நீரவ் மோதி
நீரவ் மோதி | |
---|---|
பிறப்பு | 27 பெப்ரவரி 1971 பாலன்பூர், குஜராத், இந்தியா |
தற்போதைய நிலை | 19 மார்ச் 2019 அன்று இலண்டனில் கைது செய்யப்படல். |
துணைவர் | அமி மோடி |
பிள்ளைகள் | 3 |
நீரவ் தீபக் மோடி (Nirav Deepak Modi) (பிறப்பு: 27 பிப்ரவரி 1971), இந்திய வைர வணிகரும், பயர்ஸ்டார் வைரம் பன்னாட்டு நிறுவனம் மற்றும் கீதாஞ்சலி குழுமத்தைச் சேரந்தவர் ஆவார். இவர் முகுல் சோக்சியின் நெருங்கிய உறவினர். இவர் ஆகத்து 2018 ஆம் ஆண்டில்.இந்திய யூனியன் வங்கியின் ஆங்காங்கு கிளையில் கடனாகப் பெற்ற $5.49 மில்லியன் அமெரிக்க டாலர்[1]மற்றும் பஞ்சாப் தேசிய வங்கியில் கடனாகப் பெற்ற ரூபாய் 2,800 கோடி திரும்ப செலுத்தாமல் நிதி மோசடி செய்ததாக[2][3][4] இந்திய நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்.
இந்நிலையில் நீரவ் மோடி பெல்ஜியத்திற்கு தப்பி ஓடினார். இவரை மும்பை காவல்துறை, சிபிஐ, அமலாக்க இயக்குனரகம் மற்றும் பன்னாட்டுக் காவலகம் 2018 ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது.[5] சூன் 2018இல் நீரவ் மோடி ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் புகழிடம் கோரி விண்ணப்பம் செய்தார்.[6][7] சூன் 2019ல் சுவிஸ் வங்கி நீரவ் மோடியின் $ 6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வங்கி கணக்கை முடக்கியது.[8][9][10]
கைது மற்றும் நாடு கடத்தல் வழக்கு
[தொகு]பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் வழக்கில், 25 பிப்ரவரி 2021 அன்று ஐக்கிய இராச்சியத்தின் நீதிமன்றம், நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.[11] நீரவ் மோடி தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தாமல் இருக்க ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை ஏற்கமறுத்த நீதிமன்றம் நீரவ் மோடிக்கு, £150,247 வழக்கு கட்டணம் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கியது.[12] இந்திய அரசின் கோரிக்கை ஏற்று ஐக்கிய இராச்சியத்தின் காவல்துறை, நீரவ் மோடியை 19 மார்ச் 2019 அன்று இலண்டனில் கைது செய்து, எச். எம் தேம்ஸ்சைடு சிறைச்சாலையில் அடைத்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Union Bank sues Nirav Modi in Hong Kong court: Report". IANS India Private Limited. 27 September 2018. Retrieved 28 September 2018.
- ↑ "Indian billionaire jeweller investigated over bank fraud". Reuters. 5 February 2018. https://www.reuters.com/article/idUSKBN1FP24T/.
- ↑ "PNB fraud put at close to $2.1 billion". India Today. 27 February 2018. Retrieved 4 March 2018.
- ↑ "Eyes wide shut: the $1.8 billion Indian bank fraud that went unnoticed". Reuters. https://www.reuters.com/article/us-punjab-natl-bank-fraud-insight/eyes-wide-shut-the-1-8-billion-indian-bank-fraud-that-went-unnoticed-idUSKCN1G20OZ.
- ↑ "- INTERPOL". interpol.int (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 10 July 2018. Retrieved 2018-08-30.
- ↑ "Indian jeweller 'seeking asylum' in London" (in en-GB). BBC News. 2018-06-11. https://www.bbc.com/news/business-44436258.
- ↑ Zubrzycki, John (26 April 2019). "Behind bars: India's 'Diamond King' Nirav Modi's fall from grace". The Sydney Morning Herald.
- ↑ "Swiss authorities seize Nirav Modi, sister Purvi's four bank accounts with assets worth Rs 283 crore". businesstoday.in. 27 June 2019. Retrieved 2019-06-30.
- ↑ PTI (27 June 2019). "Swiss authorities freeze 4 bank accounts of Nirav Modi, sister Purvi Modi". @businessline (in ஆங்கிலம்). Retrieved 2019-06-30.
- ↑ "Four bank accounts of Nirav Modi, family frozen in Switzerland". The Indian Express (in ஆங்கிலம்). 2019-06-28. Retrieved 2024-07-09.
- ↑ Shirbon, Estelle (2021-02-25). "UK court allows extradition of diamond billionaire Nirav Modi to India" (in en). Reuters. https://www.reuters.com/article/britain-india-modi-extradition-idUSKBN2AP1SS.
- ↑ "Fugitive Nirav Modi loses bid to appeal against extradition". The Times of India. December 15, 2022. https://timesofindia.indiatimes.com/business/india-business/fugitive-nirav-modi-loses-bid-to-take-extradition-fight-to-uk-supreme-court/articleshow/96251067.cms.