நீலகிரி உயிர்கோளக் காப்பகம்
Appearance
நீலகிரி உயிர்கோளக் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு சர்வதேச உயிர்கோளக் காப்பகம் ஆகும்.இந்த உயிர்கோளக் காப்பகம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[1]
புவியியல்
[தொகு]நீலகிரி உயிர்கோளக் காப்பகத்தின் மொத்த பரப்பளவு 5,520 சதுர கீ.மீ. ஆகும், இதில் தமிழ் நாட்டில் 2537.6 சதுர கீ.மீ. யும் கர்நாடகாவில் 1527.4 சதுர கீ.மீ. யும் மற்றும் கேரளாவில் 1455.4 சதுர கீ.மீ. யும் உள்ளது. இந்த உயிர்கோளக் காப்பகத்தின் புவி அமைப்பு 11o 36' முதல் 12o 00' வடக்கு அட்சரேகை மற்றும் 76o 00' முதல் 77o 15' கிழக்கு நிரைக்கோடு ஆகும். நடு பகுதி: 11°30′00″N 76°37′30″E / 11.50000°N 76.62500°E [2]
பாதுகாக்கப்பட்ட இடங்கள்
[தொகு]நீலகிரி உயிர்கோளக் காப்பகத்தினுள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட இடங்கள்
- முதுமலை தேசிய பூங்கா மற்றும் முதுமலை வனஉயிர் உய்விடம் (321.1 சதுர கீ.மீ.)
- வயநாடு வனஉயிர் உய்விடம் (344 சதுர கீ.மீ.)
- பந்திப்பூர் தேசிய பூங்கா (874 சதுர கீ.மீ.)
- நாகரகொளை தேசிய பூங்கா (78 சதுர கீ.மீ.)
- அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (89.52 சதுர கீ.மீ.)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris.It includes the Mudumalai,Mukurthi,Wayanad and Bandipur national parks retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
- ↑ Tamil Nadu Forest Department (2007) Wild Biodiversity, reftieved 9/7/2007 NILGIRIS BIOSPHERE RESERVE