைஞர்களால் இவர் ஈர்க்கப்பட்டார். மேலும் பழைய சாந்திநிகேதன் சோதனை, கலை வரலாற்றில் பரோடாவின் மதிப்பு மற்றும் வரலாற்றில் இவரது முந்தைய கல்வி ஆகியவை முக்கிய தாக்கங்களாக இருந்தன. [8] [9]

முதலில் மேற்கத்திய பாணியிலான எண்ணெய் ஓவியத்தில் பயிற்சி பெற்ற இவர், பின்னர் ஆசியாவில் ஓவியம் குறித்த வரலாற்று மரபுகளில் ஆர்வம் காட்டியதால் சுயமாக கற்பிக்கப்பட்ட மினியேச்சர் ஓவியராக மாறினார். [10] நவீன காலத்திற்கு முந்தைய ராஜ்புத் மற்றும் முகலாய அரசவை ஓவியங்கள், குறிப்பாக பிச்வாய் மற்றும் தங்கா ஓவியங்கள் போன்ற பாரம்பரிய டெம்பரா ஓவியங்களால் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். [11]

ஆராய்ச்சியும் படைப்புகளும்

[தொகு]

1980களின் நடுப்பகுதிகளில் பாரம்பரிய கலை வடிவங்களை, குறிப்பாக நாத்வாராவின் பிச்வாய் ஓவியங்களை ஆவணப்படுத்த இவர் ஒரு கூட்டுறவைப் பெற்றார். இந்தக்கலை வடிவங்களின் உருவங்களின் வரைபடங்களை இவர் உருவாக்கினார். அவை பயன்படுத்தும் கருவிகள் மற்றும் முறைகளை ஆவணப்படுத்தினார். மேலும் இந்த கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கான ஆதரவைக் கேட்க கலாச்சார பாரம்பரியம் தொடர்பான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார். [12]

2002இல் குசராத் கலவரத்திற்குப் பிறகு தான் அனுபவித்த மனக் கொந்தளிப்புக்குப் பிறகு, காஷ்மீர் கவிஞர் ஆகா ஷாஹித் அலியின் ஆத்மாவைத் தூண்டும் கவிதை வரிகளை வலியால் நிரம்பிய ஒரு நீண்டகால கலைத் திட்டத்தை இவர் மேற்கொண்டார். தனது படைப்புகளில் மத ரீதியான, ஆனால் இயற்கையான கலை வரலாற்று ரீதியான குறிப்புகளைக் குறிப்பிடமாட்டார். இது வரலாற்றின் ஒரு பகுதியாகும், இது பாரம்பரியம் அல்லது புராணக் கதைகளாகும். உண்மையில் இது வரலாறு, ஒருவரின் கடந்த காலத்தின் ஒரு பகுதி, இது வெறும் மேற்கத்திய கலை வரலாறு அல்ல என்று இவர் விளக்குகிறார்.

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Sheikh, Nilima | Grove Art" (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/gao/9781884446054.001.0001/oao-9781884446054-e-7000097953. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
 2. Archive, Asia Art. "Exhibition | Nilima Sheikh". aaa.org.hk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-03-31. பார்க்கப்பட்ட நாள் 2018-03-31.
 3. "Nilima Sheikh". Khoj. Archived from the original on 2020-09-19. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
 4. "Capturing the nuances of artist Nilima Sheikh's practice". The Arts Trust. Archived from the original on 2018-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
 5. "Nilima Sheikh Chemould Prescott Road / Mumbai". 2017-12-15 இம் மூலத்தில் இருந்து 2018-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180707010758/https://www.flashartonline.com/2017/12/nilima-sheikh-chemould-prescott-road/. 
 6. "Trouble in Paradise: A Tribute to Kashmir in Chicago | Apollo Magazine". 2014-03-20. https://www.apollo-magazine.com/trouble-paradise-tribute-kashmir-art-institute-chicago/. 
 7. "Nilima Sheikh". SaffronArt.
 8. "Artist Nilima Sheikh Recounts Her Art Journey". idiva.
 9. "A Conversation Between Vishakha N. Desai And Nilima Sheikh And Shahzia Sikander To Mark The Exhibition, Conversations With Traditions At Asia Society, New York, 17 November 2001". Critical Collective. Archived from the original on 26 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 10. "Artist Nilima Sheikh Recounts Her Art Journey". idiva.
 11. "Conversations with Traditions: Nilima Sheikh and Shahzia Sikander". Asia Society.
 12. Archive, Asia Art. "Lines of Flight: Nilima Sheikh Archive". aaa.org.hk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிமா_ஷேக்&oldid=3560931" இலிருந்து மீள்விக்கப்பட்டது