நீத்து சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீத்து சந்திரா

தபூ ரத்னானி 2011 நாட்காட்டி வெளியீட்டில் நீத்து சந்திரா
இயற் பெயர் நீத்து சந்திரா
பிறப்பு சூன் 20, 1984 (1984-06-20) (அகவை 39)
பாட்னா, பீகார், இந்தியா
தொழில் நடிகை, வடிவழகி
நடிப்புக் காலம் 2005-நடப்பு

நீத்து சந்திரா (Nitu Chandra, ஜூன் 20, 1984) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னா நகரத்தில், ஜூன் 20, 1984 அன்று பிறந்தார். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார்; பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார்.[1] இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் கருப்பு இடைவார் (பிளாக் பெல்ட்) தகுதி பெற்றவராவார். அவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டில் ஹாங் காங் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 1995 ஆம் ஆண்டில் புது டில்லியில் நடைபெற்ற உலக கோர்ப்பால் எனப்படும் உலக வலைப்பந்தாட்ட போட்டியிலும் கலந்துக் கொண்டார். அவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை (1996) இளம் 16 வயதிலேயே முடித்துவிட்ட்டார்..[2]

ஒரு வியாபாரியான நீத்துவின் தந்தை, ஆரம்பத்தில் இவர் மாடல் தொழிலில் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் விருப்பமின்றி இருந்தார், ஆனால் அவரது தாயார் நீரா இவர் பக்கம் நின்றார். தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஐ.பி. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுதே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். அக்காலகட்டத்தில் பிரபல நிறுவனங்களுக்காக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

அவர் 2005 ஆம் ஆண்டில் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார், முதல் முதலாக கரம் மசாலா என்ற படத்தில் ஸ்வீட்டி என்ற ஒரு விமானப் பணிப்பெண் வேடத்தில் தோன்றினார். 2007 ஆம் ஆண்டில் இவர் மதூர் பண்டார்கர் தயாரித்த "டிராபிக் சிக்னல்", படத்தில் தோன்றினார்.[3] நீத்து சந்திரா ரசியா சாஜன் என்ற வீடியோ தொகுப்பில் ஜுபீன் கர்குடன் இணைந்து இஸ்மாயில் தர்பார் இசை அமைப்பில் மிகவும் நளினமாக நடனம் ஆடியுள்ளார். 2008 ஆம் ஆண்டின் முன்பகுதியில், இவர் நான்கு படங்களில் நடித்தார். அவர் மாதவனுடன் நடித்த "யாவரும் நலம்" என்ற தமிழ் மொழிப் படம் வெற்றி பெற்றது பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது. பின்னர் ராம் கோபால் வர்மாவின் ரன் மற்றும் ஜாக் முந்த்ரவின் அபார்ட்மென்ட் ஆகியவற்றிலும் நடித்தார்.

20 மார்ச் 2008 அன்று, 7 சீஸ் டேக்நோலோஜீஸ் என்ற நிறுவனம், நீத்து சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ஒரு முப்பரிணாம விளையாட்டை உருவாக்கப் போவதாக அறிவித்தது. நீத்து (தி ஏலியன் கில்லர்) என்ற தலைப்புடன் கொண்ட அந்த விளையாட்டில், ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையை அடிப்படையாக கொண்டது; இதில் நீத்து பூமிக்கு எதிராக செயல்படும் வேற்றுலக வாசிகளை அழிக்கும் வேடமேற்றார். நீது சந்திரா ஆசிய அகாடெமி போர் பிலிம் அண்ட் டெலிவிஷனை சார்ந்த சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மன்றம் மற்றும் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஆராய்ச்சி மன்றத்தின் முழுநாள் உறுப்பினர் ஆவார். மாக்சிம் இந்தியா இதழின் ஜனவரி 2009 இதழின் முன்னட்டையில் நீத்துவில் படம் ல் வெளியானது.[4].

கீதாஞ்சலி குழுமத்தை சார்ந்த ஹூப் என்ற தயாரிப்புப் பொருளின் சின்னத் தூதுவராகவும் நீது சந்திரா செயல்படுகிறார். மேலும் இவர் மைசூர் சாண்டல் சோப்பின் வணிகரீதியான விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 விஷ்ணு தெலுங்கு
2005 கரம் மசாலா ஸ்வீட்டி இந்தி
2006 கோதாவரி ராஜி தெலுங்கு
2007 போக்குவரத்து வழிகாட்டி (டிராபிக் சிக்னல்) ராணி இந்தி
2008 ஒன்று இரண்டு முன்று (ஒன் டூ த்ரீ) இன்ஸ்பெக்டர் மாயாவதி சௌதாலா இந்தி
கோடை 2005 கவர்ச்சி நடிகை இந்தி சிறப்புத் தோற்றம்
ஒயே லக்கி! லக்கி ஒயே! சோனல் இந்தி
2009 சத்யமேவ ஜெயதே பசர பாபா தெலுங்கு
யாவரும் நலம் பிரியா மனோகர் தமிழ் அதே நேரத்தில் ஹிந்தியில் 13B என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது
மும்பை கட்டிங் இந்தி
2010 ரன் (சண்டை) யாஸ்மின் ஹுசைன் இந்தி
தீராத விளையாட்டு பிள்ளை தேஜஸ்வினி (தேஜு) தமிழ்
குடியிருப்பு வளாகம் நேஹா இந்தி
பிரச்சனைகள் இல்லை (நோ ப்ரோப்லம்) சோபியா இந்தி
சடியான் இந்தி
2011 யுத்தம் செய் தமிழ் சிறப்புத் தோற்றம்
குச் லவ் ஜெயிசா றியா இந்தி
2013 குசர் பர்சாத் கே பூத் சபீலி இந்தி படப்பிடிப்பில்
ஆதிபகவன் தமிழ்

குறிப்புதவிகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீத்து_சந்திரா&oldid=3753603" இருந்து மீள்விக்கப்பட்டது