நீர்க்கசிவுத்துளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A section of hydathode in the leaf of Primula sinensis (Brockhaus and Efron Encyclopedic Dictionary)

நீர்க்கசிவுத்துளைகள் (Hydathode) என்பவை இலைகளில் காணப்படும் ஒரு வகை சுரப்புத்திசு ஆகும். பொதுவாக இவை பூக்கும் தாவரங்களில் காணப்படுகின்றன. புறத்தோலில் உள்ள துளைகள் வழியாக நீரை சுரக்கின்றன. இழைத்துளைகள் இழையின் விளிம்பில் அமைந்துள்ளன. நீரில் மூழ்கி வாழும் ராணன்குலஸ் புளுயிட்டன்ஸ் தாவர இழையிலும், தரையில் வாழும் கேம்பனுலா ரோடுண்டி போலியா .[1] தாவர இலையிலும் நீர்க்கசிவுத்துளைகள் காணப்படுகின்றன.

நீர்க்கசிவுத்துளைகள், பல உயிருள்ள செல்களின் குழுவாக காணப்படும், செல்களுக்கு இடையே அதிகமான செல் இடைவெளி காணப்படும், இவை கற்றை குழாய்களின் மாற்றுருவாக அமைந்துள்ளன. இவை எபிதம் செல்கள் [2] எனவும் அழைக்கப்படுகின்றன. இவை துணை புறத்தோல் அறைகளில் திறக்கின்றன, பின்னர் அங்கிருந்து ஒரு துளையின் மூலம் வெளிப்புறத்துடன் தொடர்பு கொள்கின்றன, இந்த நீர் இலைத்துளை மற்ற இலைத்துளைப் போலவே காணப்பட்டாலும், அளவில் பெரியவை, ஆனால் இயக்கமற்றவை.

காற்று குழல்களில் ஏற்படும் இறுக்கம் காரணமாக நீர்க்கசிவுத்துளைகள் நீரை இலைக்கு வெளியே கசியச்செய்கின்றன.[3] சில சதுப்பு நிலத் தாவரங்கள் சுரக்கும் மயிருருக்களையும் பெற்றுள்ளன, அவற்றின் மூலம் சுரக்கும் உப்பு சைட்டோபிளாசத்தில் ஏற்படும் கரிம அயனிச் செறிவை குறைக்கின்றன. இதனால் இலையின் மேற்பரப்பில் வெண்மையான படலம் தோன்றுகிறது.

நீர்க்கசிவுத்துளைகள் இரு வகைப்படும்

  1. முனைப்பற்ற துளைகள்
  2. முனைப்புள்ள துளைகள்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]