நீட்டலளவை
நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]
மெட்ரிக்கு முறை
[தொகு]எஸ்ஐ (SI)
[தொகு]SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது 1⁄299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:
பெருக்கங்கள் | பெயர் | டெக்கா- | எக்டோ- | கிலோ- | மெகா- | கிகா- | டெரா- | பெட்டா- | எக்சா- | செட்டா- | யொட்டா- | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முன்னொட்டு | da | h | k | M | G | T | P | E | Z | Y | ||
காரணி | 100 | 101 | 102 | 103 | 106 | 109 | 1012 | 1015 | 1018 | 1021 | 1024 | |
பின்னங்கள் | பெயர் | டெசி- | சென்டி- | மில்லி- | மைக்ரோ- | நேனோ- | பீக்கோ- | பெம்டோ- | அட்டோ- | செப்டோ- | யொக்டோ- | |
முன்னொட்டு | d | c | m | μ | n | p | f | a | z | y | ||
காரணி | 100 | 10−1 | 10−2 | 10−3 | 10−6 | 10−9 | 10−12 | 10−15 | 10−18 | 10−21 | 10−24 |
எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.
SI-அல்லாதவை
[தொகு]CGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.
SI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:
- பெர்மி (fm) (= SI இல் 1 பெர்மி (அலகு) in SI units)
- ஆங்ஸ்டிராம் (Å) (SI இல் = 100 பீக்கோமீட்டர்கள்)
- மைக்குரோன் (SI இல் = 1 மைக்ரோமீட்டர்)
இம்பீரியல்/அமெரிக்க அலகு
[தொகு]இம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.[2][5]
பொதுவான இம்பீரியல் அலகுகள்:[6]
- அங்குலம் (2.54 செமீ)
- அடி (12 அங்குலம், 0.3048 மீ)
- யார் (நீள அலகு) (3 அடி, 0.9144 மீ)
- மைல் (5280 அடி, 1609.344 மீ)
- (நிலம்) லீக் (3 மைல்கள்)
கடல்-சார்ந்த
[தொகு]மாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:
வான்வெளி
[தொகு]வானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.
நில அளவை
[தொகு]ஐக்கிய அமெரிக்காவில் நில அளவையாளர்கள்:
- சங்கிலி (~20.1மீ)
- ரொட் (rod) அல்லது பேர்ச் (perch) (~5 மீ)
ஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.
அறிவியல்
[தொகு]வானியல்
[தொகு]வானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:
- புவி ஆரை () (≈6,371 கிமீ[7])
- வானியல் அலகு (au அல்லது ua) (2012 வரைவின் படி, 149,597,870,700 மீ[8]) அண்ணளவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்.
- ஒளியாண்டு (ly) (≈9,460,730,472,580.8 கிமீ) ஒரு யூலியன் ஆண்டில் வெற்றிடத்தில் ஒளி செல்லும் தூரம்.[9]
- புடைநொடி (pc) (≈30,856,775,814,671.9 கிமீ அல்லது ~3.26156 ly)
- ஹபிள் நீளம் (13.8 பில்லியன் ஒளியாண்டு/306593922 புடைநொடி)
இயற்பியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cardarelli, François (2003). Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins. Springer. ISBN 9781852336820.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ 2.0 2.1 Hinkelman, Edward G.; Sibylla Putzi (2005). Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community. World Trade Press. p. 245. ISBN 9781885073723.
- ↑ Judson, Lewis Van Hagen (1960). Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233. U.S. Department of Commerce, National Bureau of Standards. pp. 3–4. Retrieved 16 October 2012.
- ↑ "17th General Conference on Weights and Measures (1983), Resolution 1". Retrieved 2012-09-19.
- ↑ Donald Fenna (26 October 2002). A dictionary of weights, measures, and units. Oxford University Press. pp. 130–1. ISBN 978-0-19-860522-5. Retrieved 8 January 2012.
- ↑ Cardarelli 2003, ப. 29–30
- ↑ Moritz, H. (March 2000). "Geodetic Reference System 1980". Journal of Geodesy 74 (1): 128–133. doi:10.1007/s001900050278. Bibcode: 2000JGeod..74..128.. http://www.springerlink.com/content/0bgccvjj5bedgdfu/about/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Geoff Brumfiel (14 செப். 2012). "The astronomical unit gets fixed: Earth–Sun distance changes from slippery equation to single number". Retrieved 14 செப். 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ The IAU and astronomical units, International Astronomical Union, retrieved 2008-07-05
- ↑ "atomic unit of length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. Retrieved 15 October 2012.
- ↑ "natural unit of length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. Retrieved 15 October 2012.
- ↑ "Planck length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. Retrieved 15 October 2012.