நீர் குச்சி பூச்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ranatra
Ranatra chinensis.jpg
Ranatra chinensis
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சியினம்
வரிசை: கெமிப்டெரா
துணைவரிசை: கெட்ரோடெராHeteroptera
குடும்பம்: நெபிடே
பேரினம்: ரனட்ரா
Fabricius, 1790
Species

R. chinensis
R. fusca
R. fabricius
R. linearis
and others.

Ranatra chinensis

நீர் குச்சி பூச்சிகளின் [1] முன் கால்கள் வலுவானவை. அவை இரையைப் பற்றிக்கொள்ள உதவுகிறது. அவைகள் தங்கள் வால்களில் உள்ள நீண்ட மூச்சு குழல்களின் வழியாக மூச்சு விடுகின்றன. அவைகள் சிறியமீன்கள் மற்றும் பூச்சிகளைச் உண்கின்றன, நீர் குச்சி பூச்சிகள் உடலின் மேற்பரப்பில் கொடுக்கு போன்ற உறுப்பின் உதவியால் தங்கள் இரையின் மீது மயக்கம் அளிக்கும் ஒரு திரவத்தை (உமிழ்நீரை) உட்செலுத்துகின்றன. உமிழ்நீரை உட்செலுத்தி பின்னர் மயக்கம் அடைந்த இரையை உட்கிரகிப்பதன் மூலம் உண்ணத் தொடங்குகின்றன.

மிகுந்த குளிர்காலம் தவிர மற்ற குளிர் கால நாட்களில் அவைகள் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. பெண் நீர் குச்சி பூச்சிகள் வசந்த காலங்களில் தாவரங்களில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பொறிப்பதற்கு பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை எடுத்துக்கொள்கின்றன. இரண்டு மாதங்களில் முதிர்ச்சியடைந்து இளம் பருவத்தை அடைகின்றன. முழுமையாக வளர்ந்து வரும் போது அவை 100 மிமி முதல் 125மிமி வரை நீளமாக இருக்கும்.

References[தொகு]