நீலகிரி பொந்து பாம்பு
நீலகிரி பொந்து பாம்பு | |
---|---|
![]() | |
நீலகிரி பொந்து பாம்பு அல்லது பெராடெட் கேடயவால் பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | செதிலுடைய ஊர்வன |
குடும்பம்: | யூரோபெல்டிடே |
பேரினம்: | பெலிக்டுரரசு |
இனம்: | பெ. பெரோடெடி |
இருசொற் பெயரீடு | |
பெலிக்டுரரசு பெரோடெடி துமெரில், பைப்ரன், துமெரில், 1854 | |
வேறு பெயர்கள் | |
|
நீலகிரி பொந்து பாம்பு (Plectrurus perrotetii-பெலிக்டுரரசு பெரோடெட்டி) என்பது பெரோடெட்சு கேடயவள் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது இந்தியாவில் உள்ள ஓர் விசமற்ற மிகச்சிறிய பாம்பு சிற்றினமாகும். இந்த பாம்பு இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய ஓர் அகணிய உயிரியாகும்.
பெயரிடல்[தொகு]
பிரெஞ்சு இயற்கையியலாளர் ஜார்ஜ் சாமுவேல் பெரோட்டெட்டின் (1793-1867) நினைவாக இந்த பாம்பின் சிற்றினப் பெயரான பெரோடெட்டி இடப்பட்டது.[2]
பரவல்[தொகு]
இது இந்தியாவின் தெற்கு பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.
விளக்கம்[தொகு]
இப்பாம்புகள் அளவில் சிறியதாக இருக்கும். இதன் நீளம் அதிகபச்சமாக 44 செமீ வரை (17.5 அங்குலம்) வளரக்கூடியது. பழுப்பு நிறத்தில் இருக்கும், கூரான தலை மற்றும் மழுங்கிய வால்கொண்டிருக்கும். இதன் உடலிலில் பளபளப்பான செதில்கள் இருக்கும்.
உயிரியல்[தொகு]
இப்பாம்புகள் பொதுவான புழுப்பாம்பு போல இருக்கும். சிலர் இதை மண்புழு என தவறாக கருதவும் இடம் உள்ளது. மலைக்காடுகளில் இதன் வாழிடம் அழிக்கப்படுவதால் இது அருகிவரும் இனமாகிவிட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வார்ப்புரு:EMBL species. www.reptile-database.org
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. (Plectrurus perroteti, p. 203).
வெளி இணைப்புகள்[தொகு]
- பார்க்க
- Plectrurus perrotetii at the Reptarium.cz Reptile Database. Accessed 13 December 2007.
மேலும் காண்க[தொகு]
- Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ...Uropeltidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. (Plectrurus perroteti, p. 161).
- Duméril A-M-C, Bibron G, Duméril A[-H-A] (1854). Erpétologie générale ou histoire naturelle complète des reptiles. Tome septième.—Première partie. Comprenant l'histoire des serpents non venimeux [= General Herpetology or Complete Natural History of the Reptiles. Volume 7, Part I. Containing the Natural History of the Nonvenomous Snakes]. Paris: Roret. xvi + 780 pp. (Plectrurus perroteti, new species, pp. 167–168). (in French).
- Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Plectrurus perroteti, p. 71).