நீர்வடிப்பகுதி மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர்வடிப் பகுதி மேலாண்மை எனப்படுவது நீர்வளங்களை முறைப்படி பாதுகாத்து நீடித்த உபயோகத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்யும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பிரித்து கொடுத்திட உதவும் திட்டங்களை படிக்கும் நீர்மேலாண்மைத் துறையாகும். நீர் வழங்குதல், நீர்வடிதல், நீரின் தரம் மற்றும் நீரின் உரிமைகள் போன்றவை இதன் முக்கிய அங்கங்களாகும்.

நீர்ச்செறிவு செயல்பாடுகள்[தொகு]

  • மண்வளப் பாதுகாப்பு
  • நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
  • காடு வளர்த்தல்
  • விவசாய மேம்பாடு
  • கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு
  • மனிதவள மேம்பாடு
  • ஊரக ஆற்றல் மேம்பாடு

நீர் வடிப்பகுதியில் செய்யக் கூடிய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு பணிகள்[தொகு]

  • மண் வரப்பு அமைத்தல்
  • சம உயர வரப்பு அமைத்தல்
  • நீர் உறிஞ்சு குழி அமைத்தல்
  • கல் தடுப்பு
  • உலர் தடுப்பு அணை
  • கம்பி வலை தடுப்பு அணை
  • பண்ணைக் குட்டை அமைத்தல்
  • சங்கன் குட்டை அமைத்தல்
  • கசிவு நீர் குட்டை அமைத்தல்
  • ஓடை ஊரணி சீரமைத்தல்
  • வேளாண் காடுகள் வளர்த்தல்
  • மீன் வளர்ப்பு குட்டை அமைத்தல்
  • உயிர் வேலி அமைத்தல்

பயன்கள்[தொகு]

  • மண்ணறிப்பை தடுத்தல் மற்றும்
  • காடுதுளர்ப்பு மண் வளப்பாதுகாப்பு
  • மழைநீர் சேகரிப்பு
  • விவசாயத் தொழிலை மேம்படுத்துதல்
  • விவசாயம் சார்ந்த மற்றும் சாரா தொழில்களை மேம்படுத்துதல்
  • வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல்.
  • சமூக பொருளாதார முன்னேற்றம் அடைதல்

மேற்காணும் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு மற்றும் தேசிய வங்கிகள் நேரடியாகவும், தொண்டு நிறுவனங்களின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்திட்டங்களாகவும், கடனுதவி திட்டங்களாகவும் உதவுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்[தொகு]

நபார்டு நீர்ச் செறிவு மேம்பாட்டுத் திட்டம் பயிற்சி கையேடு