நீர்க்காத்தான் குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏரா போன்ற செதில்கள்
குங்குமச் சிவப்பு நிறத்தில் செதிலிடை நிறம்

நீர்க்காத்தான் குட்டி (அ) நீர்க்காத்தான் பாம்பு ( Striped Keelback - Amphiesma stolatum ), ஆசியா முழுவதிலும் பொதுவாகக் காணப்படும் விடமற்ற பாம்பு.

உடல் குறிப்பு[தொகு]

ஏரா போன்ற செதில்களும் மெலிந்த உடலும் கொண்ட சிறு பாம்பு இது; ஒலிவுப்பழுப்பிலிருந்து சாம்பல் வரை சில நிறங்களில் இருக்கும். மொத்த நீளத்தில் கால்பகுதி இதன் மெல்லிய வாலே. முதுகின் இருபக்கத்திலும் தலையிலிருந்து வால் வரை பட்டைக்கோடுகள் நீர்க்காத்தான் பாம்பின் தெளிவான அடையாளம்.

வாழிடங்கள்[தொகு]

நீர்க்காத்தான் ஆற்றங்கரை, சதுப்புநிலம், ஈரநிலங்களில் பொதுவாகத் தென்பட்டாலும் நெல்வயல், புல்வெளி, புதர், தோட்டங்களிலும் பருவமழைக் காலங்களில் காணப்படும் இப்பாம்பு பகல், இரவு இரு நேரங்களிலும் இயங்கும்.

முக்கியச் சிறப்பியல்புகள்[தொகு]

  • இச்சிறு பாம்பு நச்சுத்தன்மை அற்றது.
  • மிகவும் சாதுவானது.

குறிப்புதவி[தொகு]

  • SNAKES OF INDIA - The Field Guide - Rom Whitaker & A. Captain - page 204 [Draco Books]
  • redorbit.com [1]