நீலகிரி துர்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1794 இல் வரையப்பட்ட நீல துர்கம்

நீலகிரி துர்கம், நீலகிரி, நீல துர்கம் ( Nilgiri, Neel Droog) என்பது இந்தியா, தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திற்கு அருகே உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இந்த மலையும், இதன் இருகே உள்ள ஊரும் நீல்கிரி என்றே அழைக்கபடுகின்றன.

அமைவிடம்[தொகு]

இந்த மலையும் ஊரும் அஞ்செட்டி துர்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து ஒரு 36 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 299 கிலோமீடர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது.[சான்று தேவை] இக்கோட்டையை பிரித்தானியர்கள் 1792இல் கைப்பற்றினர்.[2] இந்த மலையில் கோட்டை மதிலின் மிச்ச சொங்களே தற்போது எஞ்சியுள்ளன. மலையின் மீது ஒரு அனுமன் கோயில் உள்ளது. அண்மையில் மலையின் பின்புறத்திலிருந்து அனுமார் கோயிலுக்கு செல்ல மலைப் பாதை அமைக்கபட்டுள்ளது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_துர்கம்&oldid=3597783" இலிருந்து மீள்விக்கப்பட்டது