உள்ளடக்கத்துக்குச் செல்

நீதா லுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதா லுலா (Neeta Lulla) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அலங்கார தகுநய நடையாளர் ஆவார், அவர் 300 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். [1] அவர் 1985 முதல் திருமண ஆடைகளை வடிவமைத்து வருகிறார். நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் நடித்த பாலிவுட் திரைப்படமான தேவதாஸ் (2002 ஹிந்தி திரைப்படம்) உடை வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

நகை வடிவமைப்பாளரான வருணா ஜானி இவரது முதல் பெரிய வாடிக்கையாளராக இருந்தார். அந்த நேரத்தில் ஜானி தனது ஆடை வடிவமைப்பாளர் தொழிலைத் தொடங்கவில்லை. அதன் பிறகு லுலா தென்னிந்தியாவில் பாலிவுட் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் சுபானாவுக்காக வடிவமைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகைகள் சல்மா ஆகா மற்றும் ஸ்ரீதேவிக்காக ஆடைகளை வடிவமைக்கத் துவங்கினார்.

அபிஷேக் பச்சனுடனான ஐஸ்வர்யா ராயின் திருமணத்திற்காக அவர் வடிவமைத்த ஆடை அவரது தொழில் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க படைப்பாகும். அவர் தனது மருதாணி விழாவிற்காக அசுவர்யா ராயின் முத்து பதிக்கப்பட்ட லெஹெங்கா மற்றும் அவரது தென்னிந்திய திருமண விழாவிற்கு கூடுதல் ஆடையை வடிவமைத்தார். வடிவமைப்பாளர் தனக்கு பிடித்த நடிகையாக திவ்ய பாரதியைக் கூறியுள்ளார். நீதா லுலா ஷில்பா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி, சப்னா, சல்மா ஆசாத், இஷா கோபிகர் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோருக்காக வடிவமைத்துள்ளார். இவர் டிம்பி கங்குலிக்கு உடை வடிவமைப்பாளராக இருந்தார். [2]

இவர் 2016 ஆம் ஆண்டில் வெளியானமொகெஞ்சதாரோ திரைப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்ததின் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். [3] இவர் கவுதமி சதகர்ணியுடன் இணைந்து டோலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார். [4]

நீதா லுலா பைத்தானியை உபயோகிப்பதாக அறியப்படுகிறது, இது பல்வேறு வண்ணங்களின் பல நூல்களை இணைத்து, தையல் மற்றும் வெள்ளி நூல்களை இணைத்து உருவாக்கப்ட்டுள்ளது. அவரது குறிப்பிடத்தக்க பைதானி தொகுப்புகளில் ஒன்று பிப்ரவரி 2016 இல் மேக் இன் இந்தியா நிகழ்ச்சிக்காகக் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவர் லெஹங்காக்கள், நீண்ட குர்தாக்கள், மேல் ஆடை, தோதி காற் சட்டை, சரோங் பாவாடை உட்பட பலவிதமான உடைகளைக் காட்சிப்படுத்தினார் - இவை அனைத்தும் பைதானி பாணியின்படி அலங்காரம் செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சேகரிப்பு மற்றும் நிகழ்ச்சியைப் பற்றி, நீதா கருத்து தெரிவித்தார்:

மகாராஷ்டிரா எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இது என் வாழ்நாள் முழுவதும் மற்றும் கலையின் தாய் வீடாகும். மகாராஷ்டிராவின் பாரம்பரியமான பைதானியின் நுணுக்கங்கள், விரிவான தன்மை மற்றும் மாசற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக அதனை நான் தேர்வு செய்துள்ளேன். [5]

2013 ஆம் ஆண்டில், லுலா தனது சொந்த நகரமான மும்பையில் தி விசில் வுட் இன்டர்நேஷனல் நீதா ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் எனும் நிறுவனத்தை துவங்கினார். [6] இந்த நிறுவனம் அலங்காரம், வணிகம் மற்றும் எழிவரி விறபனை படிப்புகளைத் வழங்குகிறது. இந்த பள்ளி தற்போது சுபாஷ் கைக்கு சொந்தமானது, அவர் லுலாவுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. Assomull, Sujata (15 November 2015). "Bollywood favourite, designer Neeta Lulla talks shop while in Dubai". Khaleej Times. http://www.khaleejtimes.com/citytimes/in-the-city/bollywood-favourite-designer-neeta-lulla-talks-shop-while-in-dubai. 
  2. Pinto, Rochelle (22 October 2010). "Neeta Lulla's Bollywood brides". Hindustan Times. 
  3. Varma, Lipika (25 July 2016). "Styling for the era not easy: Neeta Lulla". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/bollywood/250716/styling-for-the-era-not-easy-neeta-lulla.html. 
  4. "Neeta Lulla to work in Tollywood again". Deccan Chronicle. 17 July 2016. https://www.deccanchronicle.com/entertainment/tollywood/170716/neeta-lulla-to-work-in-tollywood-again.html. 
  5. "Make in India Week: Neeta Lulla to exhibit Paithani line". The Indian Express. 13 February 2016. http://indianexpress.com/article/lifestyle/fashion/make-in-india-week-neeta-lulla-to-exhibit-paithani-line/. 
  6. Bureau, Our. "Neeta Lulla, Subhash Ghai to launch fashion school". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதா_லுலா&oldid=3919681" இலிருந்து மீள்விக்கப்பட்டது