உள்ளடக்கத்துக்குச் செல்

நீட்டா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீட்டா தேவி (Neeta Devi) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கோ கோ வீராங்கனையாவார். இவர் இந்திய மகளிர் தேசிய கோ கோ அணியின் தாக்குதல் வீராங்கனையாக விளையாடுகிறார்.[1] 2025 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் புதுதில்லியில் நடைபெற்ற தொடக்க கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

தேவி இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள கராகல் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்.[2] அவர் தனது பள்ளிப்படிப்பை கராகலில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளியில் முடித்தார், அங்கு கோ கோ விளையாடத் தொடங்கினார்.[3] 2014ஆம் ஆண்டுக்குள் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார், மேலும் 13 முறை தேசிய நிகழ்வுகளில் பங்கேற்றார். தனது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் தேவ் சந்த் தாக்கூரிடமிருந்து விளையாட்டு அடிப்படைகளை கற்றுக்கொண்டார்.[2] அவர் லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் தனது முதுநிலைப் பட்டத்தை படித்து வருகிறார்.[3]

தொழில்

[தொகு]

ஜனவரி 2025 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் புதுதில்லியில் நடந்த முதல் கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் தேவி ஒரு பகுதியாக இருந்தார்.[4] இந்திய அணி குழு கட்டங்களில் தென் கொரியா, ஈரான் மற்றும் மலேசியா அணிகளை வென்றது. காலிறுதிப் போட்டியில் வங்காள தேசத்தையும் ,அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும் தோற்கடித்தது. இந்திய அணியினர் இறுதிப் போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kho Kho Federation of India (KKFI) - KKFI Official Website". Kho Kho Federation (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-10.
  2. 2.0 2.1 Singh, Krishan (17 January 2025). "Kullu: भारत की जीत में चमकीं हिमाचल की नीता, खो-खो वर्ल्ड कप में जीते दो मुकाबले". Amar Ujala (in இந்தி). Retrieved 2025-03-13.
  3. 3.0 3.1 Bharat, E. T. V. (2025-01-20). "खो-खो वर्ल्ड कप में हिमाचल की इस महिला खिलाड़ी ने लिया भाग, प्रदेश में सुविधाओं को लेकर कही ये बात". ETV Bharat News (in இந்தி). Retrieved 2025-03-13.
  4. IANS (2025-01-15). "Kho Kho World Cup: Indian women make history with 157-point rout of South Korea". The Statesman (in ஆங்கிலம்). Retrieved 2025-03-08.
  5. "Indian Women create history at Kho Kho World Cup 2025 with commanding victory over rivals Nepal to secure coveted trophy". The Tribune (in ஆங்கிலம்). Retrieved 2025-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டா_தேவி&oldid=4231262" இலிருந்து மீள்விக்கப்பட்டது