நீரினுள் நோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீருக்கடியில் பார்க்க உதவும் கருவி - ஒசாகா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.1976 ல் கண்டெடுக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கான படகுகள்: நீரினுள் நோக்கியின் மூலம் சுற்றுப்பயணம்.  போர்ட் ஆஃப் பியூர்டோ டெல் கார்மென்,டைசு,லான்சரோட், ஸ்பெயின்
கையால் துாக்கிச் செல்லக் கூடிய நீரினுள் நோக்கி
பயன்பாட்டிலுள்ள நீரினுள் நோக்கி

File:| Acquascope in use நீரினுள் நோக்கி (Aquascope, குளியல்கருவி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு நீருக்கடியில் பார்க்கும் சாதனம் ஆகும். நீருக்கடியிலுள்ள உலகத்தை  ஒரு படகிலிருந்து பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. நீரின்  மேற்பரப்பில் கண்ணைக் கூசும் வெளிச்சம் இருப்பதால் நீரினுள் நோக்கி  நீருக்கடியில் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. கடற்திட்டுகள், மூழ்கிய படகுகள், செக்கி வட்டுகள் ஆகியவற்றைக் காணவும், ஆய்வு செய்யவும் உதவுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களின் அடியில் வாழும் தாவரங்கள், உயிரினங்களின் வாழ்விடங்களைப் பார்ப்பதற்கு இது ஆய்வியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது..[1][2]

இக்கருவியின் மேம்பட்ட வடிவமானது, நீரடித் தொலைநோக்கி  என்ற பெயரில் 1845 இல் சாரா மாத்தர் (Sarah Mather) என்பவரால் காப்புரிமை (யு.எஸ். காப்புரிமை எண் 3,995) பெறப்பட்டது.[3] கடலில் செல்லும் கலங்களிலிருந்து கடலின் ஆழத்தை ஆராய்ந்து பார்க்க உதவியது.[4][5][6] கப்பலிலிருந்து அது தண்ணீரில் மூழ்கக்கூடிய கண்ணாடி குடுவையில் கற்பூரத்தைலம் பயன்படுத்தப்பட்ட  விளக்குடன் கடலின் கீழே சென்று பரிசோதனை செய்ய உதவியது.[7] 1864 இல் சாரா மாத்தர் தனது கருவியை மேலும் மேம்படுத்தினார் (யுஎஸ் காப்புரிமை எண். 43,465)[8] இது போருக்கான நீர் மூழ்கி கப்பலைக் கண்டறியப் பயன்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரினுள்_நோக்கி&oldid=2749076" இருந்து மீள்விக்கப்பட்டது