நீலப்பச்சைப்பாசியுண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எதிர்சாயம் பூசப்பட்ட புரோகுளோரோகாக்கசு மயோவைரசெசின் எதிர்மின்னி நுண்வரைபடம் (Electron micrograph)

நீலப்பச்சைப்பாசியுண்ணி அல்லது நீபாவுண்ணி, என அழைக்கப்படும் நுண்ணுயிர்த்தின்னிகள், பாக்டீரியாக்களின் கட்டுப்பாட்டில் உதவுவதுப்போல் பாக்டீரியாக்களில் ஒன்றான நீலப்பச்சைப்பாசியையும் உறிஞ்சி அவைகளை அழிக்கிறது. நீலப்பச்சைப்பாசி நீர்நிலைகளில் பெரும்பாலும் காணப்படும் பாசிவகைகளாகும்., நீபாவுண்ணிகளைக் கண்டறியும் வரை தீநுண்மத்தினால் ஒளிச்சேர்க்கை உயிர்களுக்கு நோய்தாக்கத்தினை அறிய இருந்தது உயர்த்தாவரங்களின் திசுக்களும் அதன் பிறகு கண்டறியப்பட்ட சிலப் பாசிகளுமாகும்.

நீலப்பச்சைப்பாசி நீர்நிலைகளில் படர்ந்து பாசிபடர்ச்சியை உண்டுச்செய்து நீரை தூர்ந்துபோதல் நிலைக்கு கொண்டுசெல்கிறது. இந்நீலப்பச்சைப்பாசிகள் நீரிந்தரத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இதனால் அந்நீர்நிலையில் வாழும் பிற உயிர்களுக்கு உயிர்வளி கிடைக்காமல் செய்வதின் மூலம் அவைகளை அழிவிற்கு இட்டுச்செல்கிறது. இதனால் மிகப்பெறிய பொருள் இழப்பு மற்றும் சிக்கல்களை உருவாக்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கையின் படைப்பில் இந்நீபாவுண்ணிகள் பெரும்பங்காற்றுகிறது.

வரலாறு[தொகு]

இதை 1963ம் ஆண்டு சாஃபர்மான் மற்றும் மாரிசு, அதாவது நுண்ணுயிர்த்தின்னியான பாக்டீரியாக்களை உறிஞ்சி வாழக்கூடியவற்றை கண்டறிந்து குறைந்தது 50 ஆண்டுகள் கழித்து இந்நீபாவுண்ணிகளைக் கண்டறிந்தனர். இதனை இவர்கள் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள கழிவுநீர் நிலைப்பித்தல் குளத்தில் கண்டறிந்தனர். இவர்கள் கண்டறிந்த முதல் நீபாவுண்ணி லிங்பயா, ப்லெக்டோனீமா, பார்மீடியத்தை ஆதார உயிரியாய்க் கொண்ட LPP என்னும் நீபாவுண்ணிகளாகும்.

பெயர்க்காரணம்[தொகு]

இந்நீபாவுண்ணிகளின் பெயர்கள் அதனால் தாக்கப்படும் நீலப்பச்சைப்பாசிகளைக் கொண்டே அமைக்கப்படுகிறது. குறிப்பாக, இவைகள் லிங்பயா, ப்லெக்டோனீமா, பார்மீடியம் ஆகியவற்றைத் தாக்கக்கூடிய நீபாவுண்ணிகள் என்றால் அதற்கு முதல் ஆங்கில எழுத்தான LPP 1 என அழைக்கப்படுகிறது.

வகைப்பாடு[தொகு]

இந்நீபாவுண்ணிகளில் அதன் ஆதாரவுயிரியைக் கொண்டு வகைப்படுத்தலே இன்றும் உள்ளது. மேலும், LPP இல் ஊனீர் வகைப்பாட்டின் மூலம் மேலும் LPP1, LPP2 மற்றும் பல கண்டறியப்பட்டுள்ளன. LPP குழுக்களைத் தவிர்த்து SM1, AS1, N1, C1, AR1 மற்றும் A1 என பல அறியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் இதன் ஆதாரவுயிர்களைக் கொண்டே வகைப்படுத்தப்பட்டது.

நீபாவுண்ணிகள் வாழ்வாதரம் ஆதாரவுயிரி
(i) LPP குழு
LPP-1 கழிவுநீர் நிலைப்படுத்தல் குளம், இண்டியானா, அமெரிக்கா லிங்பயா, ப்லெக்டோனிமா மற்றும் பார்மீடியம்
LPP-2 கழிவுநீர் நிலைப்படுத்தல் குளம், இண்டியானா, அமெரிக்கா ஊனீர் வகைப்பாட்டில் வேறு என அறியப்பட்டவை
LPP-3 ருசியா ஊனீர் வகைப்பாட்டில் வேறு என அறியப்பட்டவை
LPP-4 பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா ஊனீர் வகைப்பாட்டில் வேறு என அறியப்பட்டவை
LPP-5 பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா ஊனீர் வகைப்பாட்டில் வேறு என அறியப்பட்டவை
(ii) G-II குழு
நீண்ட வாலினையுடைய கழிவுநீர், பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா ப்லெக்டோனீமா போரியானம்
பெயரிடப்படவில்லை நீரோடை, சப்பான் ஆசிலட்டோரியா ப்ரின்சப்சு
D-1 ச்காட்லாந்து LPP-1 ஐப் போன்றே உள்ளவை
(iii) N- குழு
C-1 கழிவுநீர், பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா சிலிண்டிரோச்பெர்மம் சிற்றினம்.
AR-1 கழிவுநீர், பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா அனபெனாப்சிச் சர்குலன்சு, ரபிடியாப்சிச் இண்டிகா
N-1 கழிவுநீர், பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், இந்தியா நாசுடாக் மச்கோரம்
(iv) SM-குழு
SM-1 கழிவுநீர் நிலைப்படுத்தல் குளம், இண்டியானா, அமெரிக்கா சினிகோகாகசு எலங்கேட்டசு, மைக்ரோசிச்டிச் ஆரோகினோசோ
SM-2 நன்னீர் சினிகோகாகசு எலங்கேட்டசு, மைக்ரோசிச்டிச் ஆரோகினோசோ
AS-1 கழிவுநீர் அனாசிச்டிச் நிடுலன்ச், சினிகாக்கசு சிடோரம்
AS-1 M கழிவுநீர் அனாசிச்டிச் நிடுலன்ச், சினிகாக்கசு சிடோரம் மற்றும் மை. ஆரோகினோசோ

வாழ்க்கைச் சக்கரம்[தொகு]

நீபாவுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சி T4, T2 ஆகியப் பாவுண்ணிகளை ஒத்தே இருக்கின்றன. மேலும் இதில் அதிகம் அறியப்பட்டதும் ஆராயாப்பட்ட்தும் LLP 1 நீபாவுண்ணிகளே ஆகும். இவை நீலப்பச்சைப்பாசிகளின் மேல் ஒட்டி இதன் டி. என். ஏ வை கலத்திரவத்தில் உட்செலுத்துகிறது. இதன் உட்செலுத்தும் முறை இன்றும் அறியப்படாமல் இருக்கிறது. இம்மூலக்கூறை உட்செலுத்தியவுடன் இதன் பலுகிப்பெருகல் தொடங்குகிறது. ஆதாரவுயிரியின் கரு உடனே சிதைக்கப்படாமல் முதலில் உள்ள 50% காடியால் கரையக்கூடியப் பொருளாய் மாற்றி பின் 7வது மணிநேரத்தில் முழுவதுமாக கரைக்கிறது. கடைசியாய் முழுவுரு பெற்றவுடன் ஆதாரவுயிரியின் கலச்சுவரை சிதைத்து வெளியேறுகிறது.

தோற்றம்[தொகு]

LPP குழுவைச்சேர்ந்த நீபாவுண்ணிகள் T3 மற்றும் T7 வடிவத்தில் ஒத்தும், அதன் தலைப்பாகம் ஐகோசாஈட்ரல் வடிவிலும் மற்றும் அதன் வால் பகுதி சில இடங்களில் நீண்டும் குறுகியும் காணப்படுகின்றன. இதன் அளவுகள் 20 லிருந்து 200 nm வரைக் காணப்படுகின்றன. பெரும்பாலும் அறியப்பட்டதில் இவைகளுக்கு ஈரிழைமூலக்கூறுகளை அதிகம் பெற்றிருக்கின்றன.

பயன்பாடு[தொகு]

இவை நீர்நிலைகளில் பாசிகளின் கட்டுப்பாட்டில் பெரும் பங்காற்றுகிறது. இவைகள் கட்டுப்படுவதால் இயற்கை சமநிலையில் காக்கப்படுகின்றன. இவைகளினால் பாசிபடற்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு நீர்நிலைகளில் வாழும் பிறவுயிர்களான மீன், மெல்லுடலிகள், மற்றும் ஏனைய உயிர்வளித் தேவையான உயிர்கள் மீட்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • Clokie MR, Mann NH (Dec 2006). "Marine cyanophages and light". Environ Microbiol. 8 (12): 2074–82. doi:10.1111/j.1462-2920.2006.01171.x. PMID 17107549
  • Padan E and M Shilo, 1973, Cyanophages - viruses attacking Blue Green Algae, Bacteriological Reviews, 37(3): 343 - 370
  • Johnston DW and M Potts, 1985, Host range of LPP cyanophages, International Journal of Systematic Bacteriology, 35(1): 76-78