நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கும் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கும் கருவி நீர்ப்பாசன வாய்க்கால் அமைப்பதற்கு உதவும் கருவி ஆகும். இக்கருவி மூலம் ஒரு நாளில் 1.2 முதல் 1.5 எக்டேர் வரை உழவு செய்யலாம்.

அமைப்பு[தொகு]

டிராக்டரால் இயக்கப்படும் இக்கருவி ஒரே சமயத்தில் இரண்டு கரைகளை அமைப்பதால் நீர்ப்பாசன வாய்க்கால் உருவாகிறது. வாய்க்கால் அமைப்பதற்கு ஏற்றவாறு 25 செ.மீ. அளவுள்ள இரண்டு உட்புற தகடுகள் 30 டிகிரி கோணத்தில் அமையுமாறு அவற்றின் முன்புறம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நிலத்தை உழுது செல்வதற்கேற்றவாறு கொழு பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட வாய்க்காலின் இருபுறமும் கரைகள் அமைப்பதற்கு ஏற்றவாறு 25 செ.மீ. அளவுள்ள இரண்டு வெளிப்புற தகடுகள் பாத்தியிலிருந்து மண்ணை மட்டப்படுத்தி வாய்க்காலின் ஒரம் மண்ணை சேர்ப்பதால் கரை அமைய எதுவாகிறது. வெளிப்புறத் தகடுகளைவிட உட்புறத் தகடுகள் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளதால் பாத்தியின் மட்டத்தைவிட வாய்க்காலின் மட்டம் 5 முதல் 10 செ.மீ. வரை ஆழமாக அமைக்க எதுவாகிறது.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • ஒரே தடவையில் வாய்க்காலும். வாய்க்காலின் இருபுறமும் கரைகளையும் அமைக்கிறது.