நீத்தி மோகன்
நீத்தி மோகன் | |
---|---|
2018இல் மோகன் | |
பிறப்பு | நவம்பர் 18, 1979[1][2] புது தில்லி, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2003 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | நிகார் பாண்டியா (தி. 2019) |
உறவினர்கள் | சக்தி மோகன் (சகோதரி) கிருதி மோகன் (சகோதரி) முக்தி மோகன்(சகோதரி) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | வாய்ப் பாட்டு |
நீத்தி மோகன்( Neeti Mohan) 1979 நவம்பர் 18 அன்று தில்லியில் பிறந்த இந்திய பின்னணி பாடகியாவார். அவர் "சேனல் வி" என்ற தொலைக்காட்சியின் ஒரு ரியாலிட்டி தொடரான "பாப் ஸ்டார்ஸ்"இன் வெற்றியாளர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் நிகழ்ச்சியின் மற்ற வெற்றியாளர்களுடன் இணைந்து "ஆஸ்மா"வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அமித் திரிவேதியின் "பாம்பே வெல்வெட்" (2008) என்ற இசைத்தொகுப்பு ஆல்பத்தில் இவர் பாடிய ஆறு "ஜாஸ்" பாடல்களின் தொகுப்பிற்கு இசை விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு, அவர் "சாவ் ஆஸ்மன்" படத்தில் இடம் பெற்ற "பார் பார் தேக்கோ" (2016) பாடலை பாடியதற்காக இரண்டாவது பிலிம்பேர் விருதிற்கு வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோகன் "தி வாய்ஸ் இந்தியா கிட்ஸ்" ஒன்றாவது பருவத்தில் மற்றும் இரண்டாவது பருவத்தில் பயிற்சியாளராக தோன்றினார். இவரது தொழில் வாழ்க்கையைத் தவிர, அவர் பல்வேறு தொண்டு மற்றும் சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
[தொகு]நீத்தி மோகன் தில்லியில் பிறந்தார்[3] அவரது தந்தை, பிரிஜ் மோகன் ஷர்மா, ஒரு அரசாங்க அதிகாரி மற்றும் அவரது தாயார், குசும், ஒரு இல்லத்தரசி ஆவார்.[4] நீத்தி மோகன் நான்கு சகோதரிகளில் மூத்தவர்; சக்தி மோகன், முக்தி மோகன் மற்றும் கிருதி மோகன்.[5] நீத்து மோகன் கந்தர்வா மஹாவித்யாலயாவில் பாடலைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார்.[6] அந்த நேரத்தில், அவர் நாடக மற்றும் நடனம் ஈடுபட்டு வந்தார்; ஆனால் பாடல் என்பது ஒரு "தீவிர பொழுதுபோக்கு"ஆகும்[5] பின்னர் பிலானியிலுள்ள பிர்லா மாலிகா வித்யாபீடத்திற்கு சென்றார்.
பள்ளி நாட்களில், மோகன் பள்ளி இசைக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் ஐந்து ஆண்டுகளாக டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றார்.[5] நீத்து மோகன் தனது பள்ளியில் பாடல், நடனம், இசைக்குழு மற்றும் நாடக அரங்கில் நிகழும் நிகழ்ச்சிகள் போன்ற பல கூடுதல் பாடத்திட்டங்களில் பங்கேற்றார்.[7] அவர் இந்திய தேசிய கேடட் கார்ப்ஸில் சேர்ந்து பட்டம் பெற்றார்.[7]
குறிப்புகள்
[தொகு]- ↑ Tuli, Aanchal (1 April 2017). "Our house was like a girls' boarding school, says singer Neeti Mohan". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Singh, Anjuri Nayar (13 July 2017). "Neeti Mohan on getting negative comments on her songs: Not here to please everyone". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Sisters cross swords for TRPs". The Times of India. 25 December 2009. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Sisters-cross-swords-for-TRPs/articleshow/5373443.cms. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ =Guha, Kunal (23 November 2014). "Relative value: Fourtified Fame". Mumbai Mirror. http://www.mumbaimirror.com/others/sunday-read/Relative-Value-Fourtified-fame/articleshow/45242614.cms. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ 5.0 5.1 5.2 Vijayakar, Rajiv (3 June 2014). ""I have to become the song" - Neeti Mohan". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
- ↑ =Khurana, Suanshu (6 May 2015). "Neeti Mohan: Raising the Bar". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ 7.0 7.1 "Kuwait: Singers Toshi-Sharib, Neeti Mohan to Rock Indian Carnival 2011". Daijiworld Media. 24 April 2011. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)