நீலப்பசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலப்பசு[தொகு]

நீலப்பசு

வேறு பெயர்கள் நீல், நீல்கா, நீல்கை, போசிலேபஸ் டிராகோகாமேலஸ். இந்தியாவில் மட்டும் காணப்படும். இமயம் முதல் மைசூர் வரை காணப்படும். அழகாக இருக்காது.

அமைப்பு[தொகு]

தோல் உயர்ந்தும், இடுப்பு தாழ்ந்தும் இருக்கும். ஆண் ஏறக்குறைய 4 அடி உயரமிருக்கும். பெண் மிகச்சிறியது. பெண் கபில நிறத்தில் இருக்கும். முதிர்ச்சியடைந்த காளை கருஞ்சாம்பல் நிறமாக இருக்கும். கால்களிலே வெள்ளை நிற வளையமும் கன்னத்திலே இரண்டு வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். உதடு, மோவாய், காதின் உட்புறம், வாலின் அடிப்பகுதியும் வெண்மையானவை.

வாழிடம்[தொகு]

அடர்ந்த காடுகளில் இருப்பதில்லை. சிறிதளவே மரங்களுள்ள குன்றுகளிலும், சமமான அல்லது சிறிது தூரம் உயர்ந்தும் உள்ள புல்வெளிகளிலும் வாழும். பயிர் நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதுண்டு.

உணவு[தொகு]

புல்லையும், இலை கனி ஆகியவற்றையும் மேயும். இலுப்பைப் பூவை விருப்பத்துடன் தின்னும். சாதாரணமாக 4-10 மாடுகள் சிறு மந்தைகளாக உலவும். சில மந்தைகளில் 20 கூட இருப்பதுண்டு. எல்லாக்காலங்களிலும் கன்று போடும். கர்ப்ப காலம் 8-9 மாதம்.

[1]

பகுப்பு 1. கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்

  1. கலைக்களஞ்சியம் தொகுதி 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலப்பசு&oldid=2363133" இருந்து மீள்விக்கப்பட்டது