நீரெலித் தொப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பீவர்த் தொப்பி.

பீவர் தொப்பி, நீரெலி விலங்குகளின் உரோமங்களைச் சேர்த்து அழுத்திப் பெறப்பட்ட உரோமத் தகடுகளைப் பயன்படுத்திச் செய்யும் ஒரு தொப்பி வகை. மென்மையானதும், மீள்தன்மை கொண்டதுமான இப் பொருளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட தொப்பிகள் 1550 க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் பெரும் பகுதியில் இதை மக்கள் விரும்பி அணிந்தனர். முதலாம் நோட்டன் பேரரசர், மயிலிறகாலும், ரோசா இதழ் வடிவத்தாலும் அலங்கரிக்கப்பட்ட நீரெலித் தொப்பியை அணிந்தார்.

ஐரோப்பாவில் நீரெலித் தோலுக்கு இருந்த கேள்வி இவ்விலங்குகளை ஏறத்தாழ அழியும் நிலைக்கே தள்ளிவிட்டது. இதன் தேவை புதிய உலகத்தில் நீரெலிகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்துவிட்டதனால், இதன் வணிகத்தின் மூலம் இலாபம் பெற விரும்பியவர்களூடாகக் குடியேற்றவாத விரிவாக்கத்துக்கும் இது காரணமாகியது. நியூ யார்க்கில் முதல் குடியேற்றம் இடம்பெற்ற ஆண்டான 1624ல், ஒல்லாந்தக் குடியேற்றக்காரர்கள் 1,500 நீரெலித் தோலையும், 500 ஒட்டர் என்னும் விலங்குத் தோலையும் ஐரோப்பாவுக்கு அனுப்பியிருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரெலித்_தொப்பி&oldid=2047760" இலிருந்து மீள்விக்கப்பட்டது