உள்ளடக்கத்துக்குச் செல்

நீனா சிமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீனா சிமோன்
1965இல் நீனா சிமோன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்யூனிஸ் கேத்லீன் வேய்மொன்
பிறப்பு(1933-02-21)பெப்ரவரி 21, 1933
வட கரோலினா, அமெரிக்கா
இறப்புஏப்ரல் 21, 2003(2003-04-21) (அகவை 70)
பிரான்சு
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
 • பாடகர்
 • பாடலாசிரியர்
 • கின்னரப்பெட்டிக் கலைஞர்
 • இசையமைப்பாளர்
 • இசைநிகழ்ச்சி நடத்துனர்
 • சமூக ஆர்வலர்
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்1954–2003
இணையதளம்www.ninasimone.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
நீனா சிமோன்
கையொப்பம்

நீனா சிமோன் (Nina Simone, 21 பிப்ரவரி 1933 - 21 ஏப்ரல் 2003) ஓர் அமெரிக்கப் பாடகரும், பாடலாசிரியரும், பியானோ கலைஞரும், இசையமைப்பாளரும், இசை நடத்துநரும் மற்றும் குடிசார் உரிமைகள் இயக்க ஆர்வலரும் ஆவார்.[1] இவரது இசை மேல்நாட்டுச் செந்நெறி இசை, நாட்டார் பாடல், நற்செய்தி இசை, ப்ளூஸ், ஜாஸ், ஆர் & பி மற்றும் பாப் உள்ளிட்ட பாணிகளில் பரவியிருந்தது. 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க மாத இதழான ரோலிங் ஸ்டோன் அனைத்து காலத்திலும் 200 சிறந்த பாடகர்களின் பட்டியலில் சிமோனுக்கு 21 வது இடத்தைத் தந்தது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

வட கரோலினாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறாவது குழந்தையான சிமோன் ஆரம்பத்தில் கச்சேரிகளில் கின்னரப்பெட்டிக் கலைஞராக இருக்க விரும்பினார்.[2] பின்னர் நியூயார்க்கில் உள்ள ஜூலியார்ட் இசைப் பள்ளியில் சேர்ந்தார்.[3] பின்னர் பிலடெல்பியா உள்ள கர்டிஸ் இசைப்பள்ளியில் படிக்க உதவித்தொகைக்கு விண்ணப்பித்தார். இவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது, இது இனவெறி காரணம் என்று இவர் கூறினார்.[4] 2003 ஆம் ஆண்டில், இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்நிறுவனம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.[5]

இசை வாழ்க்கை[தொகு]

வாழ்வாதாரத்திற்காக, சிமோன் அட்லாண்டிக் நகரிலுள்ள ஒரு இரவு விடுதி பியானோ வாசிக்கத் தொடங்கினார். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள இவர் தனது பெயரை "நீனா சைமோன்" என்று மாற்றிக் கொண்டார். "பிசாசின் இசை" அல்லது "காக்டெய்ல் பியானோ" என்று அழைக்கப்படும் இசைகளைத் தேர்ந்தெடுத்தார்.[6] இரவு விடுதியில் இவர் தனது சொந்த இசையில் பாடி வந்தார். இது ஒரு ஜாஸ் பாடகராக இவரது வாழ்க்கையை மேம்பட உதவியது.[7] இவர் 1958 மற்றும் 1974 க்கு இடையில் 40 க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளைப் பதிவு செய்தார். லிட்டில் கேர்ள் ப்ளூ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.[2] [8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

 1. Nina Simone in the Oxford Advanced Learner's Dictionary
 2. 2.0 2.1 Simone & Cleary 2003
 3. "Encyclopedia of Jazz Musicians – Nina Simone (Eunice Kathleen Waymon)". Jazz.com. Archived from the original on March 22, 2016. பார்க்கப்பட்ட நாள் October 28, 2013.
 4. Liz Garbus, 2015 documentary film,What Happened, Miss Simone?
 5. "The Nina Simone Foundation". Archived from the original on June 19, 2008. பார்க்கப்பட்ட நாள் December 7, 2006.
 6. Liz Garbus, 2015 documentary film, What Happened, Miss Simone?
 7. Pierpont, Claudia Roth (August 6, 2014). "A Raised Voice: How Nina Simone turned the movement into music". The New Yorker. Archived from the original on August 6, 2014. பார்க்கப்பட்ட நாள் August 6, 2014.
 8. Simone & Cleary 2003.
 9. Simone & Cleary 2003.
 10. Simone & Cleary 2003

மேலும் சில ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_சிமோன்&oldid=3959610" இலிருந்து மீள்விக்கப்பட்டது