நீதி நூல் (வேதநாயகம் பிள்ளை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. பி. 19ம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது நீதி நூல் ஆகும். ஐரோப்பியர் காலத்தில் மேலைநாட்டுத் தாக்கம் அதிகாpத்த போது, தமிழ் மக்களைப் பண்பாட்டுச் சிதைவிலிருந்து காக்கவும் நெறிப்படுத்தவும் நீதிக் கருத்துக்கள் உள்ளடங்கிய இந்நூலை இயற்றினார். செறிவான நீதிக்கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூல் நாற்பத்தைந்து அதிகாரமும் நானூறு செய்யுட்களையும் கொண்டு 1859-ல் வெளியானது. பின்னர் 1860-ல் வெளியானப் பதிப்பில் மேலும் இருநூறு பாடல்களுடன் வெளிவந்தது.

இந்நூல் மனிதனது வாழ்வியலை மூன்று கோணங்களில் கண்டு அதற்கு ஏற்ற வாழ்வியல் கருத்துக்களை இயம்புகின்றது. தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என்ற மூன்று கோணங்களில் அறங்கள் சொல்லப்பட்டாலும், சமுதாயம் பற்றிய சிந்தனையே அதிகம் காணப்படுகின்றது.

எச்செயலையும் செய்வதற்கு பழக்கம் தேவை. பழக்கம் இல்லாமல் எதனையும் எளிதில் செய்ய இயலாது. அறம் செய்வதற்கும் பழக்கம் அவசியம். அவ்வாறில்லாது இறக்கின்ற காலத்தில் அக்குணம் வாய்க்காது என்பதை,

“எத்தொழிலு முற்பழக்க மின்றியெய்தா

தறமென்னு மிணையொன் றில்லா

அத்தொழின்முற் பழக்கமின்றிச் சாங்காலத்

தமையுமோ …………………………….” (பா. எ )

என்ற வாpகளில் விளக்குகின்றார் ஆசிhpயர்.