நீரில் பிரசவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்கும் ஒரு முறைதான் நீரில் பிரசவம். பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மூதாதையர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்[தொகு]

முதன்முதலாக 1803-இல் பிரான்ஸ் நாட்டில் "நீருக்கடியில் பிரசவம்" நீரியல் பிரசவ முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இருந்தும் ஒரு நூற்றாண்டுக்கு மேல் இப்பிரசவ முறை பற்றிப் பேசப்படவில்லை. உறங்குநிலையில் காணப்பட்ட இந்த நீரியல் பிரசவ முறை சோவியத் யூனியனால் 1963இன் முற்பகுதியில் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நீரியல் பிரசவ முறையின் மூதாதையர் எகிப்தியர் என நம்பப்படுகிறது.

பிற நாடுகளில் நீரில் பிரசவம்[தொகு]

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்கு நீரியல் பிரசவ முறையை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் நாட்டில், பித்திவியரல் நகரில் உள்ள தமது மருத்துவமனையில் 1977 ல் டாக்டர் மைக்கேல் ஓடேன்ட் என்பவர் செயற்கையான ரப்பர் குளியல் தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் பிரசவ வலி எடுத்த பெண்களை இறங்கச் செய்து பிரசவம் பார்த்தார். இதனால் பிரசவ வலியின் வேதனை குறைந்துவிட்டதால் மிகவும் பிரபலமடைந்தது.

செயல்முறை[தொகு]

இரப்பர் குளியல் தொட்டியில் தண்ணீரின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பராமரிக்கப்படுகின்றது. தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வரமுடிகின்றது. மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் இல்லை. அத்துடன் அதிகமான இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. யோனிவாசல் கத்தரிப்பு இல்லாதிருக்கிறது. இவை தவிர இம்முறையால் சில அசெளகரிகங்களும் உண்டு. நீரியல் பிரசவ முறையை ஒருவர் விரும்பும் பட்சத்தில் முதலில் அவர் மனதளவில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை 70 நாடுகளில் இந்த நீரியல் பிரசவ முறை பின்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சீனா இதில் 71 வது நாடாகச் சேர்ந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரில்_பிரசவம்&oldid=2743573" இருந்து மீள்விக்கப்பட்டது