நீர்-நீர் ஆற்றல் அணு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WWER-1000 (அல்லது உருசிய ВВЭР-1000வின் நேரடி ஆங்கிலப் பெயர்ப்பு VVER-1000 ) 1000 MWe திறன் கொண்ட அழுத்த நீர் அணு உலை வகையான உருசிய அணுக்கரு உலை ஆகும்.

நீர்-நீர் ஆற்றல் அணுஉலை , ( உருசியம்: Водо-водяной энергетический реактор; ஆங்கிலப் பெயர்ப்பு : Vodo-Vodyanoi Energetichesky Reactor; Water-Water Energetic Reactor) சுருக்கமாக விவிஈஆர் (VVER) , அல்லது WWER அழுத்த நீர் அணு உலை வடிவமைப்பில் அமைந்த உருசிய அணுக்கரு உலைகளாகும். இவை முன்னாள் சோவியத் ஒன்றியம், இந்நாள் உருசியாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் (OKB Gidropress) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை.[1][2] இவற்றின் ஆற்றல்திறன் 440 MWe முதல் 1200 MWe வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா, பல்கேரியா, சீனா, செக் குடியரசு, பின்லாந்து, அங்கேரி, இந்தியா, ஈரான், ஸ்லோவேக்கியா, உக்ரைன், மற்றும் உருசியக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1970ஆம் ஆண்டில் விவிஈஆர் வகை அணுஉலைகள் முதலில் கட்டப்பட்டன. பெரும்பாலும் VVER-440 வடிவு V230 பொதுவான வடிவமைப்பாக இருந்த இந்த அணுமின் நிலையங்கள் 440 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்டவையாக இருந்தன. V230 வடிவில் ஒவ்வொன்றும் தனித்தனி கிடையான நீராவி ஆக்கியுடன் ஆறு முதன்மை குளிர்வி சுற்றுக்கள் இருந்தன. சற்றே மாற்றியமைக்கப்பட்ட VVER-440, வடிவு V213இல் சோவியத் வடிவமைப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட அணுக்கருப் பாதுகாப்பு சீர்தரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த வடிவமைப்பில் நெருக்கடிநிலை கருவ குளிர்விப்பு மற்றும் துணை ஊட்டுநீர் அமைப்புகளும் மேம்பட்ட விபத்து கண்டறிதல் அமைப்புக்களும் சேர்க்கப்பட்டிருந்தன.[3]

பெரிய விவிஈஆர்-1000 1975ஆம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டன.

தற்போதைய வடிவமைப்பான விவிஈஆர்-1200 புதிய கட்டுமானங்களில் அளிக்கப்படுகிறது. இது விவிஈஆர்-1000இன் வளர்ச்சியாக கூடுதலான மின்னுற்பத்தித் திறன் 1200 MWe, மற்றும் கூடுதல் இயக்கியற்ற பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historical notes". OKB Gidropress. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "WWER-type reactor plants". OKB Gidropress. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. Prof. H. Böck. "WWER/ VVER (Soviet Soviet designed designed Pressurized Pressurized Water Water Reactors Reactors)" (PDF). Vienna University of Technology. Austria Atominstitute. 28 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; fil-20110726 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்[தொகு]