நீண்ட காது
தோற்றம்
| நீண்ட காது Long ear | |
|---|---|
| நீண்ட காதுகள் மற்றும் முகச் சமச்சீரற்ற தன்மை கொண்ட சிறுவன் | |
| வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
நீண்ட காது (long ear) என்பது காதுகள் மேலிருந்து கீழ் வரை அசாதாரணமாக நீளமாக இருக்கும் ஒரு நிலையாகும். இந்நிலை மனிதர்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் காணப்படலாம். மேலிருந்து கீழ் வரையான சராசரி வெளிப்புற காது நீளத்திலிருந்து 2 என்ற திட்ட விலக்க மதிப்புக்கு மேல் இருப்பது நீண்ட காது நீளமாக வரையறுக்கப்படுகிறது.[1][2][3]
நீண்ட காது காணப்படும் நிலைகள்:[1]
- கோகென்-கிப்சன் நோய்க்குறி - உடலின் அதிகப்படியான வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒரு அரிய மரபணுக் கோளாறு ஆகும். இது முக அமைப்பில் இயல்பிலிருந்து மாறுபட்ட அம்சங்கள் மற்றும் மாறுபட்ட அளவிலான அறிவுத்திறன் குறைபாடுகளால் அடையாளம் காணப்படுகிறது.
- பிறவி கிளைகோசிலேற்றக் கோளாறு - முன்பு கார்போவைதரேட்டு குறைபாடுள்ள கிளைகோபுரத நோய்க்குறி என்று அழைக்கப்பட்டது. இது வளர்சிதை மாற்றத்தின் அரிய பிறவிக்குரிய கோளாறுகளில் ஒன்றாகும். இதில், உடலின் பல்வேறு திசுக்களில் உள்ள புரதங்கள் மற்றும்/அல்லது கொழுப்புச் சத்துக்களின் கிளைகோசிலேற்ற (சர்க்கரை மூலக்கூறுகள் இணையும் செயல்முறை) குறைபாடுடையதாக அல்லது செயலிழந்ததாக இருக்கும்.
- பவுண்டசு-பங்கா நோய்க்குறி- மரபணு மாற்றங்களால் ஏற்படும் மிகவும் அரிதான ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு. இந்த அரிய மனித நோயானது, வளர்ச்சி தாமதம், சிறிய தலையளவு, சிறிய கீழ்தாடை மற்றும் இயல்பற்ற உடல் மற்றும் முக அமைப்புகள் ஆகியவற்றின் மாறுபட்ட சேர்க்கைகளால் அடையாளம் காணப்படுகிறது.
- சின்செல் போகோமீலியா நோய்க்குறி - கைகால்கள் மற்றும் இடுப்பு எலும்புகள் வளர்ச்சியடையாமல் அல்லது முழுமையாக இல்லாமல் போகும் மிகவும் அரிதான ஒரு மரபணுக் குறைபாடாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Long ear (Concept Id: C1848657)". www.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 2023-12-04.
- ↑ "Ear, Long". elementsofmorphology.nih.gov. Retrieved 2023-12-04.
- ↑ Talbot, Eugene Solomon (1905). Developmental Pathology (in ஆங்கிலம்).