நீப்போ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆள்கூறுகள்: 46°30′00″N 32°20′00″E / 46.50000°N 32.33333°E / 46.50000; 32.33333
நீப்போ
பெலருசிய: Дняпро (Dniapro)
உருசியம்: Днепр (Dnepr)
உக்ரைனியன்: Дніпро (Dnipro)
River
நாடுகள் உருசியா, பெலருஸ், உக்ரைன்
கிளையாறுகள்
 - இடம் சோழு, டெசுனா, டிருபிழ், சுபெய், சுலா, செல் ஆறு, வோர்சுகல, சமரா, கோன்கா (Konka), Bilozerka
 - வலம் டருட் (Drut), Berezina, Prypiat, டெட்ரிவ் (Teteriv), இர்பின் (Irpin), சுடுன்னா (Stuhna), ராஸ் (Ros), Tiasmyn, Bazavluk, இன்குலெட்சு (Inhulets)
நகரங்கள் Dorogobuzh, Smolensk, Mahilyow, கிவ், செர்க்சி, Dnipropetrovsk
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் வால்டய் மலைகள், உருசியா
 - உயர்வு 220 மீ (722 அடி)
 - ஆள்கூறு 55°52′00″N 33°41′00″E / 55.86667°N 33.68333°E / 55.86667; 33.68333
கழிமுகம் நீப்போ வடிநிலம்
 - ஆள்கூறு 46°30′00″N 32°20′00″E / 46.50000°N 32.33333°E / 46.50000; 32.33333
நீளம் 2,145 கிமீ (1,333 மைல்)
வடிநிலம் 5,04,000 கிமீ² (1,94,595 ச.மைல்)
Discharge for கெர்சன் (Kherson)
 - சராசரி
நீப்போ ஆற்றின் வடிநிலம்
நீப்போ ஆற்றின் வடிநிலம்

நீப்போ ஆறு ( உக்ரைன்: Дніпро, உருசியன்: Днепр, பெலரசு: Дняпро ) ஐரோப்பாவின் நான்காவது பெரிய ஆறு ஆகும். இது உருசியாவில் உற்பத்தியாகி பெலரசு, உக்ரைன் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. உக்ரைன், பெலரசு ஆகிய இரு நாடுகளின் மிகப்பெரிய ஆறு இதுவே. இதன் நீளம் 2,145 இல் இருந்து 2,201 கிமீ வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வடிகால் பரப்பு 504,000 சதுர கிமீ ஆகும். இவ்வாற்றின் குறுக்கே பல அணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.

புவியியல்[தொகு]

இவ்வாறு உருசியாவில் 485 கிமீ-உம் பெலரசுவில் 700 கிமீ-உம் உக்ரைனில் 1,095 கிமீ-உம் பயணிக்கிறது. 504,000 சதுர கிமீ வடிநிலத்தில் 289,000 சதுர கிமீ உக்ரைனிலும்,[1] 118,360 சதுர கிமீ பெலரசியாவில் உள்ளது. [2] இது உக்ரைனை கிழக்கு மேற்கு என இரு பாகமாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு உருசியாவின் வட மேற்கிலுள்ள உயர் நிலத்தில் உள்ள வால்டய் மலைகள் என்ற இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது [3] அங்கு இது சிறிய ஆறாகவே உள்ளது. 115 கிமீ தொலைவுக்கு இது பெலரசுக்கும் உக்ரைனுக்கும் எல்லையாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.encyclopediaofukraine.com/display.asp?AddButton=pages\D\N\DnieperRiver.htm
  2. http://landofancestors.com/travel/statistics/geography/237-main-characteristics-of-the-largest-rivers.html
  3. http://www.encyclopediaofukraine.com/display.asp?AddButton=pages\D\N\DnieperRiver.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீப்போ_ஆறு&oldid=1716359" இருந்து மீள்விக்கப்பட்டது