நீதிக்களஞ்சியம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீதிக்களஞ்சியம் என்னும் இந்நூலை தொகுத்தவர் புலவர் குழந்தைஅவர்கள். இந்நூல் திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, இன்னிலை, அறநெறிச்சாரம், நீதிநெறிவிளக்கம்,வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, நீதிவெண்பா, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, வெற்றிவேற்கை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி வரையில் இருபத்தொரு நீதி நூல்களின் சாரத்தைப் பிழிந்து கல்வி தொடங்கி நிலையாமை வரை எழுபத்தொரு தலைப்புகளில் வாழ்க்கைக்கான நீதியை விளக்குகிறது. எழுபத்தொரு தலைப்புகளில் மேற்சொன்ன இருபத்தொரு நூல்களும் என்ன சொல்கிறது என்பதை எளிதாக கற்க உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்யுளுக்குப் பின்னும் சொற்பொருள் விளக்கம் இலக்கணக் குறிப்பு அணி விளக்கம் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளதால் இது இலக்கணம் கற்கவும் உதவுகிறது. நிதிக்களஞ்சியம் இல்லாத வீட்டிலும் நீதிக்களஞ்சியம் இருக்க வேண்டும் என்ற சொற்றொடர் இதன் சிறப்பை உணர்த்துகிறது.