நீர் தோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் தோசை
வகைதோசை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதுளு நாடு
முக்கிய சேர்பொருட்கள்அரிசி

நீர் தோசை (Neer dosa) அல்லது தண்ணீர் தோசை (துளு) அரிசி மாவிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான உணவாகும். இது துளு நாடு மற்றும் உடுப்பியின் பகுதிகளிலும் பரிமாறப்படும் மங்களூர் உணவு வகைகளுள் ஒன்றாகும்.[1][2]

கண்ணோட்டம்[தொகு]

நீர் என்பது துலு மொழியில் தண்ணீருக்கான சொல்.[2][3]

மற்ற தோசைகளைப் போலல்லாமல் நீர் தோசை இதன் எளிய தயாரிப்பு முறை மற்றும் நொதித்தல் இல்லாமையால் பெயர் பெற்றது.[4] வழக்கமாக நீர் தோசை தேங்காய் சட்னி, சாம்பார், சாகு மற்றும் கோழி, மட்டன், மீன் மற்றும் முட்டை கறி போன்ற அசைவ உணவுகளுடன் வழங்கப்படுகிறது.[5]

தேவையான பொருட்கள்[தொகு]

நீர் தோசையில் பல வேறுபாடுகள் இருந்தாலும், இவை அனைத்திற்கும் பொதுவான இரண்டு அடிப்படை பொருட்கள் ஊறவைத்த அரிசி (அல்லது அரிசி மாவு) மற்றும் உப்பு ஆகும்.[6]

தயாரிப்பு[தொகு]

நீர் தோசை தயாரிக்க அரிசி மாவு நொதிக்கத் தேவையில்லை. அரிசியைக் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். விரைவாகக் கழுவி வடிகட்டிய பிறகு, அரிசியுடன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மாவின் இளக்கத்திற்கு ஏற்ப கூடுதல் அளவு தண்ணீரைச் சேர்த்து, சுவைக்காக உப்பு சேர்க்கவேண்டும். இறுதியாக இந்த மாவினைத் சூடான தோசைக் கல்லில் வார்த்து தோசை தயாரிக்கலாம்.[7] [8]

மேலும் காண்க[தொகு]

  • இந்திய ரொட்டிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_தோசை&oldid=3108131" இலிருந்து மீள்விக்கப்பட்டது