நீர் வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீர் வட்டணை : ஊற்றுகள்,ஆறுகள்,ஏரிகள்,கடல்கள்,நிலத்தடி நீர்,போன்றவை சேர்ந்து தான் புவியின் நீர் உறை ஆகும்.நீர் கோலம் என்பது இவைகள் எல்லாவற்றையும் குறிக்கும் பொதுப் பெயர்.கடல்கள்,ஆறுகள்,ஏரிகள் ஆகியவற்றிலுள்ள நீர் சூரிய வெப்பத்தினால் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருக்கிறது.இந்த ஆவி வளிக்கொலத்தில் கலந்து அங்கு சுருங்கி உறைந்து மேகமாகத் திரண்டு மழையாக,ஆலங்கட்டியாக,உரைபணியாக,மீண்டும் புவியை அடைகிறது.

இந்த வட்டணை நிகழ்ச்சியின் காரணமாகப் புவிக்கு எப்போதும் புதிய நீர் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.சூரிய வெப்பத்தினால் நீர் ஆவியாகிக் காற்றோடு கலக்கிறது.நீரவியைச் சுமந்த காற்று மேலே கிளம்பிச்செல்லும் போது வளிக்கோளத்தை அடைகின்றது.இவ்வாறு நீரவியைச் சுமந்துக்கொண்டு காற்று மேலே கிளம்பிச்செல்லும்போது அது விரிவடைந்து குளிர்கிறது.வெப்ப நிலை குறைந்ததும் காற்றிற்கு நீரவியைத் தங்கிச் செல்லும் திறனும் குறைந்துவிடுகிறது.இறுதியில் காற்று பனி நிலையை அடைகிறது.இந்த நிலையில் காற்றில் நீர் அதிகமாக இருக்கும்.இதற்கு மேல் காற்றினால் நீரைத் தாங்கிக் கொள்ள முடியாத தெவிட்டு நிலை.காற்று மேலும் குளிர்சியடையும்போது நீராவி சுருங்கி உறைந்து சிறு பனி தூள்களாக,நீர்த் திவலைகளாக மாறுகிறது.இந்த திவலைகள் ஒன்று திரண்டு மேகங்களாக உருப்பெறுகின்றன.மேகங்களிருந்து நீர்த் திவலைகள் மழைத்துளிகளாக மாறி நிலத்தை அடைகிறது.நீர் வட்டணை என்பது ஒரு நிரந்தர சுழற்சி இயக்கம்.புவியில் நீர் தோன்றிய நாளிலிருந்து இது நடைப் பெற்று வருகிறது.

நீர் வட்டணை :

   சூரிய வெப்பம்.
   படிவாக்கம் பற்றி மழை பெய்தல். 
   கடல்கள். 
   நிலத்தடி நீர்.
   ஆறுகள்,ஏரிகள்.
   நிலப்பரப்பு.
   நீராவிப்போக்கு.
   கடல்கள் ஆறுகளிலிருந்து ஆவியாகி உயரே கிளம்பிச் செல்லுதல்.
   நீராவி பனித்திவலை நீர்திவளையாகி மேகமாகத் திரளுதல்.
   மழை மேகம்.

பார்வை நூல்:புவி காற்று தண்ணீர் =என்.ஸ்ரீநிவாஸன் =வித்யா பதிப்பகம் =சென்னை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_வட்டணை&oldid=2394779" இருந்து மீள்விக்கப்பட்டது