நீர் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்பாதுகாப்பை மையமாகக் கொண்டு 1960 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க அஞ்சல் வில்லை

நீர்பாதுகாப்பு (Water conservation) என்பது நீரின் இயற்கை வளத்தை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கும், நீர்க்கோளத்தை பாதுகாப்பதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால மனித சமுதாயத்திற்கான நீர் பற்றாக்குறையை ஒழித்து அவர்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அவசியமான அனைத்து கொள்கைகள், உத்திகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளைக் குறிக்கிறது. மக்கள்தொகை, குடும்பத்தின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகிய அனைத்து காரணிகளும் தண்ணீரின் பயன்பாட்டு அளவை பாதிக்கின்றன. காலநிலை மாற்றம் போன்ற காரணிகள் இயற்கையான நீர் ஆதாரங்களில் குறிப்பாக உற்பத்தி மற்றும் விவசாயப்பாசன நடவடிக்கைகளில் அழுத்தத்தை அதிகரித்துள்ளன.[1]பல நாடுகள் ஏற்கனவே தண்ணீர் பாதுகாப்பை இலக்காகக் கொண்ட கொள்கைகளை வகுத்தும் செயல்படுத்தியும் வெற்றி பெற்றுள்ளன.[2]தண்ணீரை பாதுகாப்பதற்கான முக்கிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு: நீர் இழப்பு ஏற்படுத்துதல், நீர் பயன்பாடு மற்றும் நீர் வளங்களை வீணாக்குதல் போன்ற நடவடிக்கைகளை உபயோகமான அளவுக்குக் குறைத்தல்; [3]நீரின் தரத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்துவதை தவிர்ப்பது; மேலும் நீரின் பயன்பாட்டை குறைக்கும் அல்லது மேம்படுத்தும் நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல்;[4][5]போன்றவற்றை இந்நடவடிக்கைகளாகக் கூறலாம். வீடுகளுக்கும் வணிகமற்றும் விவசாயப் பயன்பாடுகளுக்கும் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமூகத் தீர்வுகளில் ஈடுபடும் நீர்பாதுகாப்பு திட்டங்கள் பொதுவாக உள்ளூர் மட்டத்தில் நகராட்சி நீர்பயன்பாடுகள் அல்லது பிராந்திய அரசாங்கங்களால் தொடங்கப்படுகின்றன. பொதுமக்களிடம் பரப்புரை பிரச்சாரங்கள் தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும்போது படிப்படியாக அதிக விலை நிர்ணயம் செய்து வசூலித்தல் போன்ற முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் கட்டணங்கள் அல்லது புல்வெளி நீர்பாசனம் மற்றும் கார்கழுவுதல் போன்ற வெளிப்புற நீர்பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் விதித்தல் போன்றவை சிலபொது உத்திகளாகும்.

நோக்கங்கள்[தொகு]

நீர் பாதுகாப்பு முயற்சிகளின் நோக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியும் அமைகின்றன.

  • ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து எடுக்கப்படும் நன்னீரின் அளவு அதன் இயற்கையான மாற்று விகிதத்தை மீறாமல் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்கிறது.
  • நீர் இறைத்தல், நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் போன்ற செயல்களுக்கு கணிசமான அளவுக்கு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் மொத்த மின் நுகர்வில் 15 சதவீதத்திற்கும் மேல் நீர் மேலாண்மைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மனித நீர் பயன்பாட்டை குறைப்பதால் உள்ளூர் வனவிலங்குகள் மற்றும் இடம்பெயரும் நீர் பறவைகளுக்கான நன்னீர் வாழ்விடங்களை பாதுகாக்க உதவும். இதனால் தண்ணீரின் தரத்தையும் பாதுகாக்க இயலும்.[6]

உத்திகள்[தொகு]

தண்ணீரை சேமிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • நீர் இழப்பு ஏற்படுத்துதல், நீர் பயன்பாடு மற்றும் நீர் வளங்களை வீணாக்குதல் ஆகிய நடவடிக்கைகளை போதுமான நன்மை தரும் அளவிற்கு குறைத்தல் ஒரு முக்கியமான உத்தியாகும்.[3]
  • நீரின் தரத்திற்கு சேதத்தை உண்டாக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தவிர்க்கலாம்.
  • நீரின் பயன்பாட்டை குறைக்கும் அல்லது நன்மை பயக்கும் பயன்பாட்டை மேம்படுத்தும் நீர்மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தலாம்.[4][5]
  • நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.[7]குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளகும்.

பலநாடுகளில் உள்ள பலர் சுத்தமான பாத்திரங்களை வைத்து, மழைநீரை சேகரித்து அதை கொதிக்கவைத்து குடிக்கின்றனர். தேவைப்படுபவர்களுக்கு தண்ணீர் வழங்கவும் இந்நடைமுறை பயனுள்ளதாக இருக்கும்.[7]

அறுவடை செய்து வடிகட்டிய மழைநீரை கழிப்பறை, வீட்டுத்தோட்டம், புல்வெளிப் பாசனம், சிறு விவசாயம் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.[7]

நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்.[8]மழைப்பொழிவு ஏற்படும்போது, தண்ணீர் மண்ணில் ஊடுருவி நிலத்தடிக்குச் செல்கிறது. இந்த பூரித மண்டலத்தில் உள்ள நீர் நிலத்தடிநீர் என்று அழைக்கப்படுகிறது.[8]இந்த நிலத்தடி நீர் மாசுபடுவதால் நிலத்தடிநீர் வழங்கலை புதிய குடிநீரின் ஆதாரமாகப் பயன்படுத்தமுடியாது போகும். மற்றும் இந்த அசுத்தமான நிலத்தடிநீர் தூய்மையாகும் இயற்கையான மீளுருவாக்கத்திற்கு மீண்டும் பல ஆண்டுகள் ஆகலாம்.[9]சேமிப்புத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி அமைப்புகள், கட்டுப்பாடற்ற அபாயகரமான கழிவுகள், நிலப்பரப்புகள், வளிமண்டல அசுத்தங்கள், இரசாயனங்கள் மற்றும் சாலை உப்புகள்[9]ஆகியவை நிலத்தடிநீர் மாசுபாட்டின் சாத்தியமான ஆதாரங்களில் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிடைக்கும் நன்னீர் நிரம்புவதும் குறைகிறது எனவே நிலத்தடி நீர் வளங்களை மாசுபடாமல் பாதுகாப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நீர்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும்.[7]

நிலத்தடி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கான நிலையான முறைகளை நடைமுறைப்படுத்துவது நீர் பாதுகாப்பிற்கான கூடுதல் உத்தியாகும்.[7]புவியீர்ப்பு விசையின் காரணமாக நிலத்தடி நீர் பாய்ந்து இறுதியில் ஓடைகளில் வெளியேற்றப்படுகிறது.[8]நிலத்தடி நீரின் அதிகப்படியான உந்துதல் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு வழிவகுக்கிறது. மேலும் மேலும் இந்நட்டவடிக்கை தொடர்ந்தால் நீர்வளம் வெளியேற்றிவிடும்.[7]நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் இணைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு ஏரிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர் விநியோகத்தை குறைக்கலாம்.[9]கடலோரப்பகுதிகளில், நிலத்தடி நீரை அதிகமாக உந்தி எடுப்பதால் உப்புநீர் உட்புகுதல் அதிகரிக்கலாம். இதன் விளைவாக நிலத்தடி நீர்வழங்கல் மாசுபடுகிறது.[9]நீர் சேமிப்பில் நிலத்தடி நீரின் நிலையான பயன்பாடும் அவசியமாகும்.

நீர் பாதுகாப்பு மூலோபாயத்தின் ஓர் அடிப்படை கூறு பல்வேறு நீர் திட்டங்களின் தகவல்தொடர்பும் கல்விவெளிப்பாடுமாகும். நிலமேலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவியலைக் கற்பிக்கும் தகவல் தொடர்புகளை வளர்ப்பது நீர்பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் மற்றொருமுக்கியமான உத்தியாகும்.[10]நீர் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான அறிவியலைத் தொடர்பு கொள்வதும், அந்த அமைப்பைப் பாதுகாக்க ஒரு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதலும் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் இது சரியான ஒரு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்யும்.[10]

வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மிதமான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பல உயிரினங்கள் உள்ளன.[11]கூடுதலாக, பல நன்னீர் உயிரினங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதால் நீர்மாசுபாட்டின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.[11]

" உலக தண்ணீர் நாள் " ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாதம் 22 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.[12]

சமூகத் தீர்வுகள்[தொகு]

நியூமெக்சிகோ நாட்டில் சொட்டுநீர் பாசனமுறை

சமூகத்தீர்வுகளில் ஈடுபடும் நீர்பாதுகாப்பு திட்டங்கள் பொதுவாக உள்ளூர் மட்டத்தில் நகராட்சிநீர் பயன்பாடுகள் அல்லது பிராந்திய அரசாங்கங்களால் தொடங்கப்படுகின்றன. பொதுமக்கள் பரப்புரை பிரச்சாரங்கள் முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் கட்டணங்கள் அல்லது புல்வெளி நீர்ப்பாசனம் மற்றும் கார்கழுவுதல் போன்ற வெளிப்புற நீர் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் விதித்தல் போன்றவை பொது உத்திகளாகும். வறண்ட காலநிலையில் உள்ள நகரங்களில், வெளிப்புற நீர்பயன்பாட்டை குறைக்க புதியவீடுகளில் இயற்கை காட்சிகளமைத்தல் அல்லது இயற்கை நிலத்தை இரசிக்கும் நிலத்தோற்றங்களை நிறுவுதல் தேவைப்படுகிறது அல்லது ஊக்குவிக்கப்படுகிறது.[13]கலிஃபோர்னியாவில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற வெளிப்புறநீர் பயன்பாடு குடியிருப்புகளில் நிகழ்கிறது. வீடுகள் மற்றும் வணிகங்களுக்குச் செல்வதற்கான காரணத்தை இது விளக்குகிறது.[14]

உலகளாவிய நீர் அளவீடு ஓர் அடிப்படை பாதுகாப்பு இலக்கு ஆகும். குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் நீர் அளவீடுகளின் பரவலானது உலகம் முழுவதும் கணிசமாக வேறுபடுகிறது. சமீபத்திய ஆய்வுகள் ஐக்கிய இராச்சியத்தில் குடும்பங்களில் 30% சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் நீர்வழங்கல் அளவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[15]தனிப்பட்ட நீர் அளவீட்டு கருவிகள் பெரும்பாலும் தனியார் கிணறுகள் அல்லது பல குடும்ப கட்டிடங்களில் நடைமுறைக்கு மாறானதாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அதன் மதிப்பீட்டின் படி அளவீடு மட்டும் 20 முதல் 40 சதவிகிதம் வரை நுகர்வை குறைக்கமுடியும் என்கிறது.[16]நீர் உபயோகம் குறித்து நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நீர் கசிவைக் கண்டறிந்து உள்ளூர் மயமாக்குவதற்கும் அளவீடு ஒரு முக்கியமான வழியாகும். நீர் பயன்பாட்டில் வீணாகாமல் இருக்க நிதி ஊக்குவிப்பதன்மூலம் நீர் அளவீடு சமுதாயத்திற்குப் பயனளிக்கும்.[17]

உலகின் 70% நன்னீர் பயன்பாட்டில் பயிர் நீர்ப்பாசனம் பங்குவகிக்கிறது என்ற உண்மையின் வெளிச்சத்தில், நீர் பாதுகாப்பு முயற்சிகள் முதன்மையாக விவசாயிகளை நோக்கி இருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.[18]பெரும்பாலான நாடுகளின் விவசாயத்துறை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் தண்ணீர் மானியங்கள் பொதுவானவை. விவசாயிகள் அதிக நீர்-திறனுள்ள பயிர்களை வளர்க்கவும், குறைந்த வீணான நீர்ப்பாசன உத்திகளைக் கடைப்பிடிக்கவும் விவசாயிகளை கட்டாயப்படுத்த அனைத்து மானியங்களையும் நீக்குமாறு பாதுகாப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[19]

புதிய தொழில் நுட்பம் நுகர்வோருக்கு சில புதிய விருப்பங்களை முன்வைக்கிறது. கழிப்பறையைப் பயன்படுத்தும்போது முழுபீய்ச்சு மற்றும் அரைபீய்ச்சு போன்ற அம்சங்கள் நீர்நுகர்வு மற்றும் கழிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இத்தகைய நவீன தொழில் நுட்பம் ஒரே சுழற்சியில் பல்வேறு பணிகளுக்கு தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

நீரை வீணாக்குவதைக் குறைக்க உதவும் நவீன தெளிப்பு கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன: பழைய தெளிப்புக் கருவிகள் நிமிடத்திற்கு 5-10 கேலன்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கிடைக்கும் புதிய சாதனங்கள் நிமிடத்திற்கு 2.5 கேலன்களை மட்டுமே பயன்படுத்துகின்றன.[20]சமமான நீர்பிரிப்பையும் வழங்குகின்றன. கருவியில் உள்ள தண்ணீரை நேரடியாக மறுசுழற்சி செய்வது மற்றொரு முறையாகும். அதாவது குழாய் மற்றும் வடிப்பானைக் கொண்ட அரைமூடிய அமைப்பு இதற்காகப் பயன்படுகிறது. இத்தகைய அமைப்பு நீர்தெளிப்பு நீர்மறுசுழற்சி மழை என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீரை மறுசுழற்சி செய்வதோடு, நீரின் வெப்பமும் இம்முறையில் மீண்டும் பயன்படுத்துகிறது.[21][22]

தண்ணீரைச் சேமிப்பதற்கான மிகச் சிறந்தவழி, தண்ணீரைப் பயன்படுத்தும் நடத்தையைக் குறைப்பதேயாகும். (எ.கா. குறுகிய மழைப் பொழிவு)[23]கழிப்பறைகளை மாற்றுவது, துவைப்பிகளை மாற்றியமைப்பது போன்றவற்றை வல்லுநர்கள் மிகவும் திறமையானவழிகள் என்று பரிந்துரைக்கின்றனர். இரண்டு வீட்டு உபயோக இறுதிப்பதிவு ஆய்வுகள் மூலம் அமெரிக்காவில் இது நிருபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குரிய நீர்சேமிப்பு தொழில் நுட்பங்களில் பின்வருவன அடங்குகின்றான:

  • குறைந்த ஓட்டம் கொண்ட மழைத்தாரைகள் சில நேரங்களில் ஆற்றல் திறன் கொண்ட தூவாலைக் குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
  • குறைந்த பீய்ச்சுக் கழிப்பறைகள், உரமாக்கும் கழிப்பறைகள் மற்றும் எரியூட்டும் கழிப்பறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வழக்கமான மேற்கத்திய பீய்ச்சுக் கழிப்பறைகள் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துவதால், உரமாக்கல் கழிவறைகள் வளர்ந்த நாடுகளில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • இரட்டைப் பீய்ச்சுக் கழிவறைகளில் இரண்டு பொத்தான்கள் அல்லது வெவ்வேறு நிலைகளில் தண்ணீரைப் பறிக்க கைப்பிடிகள் அடங்கிய கழிவறைகள் பயன்பாடு. வழக்கமான கழிப்பறைகளை விட இரட்டைப்பீய்ச்சுக் கழிவறைகள் 67% குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.
  • குறைந்த நீரை பயன்படுத்தும்போது "ஈரமாக்கும் திறனை" பராமரிக்க நீர் ஓட்டத்தை நுண்ணிய துளிகளாக உடைக்கும் குழாய் காற்றாடிகள். ஒரு கூடுதல் நன்மை என்ன வென்றால், இவை கைகள் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் போது தண்ணீர் தெறிப்பதைக் குறைக்கின்றன.
  • கடல்நீர் அல்லது சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கழிப்பறைகள் போன்ற இடங்களில் நீர்சுத்தப்படுத்துதல் மூலம் மறு பயன்பாடு செய்தல்
  • கழிவுநீர் மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி அமைப்புகள் பின்வருவனவற்றை அனுமதிக்கிறது:
  1. கழிவறைகளை கழுவுவதற்கு அல்லது தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வீட்டுக்கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துதல்,
  1. நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்தல்
  • மழை நீர் சேகரிப்பு
  • அதிக திறன் கொண்ட துணி துவைப்பிகள்
  • வானிலை அடிப்படையிலான நீர்ப்பாசனக் கட்டுப்பாட்டாளர்கள்
  • தோட்டக் குழாய் முனைகள், தண்ணீரை பயன்படுத்தாதபோது, ஒரு குழாய் ஓடவிடாமல் அதை மூடும்.
  • கழுவும் தொட்டிகளில் குறைந்த நீர் ஓட்டக் குழாய்கள் பயன்படுத்துதல்.
  • நீச்சல்குள உறைகள் ஆவியாவதைக் குறைக்கும். நீர், ஆற்றல் மற்றும் இரசாயனச் செலவுகளைக் குறைக்கவும் குளத்தில் நீரை சூடாக வைத்திருக்கவும் உதவும்.
  • தானியங்கி குழாய் என்பது குழாயில் உள்ள நீர் கழிவுகளை அகற்றும் நீர் பாதுகாப்பு குழாயை குறிக்கும். இது கைகளை பயன்படுத்தாமல் குழாய்களை பயன்படுத்துவதை தானியங்குபடுத்துகிறது.

சிறப்பு நீர் அளவீட்டுக் கருவிகள் வீடுகளில் நீர் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தொழில் நுட்பமாகும். எசுப்பானிய நாட்டு வலென்சியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, வீடுகளில் தண்ணீரை பாதுகாப்பதற்கான சிறப்பான நீர் அளவீட்டுக் கருவி அடிப்படையிலான நீர் நுகர்வின் சிறப்பைக் காட்டுகிறது. சிறப்பு அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்பட்ட வீடுகளில் தண்ணீர் சேமிப்பு அதிகரிப்பதாக கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. மக்கள் தங்கள் வீட்டில் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டவும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் வழிகளைப் பரிந்துரைக்கவும், உடல் ரீதியான வெகுமதிகளுடன் தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கவும் இந்ததொழில் நுட்பம் செயல்படுகிறது.

வணிகப் பயன்பாடுகள்[தொகு]

வீடுகளில் பயன்படுத்தப்படும் பயனுள்ள பல நீர்சேமிப்பு சாதனங்கள் வணிக நீர்சேமிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். வணிகத்திற்கான பிறநீர்சேமிப்பு தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:

  • தண்ணீர் இல்லாத சிறுநீர் கழிப்பிடங்கள் (பள்ளிகளிலும் அமைக்கலாம்)
  • தண்ணீர் இல்லாமல் கார்கழுவும் நுட்பங்கள்.
  • அகச்சிவப்பு அல்லது காலால் இயக்கப்படும் குழாய்கள், சமையலறை அல்லது குளியலறையில் துவைக்க சிறிய வெடிப்பு தண்ணீரைப் பயன்படுத்தி தண்ணீரை சேமிக்க முடியும்.
  • அழுத்தப்பட்ட நீர் துடைப்பங்கள், நடைபாதைகளை சுத்தம் செய்ய குழாய்க்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
  • எக்சு கதிர் படல செயலி மறுசுழற்சி அமைப்புகள்.
  • குளிரூட்டும் கோபுர கடத்துத்திறன் கட்டுப்படுத்திகள்,
  • மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளில் பயன்படுத்த நீர்சேமிப்பு நீராவி கிருமிநாசினிகள்,
  • மழை நீர் சேகரிப்பு
  • தண்ணீருக்கு தண்ணீர் வெப்பப் பரிமாற்றிகள் .

தொழில் துறை மற்றும் வணிக பயன்பாட்டு பயன்பாட்டில் நீர்-சேமிப்பு மாற்றங்களை செயல்படுத்துவது முக்கியம். அதிக வருமானம் கொண்ட நாடுகள் தொழில்துறை பயன்பாட்டிற்கு சுமார் 59% தண்ணீரை பயன்படுத்துகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தொழில்துறை பயன்பாட்டிற்கு 8% பயன்படுத்துகின்றன.[24]தொழில் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுத்தக்கூடிய ஒரு பெரியமாற்றம் நீர் அமைப்புகளின் மதிப்பீட்டையும் பராமரிப்பையும் மேம்படுத்துவதாகும்.[25]நீர்-திறனுள்ள பயன்பாடுகளைச் சேர்ப்பது எளிது, ஆனால் இது சரியான பராமரிப்பு மற்றும் ஆய்வு போன்ற நீண்டகால மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு பல்வேறு இலக்குகள் மற்றும் அளவுகோல்களைச் சேர்ப்பது உட்பட நீர்பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கலாம்.[25]ஏதேனும் கசிவுகள் அல்லது பிரச்சனைகளுக்கு வழக்கமான இடைவெளியில் நீர்-நுகர்வு அமைப்புகளை சரி பார்க்கவேண்டும் என்பது தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள் செய்யக்கூடிய மற்றொரு மாற்றமாகும்.[25]இதைச் செய்வதன் மூலம், தண்ணீர் தேவையில்லாமல் வீணாகாமல் இருப்பதையும், பயன்பாட்டு கட்டணங்களுக்கு அதிக பணம் செலவழிக்கப்படுவதையும் இது உறுதிசெய்யும்.

தொழில் துறை மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்படுத்தக்கூடிய மூன்றாவது மாற்றம் மழை உணரியை நிறுவுவது. இந்த உணரி மழைப்பொழிவு எப்போது ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, பொதுவாக நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யும் திட்டத்தை நிறுத்தவேண்டும். மழை முடிந்ததும், உணரி நிரலை மீண்டும் இயக்கி அதன் இயல்பான நீர்ப்பாசன சுழற்சியை மீண்டும் தொடங்கவேண்டும்.[26]

வேளாண்மை பயன்பாடுகள்[தொகு]

மேல்நிலை நீர்ப்பாசனம், மைய வடிவமைப்பு

நீர் பாசனத்தில் தண்ணீர் மிக முக்கியமான பகுதியாகும். தாவரங்கள் எப்பொழுதும் நிலத்தடி நீரை அதிகம் எடுத்துக் கொள்கின்றன. எனவே நிலத்தடி நீரை மீண்டும் அவ்விடத்தில் நிரப்பவேண்டும். பயிர் பாசனத்திற்கு, உகந்த நீர்திறன் என்பது ஆவியாதல், நீரோட்டம் அல்லது நிலத்தடி வடிகால் காரணமாக ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதுவும் உற்பத்தியை அதிகப்படுத்துவதுமாகும்.[27]தாவரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைத் தீர்மானிக்க, குறிப்பிட்ட பயிர் திருத்தக்காரணிகளுடன் இணைந்து ஓர் ஆவியாக்கும் தட்டு பயன்படுத்தப்படலாம்.

வெள்ளப் பாசனம், பழமையான மற்றும் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். இம்முறை பெரும்பாலும் நீர் விநியோகத்தில் மிகவும் சீரற்றதாக உள்ளது, ஏனெனில் ஒரு வயலின் சில பகுதிகள் மற்ற பகுதிகளுக்கு போதுமான அளவு வழங்குவதற்காக அதிகப்படியான தண்ணீரைப் பெறலாம். மேல் நிலை நீர்ப்பாசனம், சுழல் மையம் அல்லது பக்கவாட்டு-நகரும் தெளிப்பான்களைப் பயன்படுத்தி, மிகவும் சமமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தண்ணீர் விநியோக முறைக்கான திறனைக் கொண்டுள்ளது. சொட்டு நீர்பாசனம் மிகவும் விலையுயர்ந்த மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகையாகும். ஆனால் குறைந்த இழப்புகளுடன் தாவர வேர்களுக்கு தண்ணீரை வழங்கும் திறனை இது வழங்குகிறது. குறிப்பாக வீட்டுத் தோட்டம் செய்பவர்களுக்கு சொட்டுநீர் பாசனம் பெருகிய முறையில் பயன்படுத்துகையில் மலிவு விலையில் முடிகிறது. தண்ணீர் விலை உயர்விலும் அனைத்து திசைகளிலும் தெளிக்கும் நீர்ப்பாசன முறைகளை மாற்றும் போது சொட்டுநீர் பாசன முறைகளைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 30,000 கேலன் தண்ணீரை சேமிக்கமுடியும்.[28][29]சொட்டுநீர் பாசனத்தைப் போல ஊற வைக்கும் குழல்களைப் பயன்படுத்துதல் போன்ற மலிவான பிற பயனுள்ள முறைகளும் உள்ளன.

நீர்ப்பாசன முறைகளை மாற்றும் போது சொட்டுநீர் பாசன முறைகளைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 30,000 கேலன் தண்ணீரை சேமிக்கமுடியும்.[30][31]சொட்டுநீர் பாசனத்தைப் போல ஊற வைக்கும் குழல்களைப் பயன்படுத்துதல் போன்ற மலிவான பிற பயனுள்ள முறைகளும் உள்ளன.

நீர்ப்பாசன முறைகளை மாற்றுவது ஒரு விலையுயர்ந்த செயலாக இருப்பதால், பாதுகாப்பு முயற்சிகள் பெரும்பாலும் இருக்கும் அமைப்பின் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. கச்சிதமான மண்ணை வளமாக்குதல், நீரோட்டத்தை தடுக்க பள்ளத்தாக்குகளை உருவாக்குதல் மற்றும் நீர்பாசன அட்டவணையை மேம்படுத்த மண்ணின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு உணரிகளை பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.[16] பொதுவாக செயல்திறனில் பெரிய ஆதாயங்கள் இருக்கும் நீர்ப்பாசன முறையின் அளவீடு மற்றும் மிகவும் பயனுள்ள மேலாண்மை மூலம் சாத்தியமாகும். பசுந்தாள் உரங்கள், தழைக்கூளம் மற்றும் பயிர் எச்சங்கள் மற்றும் கால்நடை உரங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் மேம்படுத்தப்பட்ட மண்ணின் கரிமப்பொருட்கள் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனையும், மழை பெய்யும் போது தண்ணீரை உறிஞ்சும் திறனையும் அதிகரிக்கிறது" என்று 2011 ஆம் ஆண்டுக்கான ஐநாவின் பசுமைப் பொருளாதார அறிக்கை கூறுகிறது. இது பருவத்தில் வறண்ட காலங்களில் மழை மற்றும் நீர்ப்பாசனத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.[32]

சீனாவில் காணப்படுவது போல், நெகிழி மூடகங்கள் விவசாய நடைமுறைகளில் தண்ணீரை சேமிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன. மூடகம் அல்லது "தழைக்கூளம்" என்பது உண்மையில் மண்ணின் மேல் வைக்கப்படும் ஒரு மெல்லிய நெகிழித்தாளாகும். இந்நெகிழித்தாள்களில் செடிகள் வளர துளைகள் உள்ளன. இத்தழைக்கூளம் மண்ணின் ஈரப்பதத்தை ஆவியாக்குவதை குறைப்பதன் மூலம் தண்ணீரை பாதுகாக்கிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், இந்த நடைமுறையில் கொண்டு வரக்கூடிய மொத்தநீர் சேமிப்பைத் தீர்மானிக்கப் போதுமான பயன்பாட்டு ஆய்வுகள் இல்லை.[33]

நீர் மறுபயன்பாடு[தொகு]

தண்ணீர் பற்றாக்குறையை நிர்வகிப்பது மிகவும் கடினமான பிரச்சனையாக மாறியுள்ளது. உலகமக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தண்ணீருக்கான தேவை அதன் விநியோகத்தைவிட அதிகமாக இருக்கும் பகுதியில் வாழ்கின்றனர். வழங்கல் மற்றும் தேவைக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற தொடர்ச்சியான சிக்கல்களுடன், தண்ணீரை பாதுகாப்பதற்கான ஓர் அவசியமான முறையாக நீர் மறுபயன்பாட்டை உருவாக்கியுள்ளது.[34] உணவுப் பயிர்கள் மற்றும் குடிநீர் பாசனத்திற்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த, கழிவு நீரை சுத்திகரிப்பதில் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

நன்னீர் உப்பு நீக்கத்தை விட கடல்நீரை உப்பு நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு பதிலளிக்கும் வகையில் கடல்நீரை உப்புநீக்கும் பல ஆலைகள் கட்டப்பட்டுள்ளன. கடல்நீரை உப்புநீக்கம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், உப்புநீக்க தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதற்கும் இது அவசியமாகிறது. தற்போதைய ஆராய்ச்சியானது உப்புநீக்கத்தின் மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த ஆற்றல் மிகுந்த முறைகளை தீர்மானிக்க சோதனைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாக உள்ளது. [35][36][37] மணல் வடிகட்டுதல் என்பது தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் மற்றொரு வழி முறையாகும். சமீபத்திய ஆய்வுகள் மணல் வடிகட்டுதலுக்கு மேலும் மேம்பாடுகள் தேவைஎன்று காட்டுகின்றன. ஆனால் இம்முறை நீரிலிருந்து நோய்க்கிருமிகளை அகற்றுவதில் அதன் செயல்திறனுடன் சரியான தேர்வுமுறையை நெருங்குகிறது.[38][39] புரோட்டோசோவா மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதில் மணல் வடிகட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் வைரசுகளை அகற்றுவதில் இம்முறை போராடுகிறது.[40]பெரிய அளவிலான மணல் வடிகட்டுதல் வசதிகளுக்கு அவற்றை இடமளிக்க பெரியமேற்பரப்பு பகுதிகள் தேவைப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்பட்ட நீரிலிருந்து நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஏனெனில் கழிவுநீரில் எப்போதும் மனிதர்களை பாதிக்கக்கூடிய நோய்க்கிருமிகள் உள்ளன. மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் மனிதமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதற்காக நோய்க்கிருமி வைரசுகளின் அளவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைக்கவேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் நோய்க்கிருமி வைரசுகளின் அளவை மதிப்பிடுவதற்கான மிகவும் துல்லியமான முறைகளை தீர்மானிக்க மேலும் ஆராய்ச்சி அவசியம்.[41]

சிக்கல்கள்[தொகு]

நீரை வீணாக்குதல்[தொகு]

தோட்டக் குழாயில் நீர்க்கசிவு

தண்ணீரை வீணாக்குவது என்பது நீர் பாதுகாப்பின் மறுபக்கமாகும். வீட்டு உபயோகங்களில், எந்தவொரு நடைமுறை நோக்கமும் இல்லாமல் தண்ணீரை வெளியேற்றுதல் அல்லது வெளியேற அனுமதித்தல் வீணாக்குதல் என்றுகருதப்படுகிறது. திறனற்ற நீர் பயன்பாடும் வீணாகவே கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் வீட்டுக் கசிவுகள் நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 900 பில்லியன் கேலன் (3.4 பில்லியன் கனமீட்டர்) தண்ணீரை வீணாக்கி விடுகிறது. பொதுவாக, நீர் மேலாண்மை முகமைகள் நீர்கழிவுகள் பற்றிய ஒப்பீட்டளவில் தெளிவற்ற கருத்துக்கு உறுதியான வரையறையை கொடுக்கத் தயங்குகின்றன அல்லது கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும், உள்ளூர் வறட்சி அவசரச் சட்டங்களில் தண்ணீர் வீணாக்குவதற்கான வரையறை பெரும்பாலும் கொடுக்கப்பட்டுள்ளது.[42] வேண்டுமென்றே அல்லது அலட்சியமாக இருந்து நீர் பயன்பாட்டு கருவியிலிருந்தும் நீரை வெளியேற்றுவது அல்லது வெளியேற அனுமதிப்பது நீரை வீணாக்குவதாகவே கருதப்படும் என்பது ஓர் உதாரணமாகும்.

நீர் பயன்பாடுகளும் பிற ஊடக ஆதாரங்களும் பெரும்பாலும் வீணான நீர்-பயன்பாட்டு நடைமுறைகள் மற்றும் வீணான பயன்பாடுகளின் தடைகளின் பட்டியல்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டுகளில் சான் அன்டோனியோ, டெக்சாசில் உள்ள பயன்பாடுகள் இதில் அடங்கும்.[43]லாசுவேகாசு, நெவாடா,[44]கலிபோர்னியாவில்உள்ளகலிபோர்னியாநீர்வழங்குநிறுவனம்,[45]மற்றும் கலிபோர்னியாவின் சான்டியாகோ நகரம்.[46] கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ நகரம், கசிவுகள், ஓடுதல், மழை பெய்யும் போது மற்றும் உடனடியாக நீர்ப்பாசனம் செய்தல் மற்றும் குடிநீரில்லா நீர் கிடைக்கும் போது குடிநீரை பயன்படுத்துதல் போன்ற வீணான நடைமுறைகளில் நிரந்தர நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது.[47] ஆத்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.[48] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்தில் தற்காலிக நீர் பயன்பாட்டுத் தடைகள் பயன்படுத்தப்படுகின்றன.[49]

உண்மையில் சாக்கடையில் அல்லது நேரடியாகச் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாகவோ அல்லது இழக்கப்படவோ இல்லை. இது நீரியல் சுழற்சியில் உள்ளது. நிலப்பரப்பு மற்றும் மேற்பரப்பு நீர் நிலைகளுக்கு மழையாகத் திரும்புகிறது. இருப்பினும், பலசந்தர்ப்பங்களில் நீரின் ஆதாரம் திரும்பும் இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவு தூரத்தில் உள்ளது. வேறு நீர்ப்பிடிப்பிலும் இது இருக்கலாம். பிரித்தெடுக்கும் புள்ளி மற்றும் திரும்பும் புள்ளிக்கு இடையே உள்ள பிரிப்பு நீர், வழி மற்றும் கரையோரப் பகுதியில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சீரழிவைக் குறிக்கும். "வீணானது" என்பது சமூகத்தின் நீர் விநியோகம் ஆகும், அது கைப்பற்றப்பட்டு, சேமித்து, கொண்டு செல்லப்பட்டு குடிநீர் தரத்திற்குச் சுத்திகரிக்கப்படுகிறது. நீரின் திறமையான பயன்பாடு, நீர்வழங்கல் செலவை மிச்சப்படுத்துகிறது மற்றும் ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் அதிக புதிய நீரை மற்ற பயனர்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழலை ஆதரிக்கிறது. உதாரணமாக, கழிப்பறையை குப்பைத் தொட்டியாகக் கருதக்கூடாது. அதில் சிகரெட் துண்டுகளையோ அல்லது திசுக்களையோ சுத்தப்படுத்தினால், கேலன் தண்ணீர் வீணாகிறது. ஏனென்றால் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் செயல்முறையை நிறைவேற்றமுடியாது.[50]

நீர் விரயத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கருத்து "நீர்-பயன்பாட்டுதிறன்" என்பதாகும். பயன்பாட்டின் அதே நோக்கத்தை குறைந்த தண்ணீரில் நிறைவேற்ற முடிந்தால் நீர் பயன்பாடு திறனற்றதாகக் கருதப்படுகிறது. தொழில் நுட்ப செயல்திறன் என்பது பொறியியல் நடைமுறையில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக உள்ளீடு மற்றும் வெளியீட்டின் விகிதத்தை விவரிக்கப் பயன்படுகிறது மற்றும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை ஒப்பிடுவதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.[51]எடுத்துக்காட்டாக, குறைந்த நீர் அல்லது பிற உள்ளீடுகளைப் பயன்படுத்தி (குறைந்த நீர் அழுத்தம்) அதே நோக்கத்தை (அதாவது, மழை பொழிவது) நிறைவேற்ற முடிந்தால் ஒன்று மற்றொன்றைவிட திறமையானதாகக் கருதப்படும். உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகள் மதிப்பு அடிப்படையில் அளவிடப்பட்டாலன்றி, நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணத்தை அல்லது வளங்களை முதலீடு செய்வதற்கான முடிவுகளைஎடுப்பதில் தொழில் நுட்பசெயல் திறன்கருத்து பயனுள்ளதாக இருக்காது. இந்த செயல் திறனின் வெளிப்பாடு பொருளாதார செயல்திறன் என குறிப்பிடப்படுகிறது மற்றும் நீர் பாதுகாப்பு கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Measures to reduce personal water use - Defra - Citizen Space". consult.defra.gov.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
  2. "Cases in Water Conservation: How Efficiency Programs Help Water Utilities Save Water and Avoid Costs". EPA.gov. US Environmental Protection Agency.
  3. 3.0 3.1 Duane D. Baumann; John J. Boland; John H. Sims (April 1984). "Water Conservation: The Struggle over Definition". Water Resources Research 20 (4): 428–434. doi:10.1029/WR020i004p00428. Bibcode: 1984WRR....20..428B. 
  4. 4.0 4.1 Vickers, Amy (2002). Water Use and Conservation. Amherst, MA: water plow Press. பக். 434. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-931579-07-0. 
  5. 5.0 5.1 Geerts, S.; Raes, D. (2009). "Deficit irrigation as an on-farm strategy to maximize crop water productivity in dry areas". Agric. Water Manage 96 (9): 1275–1284. doi:10.1016/j.agwat.2009.04.009. https://lirias.kuleuven.be/handle/123456789/234625. 
  6. Hermoso, Virgilio; Abell, Robin; Linke, Simon; Boon, Philip (June 2016). "The role of protected areas for freshwater biodiversity conservation: challenges and opportunities in a rapidly changing world: Freshwater protected areas". Aquatic Conservation 26: 3–11. doi:10.1002/aqc.2681. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Kumar Kurunthachalam, Senthil (2014). "Water Conservation and Sustainability: An Utmost Importance.". Hydrol Current Res. 
  8. 8.0 8.1 8.2 "Description of the Hydrologic Cycle". nwrfc.noaa.gov/rfc/. NOAA River Forecast Center.
  9. 9.0 9.1 9.2 9.3 "Potential threats to Groundwater". groundwater.org/. The Groundwater Foundation.
  10. 10.0 10.1 Delgado, J. A.; Groffman, P. M.; Nearing, M. A.; Goddard, T.; Reicosky, D.; Lal, R.; Kitchen, N. R.; Rice, C. W. et al. (1 July 2011). "Conservation practices to mitigate and adapt to climate change". Journal of Soil and Water Conservation 66 (4): 118A–129A. doi:10.2489/jswc.66.4.118A. 
  11. 11.0 11.1 "Water Conservation Is an Essential Part of Wildlife Conservation". Green Clean Guide (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  12. Nations, United. "World Water Day". United Nations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  13. Albuquerque Bernalillo County Water Utility Authority (2009-02-06). "Xeriscape Rebates". Albuquerque, NM. பார்க்கப்பட்ட நாள் 2010-02-02.
  14. Heberger, Matthew (2014). "Issue Brief". Urban Water Conservation and Efficiency Potential in California: 12. http://pacinst.org/app/uploads/2014/06/ca-water-urban.pdf. 
  15. "Time for universal water metering?" Innovations Report. May 2006.
  16. 16.0 16.1 EPA (2010-01-13). "How to Conserve Water and Use It Effectively". Washington, DC. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.
  17. David Rudlin; Nicholas Falk (2010). Sustainable Urban Neighbourhood. Routledge. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-43490-7. https://books.google.com/books?id=wswsBgAAQBAJ. "The first steps have included the introduction of water metering to give users a financial incentive to save water." 
  18. Pimentel, Berger (October 2004). "Water resources: agricultural and environmental issues". BioScience 54 (10): 909. doi:10.1641/0006-3568(2004)054[0909:WRAAEI]2.0.CO;2. https://archive.org/details/sim_bioscience_2004-10_54_10/page/909. 
  19. Craig A. Hart (24 July 2013). Climate Change and the Private Sector: Scaling Up Private Sector Response to Climate Change. Routledge. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-01165-9. https://books.google.com/books?id=9ZUqAAAAQBAJ. 
  20. "Reduce Hot Water Use for Energy Savings". Energy.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
  21. "Team VIRTUebouwt slim en duurzaamhuisdatmens en technologieverbindt". Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  22. Team VIRTUe presenting LINQ
  23. Attari, S. Z. (8 April 2014). "Perceptions of water use". Proceedings of the National Academy of Sciences 111 (14): 5129–5134. doi:10.1073/pnas.1316402111. பப்மெட்:24591608. Bibcode: 2014PNAS..111.5129A. 
  24. "Industrial Water | Other Uses of Water |Healthy Water | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-26. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  25. 25.0 25.1 25.2 "6 Steps to More Effective Water Conservation for Businesses | PG&E". www.pge.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  26. "Consulting - Specifying Engineer | 10 ways to save water in commercial buildings". Consulting - Specifying Engineer (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-03-16. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  27. Weerasooriya, R. R.; Liyanage, L. P. K.; Rathnappriya, R. H. K.; Bandara, W. B. M. A. C.; Perera, T. A. N. T.; Gunarathna, M. H. J. P.; Jayasinghe, G. Y. (2021-01-09). "Industrial water conservation by water footprint and sustainable development goals: a review". Environment, Development and Sustainability 23 (9): 12661–12709. doi:10.1007/s10668-020-01184-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1387-585X. http://dx.doi.org/10.1007/s10668-020-01184-0. 
  28. "Water-Saving Technologies". WaterSense: An EPA Partnership Program. US Environmental Protection Agency. Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  29. "Water-Saving Technologies". WaterSense: An EPA Partnership Program. US Environmental Protection Agency. Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  30. "Water-Saving Technologies". WaterSense: An EPA Partnership Program. US Environmental Protection Agency. Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  31. "Water-Saving Technologies". WaterSense: An EPA Partnership Program. US Environmental Protection Agency. Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  32. UNEP, 2011, Towards a Green Economy: Pathways to Sustainable Development and Poverty Eradication, www.unep.org/greeneconomy
  33. Ingman, Mark; Santelmann, Mary V.; Tilt, Bryan (2015-06-01). "Agricultural water conservation in china: plastic mulch and traditional irrigation". Ecosystem Health and Sustainability 1 (4): 1–11. doi:10.1890/EHS14-0018.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2096-4129. https://doi.org/10.1890/EHS14-0018.1. 
  34. Fatta-Kassinos, Despo; Dionysiou, Dionysios D.; Kümmerer, Klaus (2016). Wastewater Reuse and Current Challenges - Springer. The Handbook of Environmental Chemistry. 44. doi:10.1007/978-3-319-23892-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-23891-3. 
  35. Ibrahim, Yazan; Arafat, Hassan A.; Mezher, Toufic; AlMarzooqi, Faisal (1 December 2018). "An integrated framework for sustainability assessment of seawater desalination". Desalination 447: 1–17. doi:10.1016/j.desal.2018.08.019. 
  36. Elimelech, M.; Phillip, W. A. (5 August 2011). "The Future of Seawater Desalination: Energy, Technology, and the Environment". Science 333 (6043): 712–717. doi:10.1126/science.1200488. பப்மெட்:21817042. Bibcode: 2011Sci...333..712E. https://archive.org/details/sim_science_2011-08-05_333_6043/page/712. 
  37. Han, Songlee; Rhee, Young-Woo; Kang, Seong-Pil (February 2017). "Investigation of salt removal using cyclopentane hydrate formation and washing treatment for seawater desalination". Desalination 404: 132–137. doi:10.1016/j.desal.2016.11.016. 
  38. Seeger, Eva M.; Braeckevelt, Mareike; Reiche, Nils; Müller, Jochen A.; Kästner, Matthias (October 2016). "Removal of pathogen indicators from secondary effluent using slow sand filtration: Optimization approaches". Ecological Engineering 95: 635–644. doi:10.1016/j.ecoleng.2016.06.068. 
  39. Vries, D.; Bertelkamp, C.; Schoonenberg Kegel, F.; Hofs, B.; Dusseldorp, J.; Bruins, J.H.; de Vet, W.; van den Akker, B. (February 2017). "Iron and manganese removal: Recent advances in modelling treatment efficiency by rapid sand filtration". Water Research 109: 35–45. doi:10.1016/j.watres.2016.11.032. பப்மெட்:27865171. 
  40. "Slow Sand Filtration". CDC.gov. May 2, 2014.
  41. Gerba, Charles P.; Betancourt, Walter Q.; Kitajima, Masaaki (January 2017). "How much reduction of virus is needed for recycled water: A continuous changing need for assessment?". Water Research 108: 25–31. doi:10.1016/j.watres.2016.11.020. பப்மெட்:27838026. 
  42. "14.09.030 Definition of water waste". Qcode.us. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  43. "SAWS Report Water Waste - What is Water Waste?". Saws.org. Archived from the original on 2019-07-15. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  44. "Water Waste". Las Vegas Valley Water District.
  45. "Report Water Waste". Cal Water. 2015-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  46. "Water Saving Tips | City of San Diego Official Website". Sandiego.gov. Archived from the original on 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  47. "Water & Drought Update - Palo Alto Water Use Guidelines". Archived from the original on 2021-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-08-06.
  48. "Permanent water saving rules". Victoria State Government. 17 February 2019.
  49. Water UK http://www.water.org.uk/consumers/tubs
  50. "45+ Ways to Conserve Water in the Home and Yard". Eartheasy Guides & Articles (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  51. Dziegielewski, B. J.; Kiefer, C. (January 22, 2010). "Water Conservation Measurement Metrics: Guidance Report". American Water Works Association. https://www.awwa.org/Portals/0/files/resources/resource%20dev%20groups/tech%20and%20educ%20program/documents/WaterConservationMeasurementMetricsGuidanceReport.pdf. பார்த்த நாள்: அக்டோபர் 1, 2022. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_பாதுகாப்பு&oldid=3779978" இலிருந்து மீள்விக்கப்பட்டது