உள்ளடக்கத்துக்குச் செல்

நீலா விக்கிரமசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலா விக்கிரமசிங்க
Neela Wickramasinghe
නීලා වික්‍රමසිංහ
இயற்பெயர்டோனா டெலிசியா நீலா விக்கிரமசிங்க
பிறப்பு30 மார்ச்சு 1950 (1950-03-30) (அகவை 75)[1]
வத்தளை
பிறப்பிடம்இலங்கை
இறப்பு17 சனவரி 2022(2022-01-17) (அகவை 71)
மிலன், இத்தாலி
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், இலங்கையின் இசை
தொழில்(கள்)பாடகர், ஆசிரியர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்1967 – தற்போது வரை

நீலா விக்கிரமசிங்க (Neela Wickramasinghe; சிங்களம்: නීලා වික්‍රමසිංහ; 30 மார்ச் 1950 – 17 சனவரி 2022)) இலங்கையை சேர்ந்த ஒரு மூத்த பெண் பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்.[2] இவர் பெரும்பாலும் சிங்கள மொழியில் பாடுகிறார். குறிப்பாக அவர் மேற்கத்திய மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

விக்கிரமசிங்க வத்தளையில் டான் பிரான்சிஸ் விக்கிரமசிங்க மற்றும் விதானராட்சிகே டான் யசவதி குணசேகர ஆகியோரின் இளைய மகளாக பிறந்தார். அவர் ஆறு மாத குழந்தையாக இருந்த போது போலியோவால் (இளம்பிள்ளை வாதம்) பாதிக்கப்பட்டார். பின்னர் விக்கிரமசிங்க இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். விக்ரமசிங்க வின்சென்ட் சோமபால மற்றும் ஆனந்த ஜெயசிங்கவிடம் இசை பயின்றார். 1959 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் 'அமெச்சூர் வாய்ஸ்' நிகழ்ச்சிக்காக தனது முதல் பாடலைப் பாடினார். 1973 ஆம் ஆண்டில், எஸ்எல்பிசியின் ஆராய்ச்சிப் பிரிவில் பாடப்பட்ட பாடல்களின் தகுதியின் அடிப்படையில் ஏ-கிரேடு கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வட இந்திய பாரம்பரிய இசையைப் பயின்ற அவர், 1974 இல் சங்கீத் விஷாரதா பட்டம் பெற்றார். டி.எம்.ஜெயரத்னவுடன் டூயட் பாடல்கள் உட்பட பல பிரபலமான பாடல்களை விக்கிரமசிங்க பாடியுள்ளார்.[3] பின்னர், விக்கிரமசிங்க இசை ஆசிரியராகப் பணியாற்றினார். பல பள்ளிகளில் 23 ஆண்டு காலம் கற்பித்த அவர், கொழும்பிலுள்ள விசாக்கா வித்தியாலயத்தில், எட்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டு 1998 இல் ஓய்வு பெற்றார்.[4] தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்த, இசை கற்பிப்பதை விட்டுவிட அவர் விரும்பினார்.

இசை பயணம்

[தொகு]

67 பாடல்களில் பின்னணிப் பாடியுள்ள அவர், நூற்றுக்கணக்கான பாடல்களுக்குப் பங்களித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில், அவரது இசை வாழ்க்கையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விக்கிரமசிங்க "மாஸ்டர் சர்" (Master Sir) என்ற இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார்.[5] அவர் தனது இசை நிகழ்ச்சிகளுக்காக பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 1980 இல் முதல் பயணமாக மேற்கு ஜெர்மனிக்குச் சென்றார். அதன் பின்னர் அவர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், கனடா மற்றும் இங்கிலாந்தில் பாடியுள்ளார்.

சமூக செயல்பாடு

[தொகு]

தி மதர் அமைப்பு

[தொகு]

2002 ஆம் ஆண்டில், விக்கிரமசிங்க குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சேவை செய்ய "தி மதர்" (The Mother) என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.[6] அவர் இந்த அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.[7] தனியார் கல்வி வகுப்ப்புகளில் கலந்து கொள்ளாமல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில தேர்வான கிராமப்புறப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 10 சிறந்த மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

போலியோ ஒழிப்புக்கு ஆதரவு

[தொகு]

1989 ல் இலங்கையில் இருந்து போலியோவை ஒழித்து குழந்தைகளை காப்பாற்றும் யுனிசெப் திட்டத்தில் விக்கிரமசிங்க பங்கேற்றார்.[8] போலியோ ஒழிப்பு பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலை அவர் பாடி, அது வானொலி மற்றும் டிவி சேனல்களில் அடிக்கடி கேட்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் மூலம் போலியோவை ஒழிக்க அவரது முயற்சிகள் பெரிதும் உதவியது. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் ஒருவரும் போலியோவால் பாதிக்கப்படவில்லை.

இத்தாலியின் மிலனில் இலங்கையின் துணைத் தூதராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[9]

விருதுகள்

[தொகு]

இவர் ஜனாதிபதி விருது, சுமதி டெலி விருது, சோன்டா விருது, வனிதா விருது ஆகியவற்றையும் சரசவியா விருதை மூன்று முறையும் வென்றுள்ளார்.

ஆண்டு தலைப்பு விருது
1984 சிறந்த பெண் பாடகர் சரசவியா விருதுகள்
1986 சிறந்த பெண் பாடகர் சரசவியா விருதுகள்
1992 சிறந்த பெண் பாடகர் சரசவியா விருதுகள்
1996 சிறந்த டெலிட்ராமா பாடகர் சுமதி விருதுகள்

சான்றுகள்

[தொகு]
  1. மாலினி, யமுனா (8 ஏப்ரல் 2006). "'Gajaman Nona' of our time". Dailynews.lk. Archived from the original on 2009-04-24. Retrieved 27 ஆகஸ்ட் 2012. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. Kolitha Bhanu Dissanayake, Ranga Chandrarathne (11 மார்ச் 2012). "The celestial voice that bears the tonal signature". Sundayobserver.lk. Archived from the original on 2016-03-04. Retrieved 27 ஆகஸ்ட் 2012. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Neela Wickramasinghe's 'Master Sir' at Nelum Pokuna Theatre பரணிடப்பட்டது 2021-09-21 at the வந்தவழி இயந்திரம். Lanka Help Magazine. 2012. 2015-04-12
  4. "Neela – the singing sensation". Dailynews.lk. 30 அக்டோபர் 2004. Retrieved 27 ஆகஸ்ட் 2012. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |access-date= (help)
  5. Sandun W. (14 மார்ச் 2012). "Neela Wickramasinghe's 'Master Sir' at Nelum Pokuna Theatre". Magazine.lankahelp.com. Archived from the original on 2012-05-31. Retrieved 27 ஆகஸ்ட் 2012. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. Chandrarathane, Ranga (16 டிசம்பர் 2007). "Separated and isolated by the lumpen culture". Sundayobserver.lk. Archived from the original on 2016-03-04. Retrieved 27 ஆகஸ்ட் 2012. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  7. "Neela Wickramasinghe.com". Themother.org. 21 செப்டம்பர் 2021. Archived from the original on 2014-12-18. Retrieved 21 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  8. "Keeping a promise 25 years on". Sunday Times. Retrieved 21 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. "Neela Wickramasinghe to be posted as Consul General in Milan". srilankamirror. Retrieved 21 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலா_விக்கிரமசிங்க&oldid=4246023" இலிருந்து மீள்விக்கப்பட்டது