நீனா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீனா குப்தா
நிஷ்கா லூலவில் நீனா குப்தா
நிஷ்கா லூலவில் நீனா குப்தா
பிறப்பு4 சூலை 1959 (1959-07-04) (அகவை 64)[1][2]
தில்லி, இந்தியா
கல்விதில்லி பல்கலைக்கழகம், தேசிய நாடக பாடசாலை
பணிநடிகை , இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1982 முதல் த்ற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விவேக் மெஹ்ரா (தி. 2008)
பிள்ளைகள்மசாபா குப்தா

நீனா குப்தா (Neena Gupta) 1959 ஜூலை 4இல் பிறந்த இந்திய வணிக சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஆவார். கலைப்பட இயக்குனர்களான அரவிந்தன் (இயக்குனர்) மற்றும் சியாம் பெனகல் ஆகியோருடன் பணியாற்றியதால் பெருமளவில் புகழ்பெற்ற நடிகையாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. நீனா 1994இல் "வோ சோக்கிரி" படத்திற்காக துணை நடிகைக்கான தேசியத் திரைப்பட விருது வென்றார். ஸ்ரீமான் ஸ்ரீமதி என்ற தொலைக்காட்சி தொடரில் அவர் ஒரு கௌரவ தோற்றமளித்தார். மேலும், "காம்சோர் காடி கவுன்" என்றழைக்கப்படும் தொலைக்காட்சி வினாடி நிகழ்ச்சியான "தி வீகஸ்ட் லிங்க்" இன் இந்திய பதிப்பை அவர் வழங்கினார்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

புது தில்லியில் பிறந்த இவர் சானவாரிலுள்ள ஆர். என். குப்தா மற்றும் லாரனஸ் பள்ளியில் கல்வி கற்றார்.[4] குப்தா சமஸ்கிருதத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தினை பெற்றுள்ளார். புது தில்லியிலுள்ள ஒரு தேசிய நாடக பாடசாலையில் 1980 களில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர் ஆவார்.

தொழில்[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

காந்தி (1982) போன்ற பல சர்வதேச படங்களில் குப்தா தோன்றியுள்ளார், அத்திரைப்படத்தில் காந்திக்கு மகளாக நடித்துள்ளார் , மேலும், "த டிசீவர்ஸ்" (1988), "மிர்ஸா காலிப்"(1989) "இன் கஸ்டடி" மற்றும் "காட்டன் மேரி" (1999), போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைப்படங்களில் அவரது தோற்றம், குறிப்பாக பங்கஜ் கபூரின் "ஜானே பி தோ யாரோ" என்றப்படத்தில் இவர் நடித்த பாத்திரத்தின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மாதுரி தீட்சிதுடன் "கல்நாயக்" (1993) என்ற படத்தில் அவர் இணைந்து நடித்தார். இந்த படத்தில் பிரபலமான "சோலி கே பீச்சே" பாடலில் அவர் இடம்பெற்றிருந்தார். இவர் பங்காற்றிய "லஜ்வந்தி" மற்றும் "பசார் சீதாரம்" என்ற படதிற்கு 1993 ஆண்டிற்கான ஒரு சிறந்த இயக்குனருக்கான் தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீப காலங்களில் "பதாஉ ஹோ" படத்தில் நடித்ததற்காக அவர் மிகவும் பரவலாக அறியப்பட்டார். மேலும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார். சோனம் கபூர், பிபாசா பாசு, ஆயுஷ்மன் குர்ரனா மற்றும் பலர் போன்ற நட்சத்திரங்களுக்கான தாயாக நடித்துள்ளார்.

தொலைக்காட்சி வாழ்க்கை[தொகு]

தொலைக்காட்சியில் அவரது பெரிய வெற்றியானது 1985 ஆம் ஆண்டில் "காந்தன்"(1986), குல்சாருடன் "மிர்ஸா காளீப்" (1987), (ஒரு தொலைக்காட்சி குறுந்தொடர்), பின்னர் சியாம் பெனகலுடன் "பாரத் ஏக் கோஜ்" (1988) மற்றும் "டார்ட்" (1994 தூர்தர்ஷன் மெட்ரோ), "குமுரா" (1995 தூர்தர்ஷன் மெட்ரோ) , "ஸ்ரீமான் ஸ்ரீமதி" (1995 தூர்தர்ஷன் மெட்ரோ), "சான்ஸ்" (ஸ்டார் பிளஸ்), "சாட் பியர்: சலோனி கா சஃபர்" (2005), "சித்தி" (2003), போன்றவற்றில் அடங்கும். மேலும், இவர் "புனியாத்" என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்துள்ளார். "சான்ஸ்" (1999), "சிஸ்கி" (2000) மற்றும் "க்யூன் ஹோடா ஹாய் பியார்" போன்ற வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் தொடர்பிலிருந்த இவருக்கு அவரால் மசாபா குப்தா என்ற மகளுண்டு. அவர் ஆடை வடிவமைப்பாளாராக உள்ளார்.[5]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_குப்தா&oldid=3713429" இருந்து மீள்விக்கப்பட்டது